ரூ.3.88 கோடியில், ஃபெராரி 488 GTB அறிமுகம்
பெரரி 488 ஜிடிபி க்காக பிப்ரவரி 18, 2016 10:17 am அன்று akshit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 24 Views
- ஒரு கருத்தை எழுதுக
அதிகமாக பேசப்பட்ட 488 GTB-யை, ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரூ.3.88 கோடி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த 488, பிரபலமான 458 இட்டாலியா-வின் பின்வாரிசு என்பதோடு, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட காலிஃபோர்னியா T தயாரிப்பில், ஃபெராரியின் இரண்டாவது டர்போசார்ஜ்டை கொண்டுள்ளது.
இந்த 488-க்கு ஆற்றலை அளிக்கும் ஒரு இரட்டை-டர்போசார்ஜ்டு 3.9-லிட்டர் V8 என்ஜின் மூலம் மொத்தம் 661 குதிரை சக்திகள் பெறப்படுகிறது. இது பிரபலமான 458 அளிக்கும் 99bhp-யை விட அதிகமாகவும், லிட்டருக்கு 172 bhp என்பதற்கு மாற்றாகவும் அமைகிறது. இந்த சக்திவாய்ந்த என்ஜினில் இருந்து வெளியிடப்படும் ஆற்றல், 458-யிடம் இருந்து பெறப்பட்டு புதுப்பிக்கப்பட்ட 7-ஸ்பீடு இரட்டை கிளெச் கியர்பாக்ஸின் வழியாக வெளியிடப்படுகிறது. மேலும் இதில் ஒரு மாறுப்பட்ட முடுக்குவிசை நிர்வாக அமைப்பு (வேரியபிள் டார்க் மேனேஜ்மெண்ட் சிஸ்டம்) மூலம் அதற்கு நியமிக்கப்பட்டுள்ள அளவில் நேர்கோட்டிலும், சக்தி வாய்ந்ததாகவும் இயங்கி, 760 Nm என்ற அதிகபட்ச முடுக்குவிசையை அளிக்கிறது. வெறும் காராக 1370 கிலோ எடைக் கொண்ட இந்த 488 GTB, மணிக்கு 0-வில் இருந்து 200 கி.மீ வேகத்தை அடைய, நம்பமுடியாத அளவான 8.3 வினாடிகளை மட்டுமே எடுத்து கொள்கிறது. அதே நேரத்தில் மணிக்கு 0-வில் இருந்து 100 கி.மீ. வேகத்தை எட்ட 3 வினாடிகள் இதற்கு போதுமானது.
இதன் முன்னோடியின் மீது அதிக அழுத்தத்தை அளிக்கும் வகையில், சில சிறப்பு அம்சங்களை பெற்றுள்ள 488, அபாரமான 50 சதவீத முன்னேற்றத்தை கொண்டுள்ளது. இதில், முன்பக்கத்தின் F1-யை தழுவிய இரட்டை ஸ்பாய்லர், ஏரோ பில்லர்களுடன் இணைந்து, காற்றை அதிக வேகமாகவும், திறமையாகவும் திசைத் திருப்பும் அம்சம் போன்றவை உட்படுகின்றன. இதில் மிகவும் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதன் ஆக்டிவ் ஏரோடைனாமிக்ஸில் கூடுதலாக பின்பகுதியின் வழியாக ஒரு ‘பிளோ’ ரேர் ஸ்பாய்லரை கொண்டு, வார்டெக்ஸ் ஜெனரேட்டர்கள் அம்சத்தின் மூலம் அண்டர்பாடி மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க : 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட 5 வேகமான கார்கள்