பெராரி கலிபோர்னியா டி கார்கள் ரூ.3.45 கோடிக்கு அறிமுகப்படுத்தப் பட்டது.
published on ஆகஸ்ட் 26, 2015 03:13 pm by அபிஜித் for பெரரி கலிபோர்னியா
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
மும்பை:
இந்திய சூப்பர் கார்களின் வரிசையில் புதிதாக பெராரி கலிபோர்னியா டி கார்கள் ரூ.3.45 கோடி( எக்ஸ் - ஷோரூம், புது டெல்லி) விலையில் அறிமுகபடுதப்பட்டுள்ளது. மேல் புற கூரையை விருப்பதிற்கு ஏற்ப பொருத்திக்கொள்ளவோ அல்லது கழற்றி விடவோ முடியும். அசுர சக்தியுடனும் அற்புத வடிவமைப்புடனும் உருவாக்கப்பட்டுள்ள இந்த கார்கள் நிச்சயம் வாடிக்கையாளர் மனங்களை கொள்ளை கொள்ளும் என்பதில் ஐயமில்லை.
இந்த காரைப் பார்க்கையில் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லிவிட முடிகிறது. அசுர வேகத்தில் இயங்குவதற்கு என்றே இவை உருவாக்கப்பட்டுள்ளன என்பதே அது. அதற்கு ஏற்றார் போல் ஏரோ டைனாமிக் உடலமைப்பும் மிக உயரம் குறைவான வடிவமைப்பும் நமக்கு இதனை உறுதி படுத்துகிறது.
இந்த புதிய கலிபோர்னியா டி கார்கள் வேரியபல் பூஸ்ட் மேனேஜ்மென்ட் அமைப்புடன் கூடிய 552 பிஎச்பி திறன் கொண்ட 3.9 லிட்டர் பை - டர்போ என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இந்த அமைப்பு வெவ்வேறு கியர்களில் வெவ்வேறு அளவிலான இழுவை சக்தியை கொடுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச கியர் மாற்றப்படும் போது அதிகப்படியான சக்தி வெளியிடப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் மூலம் ஓட்டுனர் எந்த வித வேக பின்னடைவும் இல்லாமல் தொடர்ச்சியாக வேகம் கூடுவதை உணர முடியும்.