2015 போர்ட் பீகோ: இதுவரை நாம் தெரிந்துக் கொண்டது என்ன ?
போர்டு ஃபிகோ 2015-2019 க்காக செப் 21, 2015 04:33 pm அன்று raunak ஆல் திருத்தம் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
போர்ட் இந்தியா நிறுவனம் தனது இருபது வருட இந்திய பயணத்தில் தனது மிகப் பிரபலமான பிகோ கார்களின் இரண்டாம் பதிப்பை அடுத்த வாரம் வெளியிடுகிறது.
ஜெய்பூர்: புதிய பீகோ 2015 கார் போர்ட் நிறுவனத்தின் மிகப் பிரபலமான 2010 ஆம் ஆண்டு அறிமுகமான முதல் பீகோ கார்களுக்கு மாற்றாக அடுத்த வாரம் அறிமுகமாக உள்ளது. 5 வருடத்திற்கு முன்னாள் போர்ட் நிறுவனத்தை இந்திய வாகன சந்தையில் முதல் இடம் பெற வைத்த இந்த பீகோ கார்கள் இன்றளவும் தரமான வாகனம் என்ற அசைக்க முடியா பெயரை பெற்று விளங்கி வருகிறது. 2011 ஆம் ஆண்டு அந்த ஆண்டின் சிறந்த கார் என்ற விருதையும் அப்போதைய பீகோ பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இத்தகைய பிரபலமான ஒரு காருக்கு சரியான மாற்று ஒன்று தருவது என்பது உண்மையில் சவாலான ஒரு விஷயமாகும். . சமீபத்திய போர்ட் நிறுவனத்தின் அறிமுகமான பீகோ ஆஸ்பயர் கார்களில் இருந்து தான் பெரும்பான்மையான அம்சங்கள் இந்த 2015 பீகோ கார்களுக்கும் பெறப்பட்டுள்ளன. ஆகவே ஆஸ்பயர் கார்களின் அம்சங்களை மனதில் கொண்டு, இதுவரை 2015 பீகோ கார்களை பற்றி நாமறிந்த செய்திகளையும் தொகுத்து அறிமுகமாக உள்ள புதிய 2015 பீகோ கார்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்துள்ளோம். அவற்றை கீழே காணலாம்