- ஆல்
- வெளி அமைப்பு
- உள்ளமைப்பு
- Lamborghini Urus
- Lamborghini Aventador
- Lamborghini Huracan EVO
லாம்போர்கினி செய்தி & விமர்சனங்கள்
- சமீபத்தில் செய்திகள்
- ஹூண்டாயின் ஆடம்பர பிராண்ட் ஆன ஜெனிசிஸை வழிநடத்த, லம்போர்கினியின் முன்னாள் நிர்வாகி மேன்ஃப்ரேட் ஃபிட்ஸ்ஜிரால்டு நியமனம்
வரும் 2016 ஜனவரி மாதம் முதல், தனது ஆடம்பர பிராண்ட் ஆன ஜெனிசிஸை வழிநடத்த, லம்போர்கினி நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான மேன்ஃப்ரேட் ஃபிட்ஸ்ஜிரால்ட்டை, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் நியமித்துள்ளது.
- லம்போற்கினி ஹுரகன் மாடலில் மேலும் புதிய வேரியண்ட்கள்
லம்போற்கினி நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் கார் பிரிவில், சமீபத்திய அறிமுகமான லம்போற்கினி ஹுரகன் மாடலில், குறைந்தது 5 வேரியண்ட்கள் வெளியிடப்படும் என்று தெரிகிறது. ஆட்டோமொபிலி லம்போற்கினி நிறுவனத்தின் தலைவர் மற்றும் CEO –வான திரு. ஸ்டிஃபன் விங்கெல்மன், இந்த செய்தியை அதிகாரபூர்வமாக அறிவித்தார். இப்போது வரை, 4 விதமான ஹுரகன் வேரியண்ட்கள் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது, இந்நிறுவனம் எடை குறைவான, கூடுதல் வேகத்துடன் ஓடக்கூடிய புதிய வேரியண்ட்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஆட்டோமொபிலி லம்போற்கினியின் CEO பதவியில் உள்ள ஸ்டிஃபன் விங்கெல்மன்னுக்கு பதிலாக, கடந்த வருடம் ஆடி நிறுவனத்தில் உறுப்பினராக இணைந்த, ‘ஃபெர்ராரி ஃபார்முலா ஒன்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஸ்டீஃபான்னோ டொமேனிகளி விரைவில் பதவி ஏற்பார் என்று தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
- லம்போர்கினி உருஸ் SUV காரில் 4.0 லிட்டர் V8 டிவின் டர்போ இஞ்ஜின் பொருத்தப்படும்
லம்போர்கினி நிறுவனம் அடுத்து அறிமுகப்படுத்த உள்ள புதிய SUV காரான லம்போர்கினி உருஸ் காரில், 4.0 லிட்டர் V8 டிவின் டர்போ இஞ்ஜின் பொறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. இது வரை, லம்போற்கினி கார்கள் நேச்சுரலி இன்ஸ்பிரிடெட் V10 மற்றும் V12 இஞ்ஜின்கள் மட்டுமே பொருத்தப்பட்டு வெளிவந்தன. தற்போது, முதல் முறையாக டர்போ சார்ஜிங்க் இஞ்ஜின் பொருத்தப்பட்டு வரப்போகிறது என்பது மகிழ்ச்சியான செய்தியாகும். Autocar –ருக்கு லம்போர்கினியின் சீஃப் எக்ஸிக்யூடிவ்வான திரு. ஸ்டிஃபன் விங்கேல்மேன் மற்றும் R&D தலைவரான திரு. மாரிசியோ ரெஜியானி ஆகியோர் கொடுத்த பேட்டியில், இந்த செய்தியை அதிகாரபூர்வமாக உறுதி செய்தனர்.
- லம்போர்கினி ஹுராகேன் LP 580-2 RWD வகை வெளியிடப்பட்டது
ஆடியில் இருந்து பெறப்பட்ட ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தினால், லம்போர்கினி நிறுவனம் சர்வதேச அளவிலான விமர்சனத்திற்கு பாத்திரவானாக மாறியுள்ளது. இந்த ஆற்றல் மிகுந்த வாகனத்தை கட்டுப்படுத்த முயலும் போது ஓட்டுநர்களுக்கு இவை மகிழ்ச்சியான அனுபவத்தை அளிக்கும் என்பதால், இந்த கார்களின் மிகவும் கவர்ச்சிகரமான காரியங்களில் ஒன்றான USP-யில் சமரசம் செய்யப்பட்டுள்ளது என்று இந்த சீறியெழும் காளையை சின்னமாக கொண்டுள்ள பிராண்டின் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இதோடு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஹுராகேனின் வடிவமைப்பில் மிகவும் நுட்பமாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், இந்நிறுவனத்தின் பாரம்பரியமான பின்அப் போஸ்டர் தோற்றத்தை பாதித்தது. இந்நிலையில் இத்தாலி நாட்டு வாகன தயாரிப்பாளரான இந்நிறுவனம், இது போன்ற பிரச்சனைகளை குறித்து பேசி நேரத்தை வீணடிக்காமல், முதல் முறையாக இது போன்ற முயற்சியாக, லம்போர்கினி ஹுராகேன் LP 580-2 RWD சூப்பர் காரை அறிமுகம் செய்கிறது. இந்த காரின் பின்புறத்தின் அழகிற்காக, AWD சிஸ்டத்திற்கு பதிலாக, RWD கன்ஃபிகரேஷன் பொருத்தப்பட்டுள்ளது.
- லம்போர்கினி ஹரகேன் வோர்ஸ்டீனர் நோவாரா பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது !
எப்போதுமே அட்டகாசமான வடிவமைப்டன் தனது கார்களை உருவாக்கும் இத்தாலி நாட்டு கார் தயாரிப்பாளரான லம்போர்கினியின் சிறப்பை உடைக்கும் விதத்தில் மிக சாதரணமான வடிவமைப்பு தத்துவத்தை பின்பற்றி உருவாக்கப்பட்ட லம்போர்கினி ஹரகேன் உலக அளவில் கடும் விமர்சனங்களை சந்தித்தது. அந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த "ரேஜிங் புல்" ப்ரேன்ட், வோர்ஸ்டீனர் என்ற பிரபல கார்பன் - அடிப்படை ஏரோடைனமிக்ஸ் மற்றும் சொகுசு கார்களுக்கான சக்கரங்கள் வடிவமைப்பு மற்றும் ட்யூநிங் நிறுவனம் லம்போர்கினி ஹரகேன் கார்களுக்காக நோவாரா ஏரோ ப்ரொக்ரேம் ஒன்றை வெளியிட்டுள்ளது. லம்போர்கினியை தவிர ஐரோப்பிய கார் தயாரிப்பாளர்களான மெக்லாரென், BMW,பென்ட்லி, பெராரி மற்றும் இன்னும் பிற அதீத சொகுசு வாகனங்களின் வடிவமைப்பில் அந்தந்த நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. கலிபோர்னியாவை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் இந்த நிறுவனம் தற்போது லாஸ்வேகாஸ், நெவேடாவில் நடந்து வரும் 2015 SEMA மோட்டார் ஷோவில் இந்த நோவாரா ஏரோ ப்ரொக்ரேம் காட்சிக்கு வழங்கப்பட்டது.