• English
  • Login / Register

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ: பாயும் புலி ஆக ஜாகுவார் F-டைப் வருகிறது

published on பிப்ரவரி 05, 2016 11:10 am by bala subramaniam for ஜாகுவார் எப் டைப் 2013-2020

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஜாகுவார் F-டைப்-பை காட்சிக்கு வைக்க கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்போவில் சமீபகாலத்தை சேர்ந்த ஜாகுவார் XF மற்றும் F-பேஸ் SUV ஆகியவை உடன் இந்த F-டைப் கூபே-யும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஜாகுவார் F-டைப் கூபே மற்றும் கன்வெர்டிபிள் என்ற இரு வடிவங்களில் கிடைக்கிறது. இந்நிலையில் F-டைப் கூபே, இரு என்ஜின் தேர்வுகளுடன் 4 வகைகளிலும், F-டைப் கன்வெர்டிபிள் 2 என்ஜின் தேர்வுகளுடன் கூடிய 2 வகைகளிலும் கிடைக்கிறது.

F-டைப் கூபேயின் துவக்க வகையை, ஒரு 3.0-லிட்டர் V6 பெட்ரோல் என்ஜின் இயக்கி, அதன்மூலம் 6500 rpm-ல் 340 hp-யும், 3500-க்கும் 5000 rpm-க்கும் இடைப்பட்ட நிலையில் 450 Nm என்ற ஒரு அதிகபட்ச முடுக்குவிசையும் அளிக்கிறது. F-டைப் S கூபேயின் ஒரு அதிக சக்திவாய்ந்த பதிப்பிலும் அதே என்ஜின் மூலம் 380 hp ஆற்றலும், 460 Nm என்ற ஒரு அதிகபட்ச முடுக்குவிசையும் அளிக்கிறது. இதே என்ஜின் தான் F-டைப் S கன்வெர்டிபிள் காரிலும் பொருத்தப்பட்டுள்ளது.

F-டைப் R கூபே, F-டைப் R AWD கூபே மற்றும் F-டைப் R கன்வெர்டிபிள் ஆகியவற்றிற்கு, ஒரு 5.0-லிட்டர் V8 என்ஜின் ஆற்றலை அளிக்கிறது. இந்த V8 மூலம் 6500 rpm-ல் 550 hp என்ற ஒரு அதிகபட்ச ஆற்றலையும், 3500 rpm-ல் 680 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையும் வெளியிடுகிறது. மேற்கண்ட எல்லா என்ஜின்களும், ஒரு 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு கிடைக்கிறது.

மேலும் வாசிக்க ஜாகுவார் F – பேஸ் - இங்கிலாந்து நாட்டு சொகுசு ரதத்தின் பிரத்தியேக புகைப்பட கேலரி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Jaguar எப் டைப் 2013-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கூபே சார்ஸ்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience