ஃபியட் கிரைஸ்லரிடம் இருந்து பெர்ராரி அதிகாரபூர்வமாக பிரிகிறது
published on ஜனவரி 06, 2016 02:40 pm by akshit
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
இது தவிர, குறிப்பிட்ட பங்குத்தாரர்களுக்கு இதே விகிதாச்சாரத்தில் சிறப்பு வாக்களிப்பு பங்குகள் விநியோகிக்கப்பட உள்ளது. விநியோகிக்கப்படும் பங்குகளில் 80 சதவீதம் பிராண்டிற்கு சொந்தமானதாகவும், 10 சதவீதம் நிறுவனத்தின் IPO-ன் ஒரு பகுதியாகவும், மீதமுள்ள 10 சதவீதம் – இந்நிறுவனத்தின் துணைத் தலைவராக பணியாற்றி வரும் இன்ஸோவின் மகனான பியரோ பெர்ராரியின் கட்டுப்பாட்டிலும் இருக்கும்.
இன்னும் கூடுதலான பிரத்யேக மாடல்களை அளிப்பதாக வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்து பேசிய, FCA-யின் தலைமை நிர்வாகியான சிர்ஜியோ மார்ச்சியோனி கூறுகையில், “FCA-யிடம் பிரிவதாக நாங்கள் கூறிய அந்த கணத்தில் இருந்து, ஒரு பயணம் முடிவுக்கு வந்தது. ஆனால் உண்மையில் இன்று மற்றொரு பெரிய அத்தியாயம் துவங்கியுள்ளது. இதன் வளர்ச்சி மற்றும் ஆற்றல்வளத்தை பராமரிக்க இன்றியமையாததாக விளங்கும் பெர்ராரியின் சுதந்திரத்தை இது பட்டியலிடுகிறது” என்றார்.
எக்ஸரை கட்டுப்பாட்டில் வைத்துள்ள FCA-யின் மிகப்பெரிய பங்குத்தாரரான அக்னெல்லி குடும்பத்திற்கு, பெர்ராரியின் அதிக எண்ணிக்கையிலான பங்குகள் கிடைத்துள்ளன. எனவே இந்த பிரிவு நிகழ்ந்த போதிலும், பெர்ராரியின் கட்டுப்படுத்தும் அதிகாரம் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும். அக்னெல்லி குடும்பத்திற்கு தற்போது தலைமை வகித்து வரும் தலைவர் ஜான் எல்கானன், FCA-யின் அதிக பங்குகளை கொண்டுள்ளதால், பெர்ராரியின் பங்குகளின் பெரும்பகுதிகளை அவர் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
FCA-யின் மொத்த வருமானத்தில், 10 சதவீதத்திற்கும் அதிகமாக பெர்ராரி பங்கு வகித்து வந்தது. இந்நிலையில் இக்குழுவில் இருந்து இந்த பிராண்டு வெளியேறியதை தொடர்ந்து, கடந்த திங்களன்று மிக சமீபத்தில் முடிவடைந்த விலையை விட, ஏறக்குறைய மூன்றாவது தாழ்ந்ததாக FCA-யின் பங்குகள் திறக்கப்பட்டன. பெர்ராரியின் பங்குகளின் விலையும் சற்று குறைந்துள்ளது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful