10 வது தலைமுறை ஹோண்டா சிவிக் கார்கள் புதிய 1.0 லிட்டர் டர்போ விடெக் என்ஜின் பொருத்தப்பட்டு வெளிவர உள்ளது.
published on அக்டோபர் 28, 2015 12:45 pm by raunak for ஹோண்டா சிவிக்
- 13 Views
- 6 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
நாட்டில் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட என்ஜின் மீதான மோகம் பெருகி வரும் நிலையில் இந்த 1.0 லிட்டர் டர்போ சார்ஜ் செய்த என்ஜினை இந்தியாவில் ஹோண்டா அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹோண்டா நிறுவனம் தனது அடுத்த தலைமுறை (அதாவது 10வது தலைமுறை ) சிவிக் செடான் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த கார்கள் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட சிறிய VTEC 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என இரண்டு வகை ஆப்ஷன்களுடன் வெளிவர உள்ளது. சிவிக் கார்களின் இந்த 10வது தலைமுறையின் கான்செப்ட் ( ஹேட்ச்பேக் அவதாரம் ) இந்த வருட துவக்கத்தில் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அதே போல் உற்பத்திக்கு தயாராக உள்ள 10வது தலைமுறை சிவிக் செடான் (பாஸ்ட்பேக் டிஸைன்) கார்களைப் பற்றிய தகவல்களும் கடந்த மாதம் அமெரிக்காவில் தான் வெளியிடப்பட்டது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு ஹேட்ச்பேக் மற்று செடான் வகை சிவிக் கார்களும் ஐரோப்பிய சந்தையில் 2017 ஆம் ஆண்டு டர்போ சார்ஜ் செய்யப்பட்ட சிறிய VTEC 1.0 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் என இரண்டு வகை ஆப்ஷன்களுடன் வெளியிடப்படும் என்று தெரியவருகிறது. இந்தியாவை பொறுத்தவரை இந்த சிவிக் கார்கள் மறு அறிமுகம் செய்யப்படுவது பற்றிய எந்த வித தகவலும் வெளியிடப்படவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் இந்த கார்களின் விற்பனை நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம். இருந்தாலும் இந்த சிவிக் கார்களுக்கு கணிசமான ரசிகர்கள் இருக்கவே செய்கின்றனர். பயன்படுத்தப்பட்ட கார்கள் ( யூஸ்டு கார்ஸ்) சந்தையில் சிவிக் கார்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதில் இருந்து இதை நாம் அறியலாம்.
தவற விடாதீர்கள் : ஹோண்டா சிஆர் - வி புகைப்பட தொகுப்பு - ஜப்பானில் இருந்து பிரத்தியேகமாக
ஹோண்டா நிறுவனம் தனது வரலாற்றில் முதல் முறையாக டர்போ சார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜினை 2015 9வது சிவிக் டைப் -ஆர் கார்களில் அறிமுகப்படுத்தியது. அந்த என்ஜின் 310 PS உற்பத்தி திறன் கொண்ட 2.0 லிட்டர் டர்போ VTEC எஞ்சினாகும். மேலும் ஐரோப்பிய சந்தையில் 2017 ஆம் ஆண்டு அறிமுகமாக உள்ள சிவிக் கார்களுக்கான இஞ்சின் விவரங்களை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. இருந்தாலும் 2015 9வது தலைமுறை சிவிக் டைப் - ஆர் கார்களில் குறைந்த இனர்ஷியா மொமென்ட் டர்போ சார்ஜர்ஸ் மற்றும் டைரக்ட் இன்ஜெக்க்ஷன் தொழில்நுட்பம் ( புழக்கத்தில் உள்ள மற்ற டர்போ பெட்ரோல் எஞ்சின்கள் போலவே ) கொண்ட 2.0 லிட்டர் மோட்டார் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பரிந்துரைக்கப்படுகிறது : ஹோண்டா 10வது தலைமுறை சிவிக் செடான் கார்களின் தகவல்களை வெளியிட்டது
0 out of 0 found this helpful