- ஆல்
- வெளி அமைப்பு
- உள்ளமைப்பு
- Ferrari Portofino
- Ferrari Roma
- Ferrari 812
- Ferrari F8 Tributo
- Ferrari SF90 Stradale
பெரரி செய்தி & விமர்சனங்கள்
- சமீபத்தில் செய்திகள்
- ரூ.3.88 கோடியில், ஃபெராரி 488 GTB அறிமுகம்
அதிகமாக பேசப்பட்ட 488 GTB-யை, ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.3.88 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த 488, பிரபலமான 458 இட்டாலியா-வின் பின்வாரிசு என்பதோடு, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட காலிஃபோர்னியா T தயாரிப்பில், ஃபெராரியின் இரண்டாவது டர்போசார்ஜ்டை கொண்டுள்ளது.
- ஃபெராரி GTC4 லஸ்சோ கார்களுக்கு ஒரு ஹலோ சொல்லுங்கள் !; புகைப்பட தொகுப்பு உள்ளே
பெராரி நிறுவனம் அறிமுகமாக உள்ள தங்களது சொகுசு செடான் காரின் பெயரை ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. . GTC4 லஸ்சோ ( ஆம் , எளிதில் மறக்க முடியாத பெயர் தான் ) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கார்கள் பெர்ராரி நிறுவனத்தின் FF கார்களின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த இத்தாலிய கார் தயாரிப்பாளர்கள் தங்களது சமீபத்திய தொழில்நுட்ப புதுமைகளை இந்த அற்புதமான காரில் இணைத்துள்ளனர். ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ள இந்த கார்களின் புகைப்படங்கள் , காண்பவர்களை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. எங்களது மேலான வாசகர்களாகிய உங்களின் மனங்களை மயக்கும் வண்ணம் இந்த அற்புதமான காரின் புகைப்படங்களை உங்களுக்கென பிரத்தியேகமாக தொக்ஹு வழங்கி உள்ளோம். கண்டு மகிழுங்கள் !
- ஃபியட் கிரைஸ்லரிடம் இருந்து பெர்ராரி அதிகாரபூர்வமாக பிரிகிறது
தனது பொது விடுப்புகளின் துவக்கத்தை தொடர்ந்து, இப்போது பெர்ராரி தனது தாய் நிறுவனமான (பெரேன்ட் கம்பெனி) ஃபியட் கிரைஸ்லர் ஆட்டோமொபைல்ஸிடம் (FCA) இருந்து அதிகாரபூர்வமாக பிரிகிறது. இந்த பிரிவின் ஒரு பகுதியாக, FCA பங்குத்தாரர்களில், 10 ஃபியட் கிரைஸ்லர் பங்குகளை சொந்தமாக வைத்துள்ளவர்களுக்கு, ஒரு பெர்ராரி பங்கு வழங்கப்படும்.
- பெர்ராரி நிறுவனத்தின் புதிய அவுட்லெட் டிசம்பர் 1 ஆம் தேதி மும்பையில் துவக்கப்படுகிறது
பெர்ராரி, வாகன உலகில் உயர்ரக சொகுசு கார்கள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக தலை சிறந்து விளங்குகிறது. இப்போது இந்தியாவில் மறுபிரவேசம் செய்துள்ள இந்த நிறுவனம் , தங்களது கார்களை வாங்க துடிக்கும் ஏராளமான வாடிக்கையாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. டெல்லியில் மட்டும் இரண்டு விற்பனை மையங்களை (அவுட்லெட் ) இயக்கி வந்த பெர்ராரி , இப்போது தனது இந்திய நெட்வொர்கை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து , அதன் தொடர்ச்சியாக மும்பையிலும் வரும் 1 ஆம் தேதி ஒரு அவுட்லெட்டை துவக்க முடிவு செய்துள்ளது. முன்பு லேண்ட் ரோவர் ஷோரூமாக செயல்பட்டு வந்த பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்த புதிய பெர்ராரி ஷோரூம் தொடங்கப்படுகிறது. 3,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஷோரூமில் இந்தியாவில் கிடைக்கும் அனைத்து வகையான பெர்ராரி கார்களும் காட்சிக்கு வைக்கப்படும். பெர்ராரி நிறுவனத்தின் மும்பை விநியோகஸ்தர்களான நவ்நீத் மோட்டார்ஸ் இந்த பாந்த்ரா குர்லா வளாகத்தின் உரிமையாளர்களான வாத்வா குழுமத்துடன் குத்தகை ஒப்பந்தம் ( லீஸ் காண்ட்ரேக்ட் ) செய்துக்கொண்டுள்ளனர்.
- பெராரி கலிபோர்னியா டி கார்கள் ரூ.3.45 கோடிக்கு அறிமுகப்படுத்தப் பட்டது.
இந்திய சூப்பர் கார்களின் வரிசையில் புதிதாக பெராரி கலிபோர்னியா டி கார்கள் ரூ.3.45 கோடி( எக்ஸ் - ஷோரூம், புது டெல்லி) விலையில் அறிமுகபடுதப்பட்டுள்ளது. மேல் புற கூரையை விருப்பதிற்கு ஏற்ப பொருத்திக்கொள்ளவோ அல்லது கழற்றி விடவோ முடியும். அசுர சக்தியுடனும் அற்புத வடிவமைப்புடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்கள் நிச்சயம் வாடிக்கையாளர் மனங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.