2015 மஹேந்திரா தார்: என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்?
published on ஜூலை 24, 2015 12:27 pm by raunak for மஹிந்திரா தார் 2015-2019
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:கடந்த 2010ல் முதன் முதலாக வெளியிடப்பட்ட மஹேந்திரா தார் வாகனத்தின் புதுப்பிக்கப்பட்ட மற்றும் மிகவும் விரிவான மாடலை, நாடு முழுவதும் மஹேந்திரா நிறுவனம் நாளை வெளியிடுகிறது. இது ஒரு லைப்ஸ்டைல் நிச்சி தயாரிப்பு என்பதால், அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.
எனவே புதுப்பிக்கப்பட்ட 2015 தார் வாகனத்தில் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம் என்பதை காண்போம்.
என்னென்ன எதிர்பார்க்கலாம்
இந்த ஆண்டின் துவக்கத்தில், தார் வாகனத்தின் பேஸ்லிப்ட் (மாற்றங்கள்) வெளிப்புற தோற்றத்தில் சிறிய அளவில் பார்க்க முடிந்தது. இதைத்தவிர முன்புற பம்பரிலும் உலோக மற்றும் பிளாஸ்டிக் கலவையிலான மாற்றத்தை எதிர் பார்க்கலாம். பின்புற கேனோபியில் நேர்த்தியான வளைவையும கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாரில் உள்ள பின்புற விளக்குகளில் மாற்றமில்லை என்றாலும், முன்புற பெசியாவுடன் முன்புற மற்றும் பின்புற விளக்குகளில் நுட்பமான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
வேவு பார்க்கப்பட்ட படங்களின் மூலம், கேபின் அமைப்பில் மாற்றங்களை நீங்கள் காணலாம். முன்னோடியான பொலேரோவின் டாஸ்போர்டு அமைப்பை இறுதியில் ஒரு வழியாக மஹேந்திரா இந்த தார் மாடலில் நீக்கிவிட்டு புதியமுறையில் வடிவமைத்திருக்கிறது.
வேவுப் பார்க்கப்பட்ட வாகன சிறப்பு அம்சங்களில், கிரோம் ஹைலைட் உடன் கூடிய கருப்பு மற்றும் வெளிர் மஞ்சள் நிறக் கலவையில் இரட்டை வண்ணத்தில் புதுபொலிவுடன் கூடிய டாஸ்போர்ட்டை காண முடிகிறது.
இந்த டாஸ்போர்ட்டை பார்த்தால், ஜீப் விராங்கலரின் கேபினை தழுவி அமைக்கப்பட்டதாக தோன்றுகிறது. ஏசி லெளவர்கள், ஹெச்விஏசி கண்ட்ரோல்கள் மற்றும் சென்ட்ரல் கன்சோல் டிசைன் ஆகியவை கண்கூடாக தெரிகிறது.
இதை தவிர, புதிய த்ரி-பாட் இன்ஸ்ட்ருமென்டெஷன் கிளஸ்டர் மற்றும் புதிய பொலேரோவை ஒத்த ஸ்டீரிங் வீல் உள்ளது.
இயந்திரவியல் தொடர்பாக, எஸ்யுவி அப்படியே இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2.5 லிட்டர் சிஆர்டிஇ மற்றும் 2.6 லிட்டர் டிஎல் ஆகிய தற்போதைய இன்ஜின் வசதிகள் 2015 தாரில் இருக்கும். ஸ்கார்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 ஆகியவற்றை இயக்கும் 2.2 லிட்டர் எம்ஹெச்டபில்யூகே, இதில் இடம் பெற வாய்ப்பு மிகவும் குறைவு.