பெர்ராரி நிறுவனத்தின் புதிய அவுட்லெட் டிசம்பர் 1 ஆம் தேதி மும்பையில் துவக்கப்படுகிறது
published on நவ 30, 2015 05:03 pm by nabeel for பெரரி கலிபோர்னியா
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
பெர்ராரி, வாகன உலகில் உயர்ரக சொகுசு கார்கள் தயாரிப்பில் பல ஆண்டுகளாக தலை சிறந்து விளங்குகிறது. இப்போது இந்தியாவில் மறுபிரவேசம் செய்துள்ள இந்த நிறுவனம் , தங்களது கார்களை வாங்க துடிக்கும் ஏராளமான வாடிக்கையாளர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது. டெல்லியில் மட்டும் இரண்டு விற்பனை மையங்களை (அவுட்லெட் ) இயக்கி வந்த பெர்ராரி , இப்போது தனது இந்திய நெட்வொர்கை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து , அதன் தொடர்ச்சியாக மும்பையிலும் வரும் 1 ஆம் தேதி ஒரு அவுட்லெட்டை துவக்க முடிவு செய்துள்ளது. முன்பு லேண்ட் ரோவர் ஷோரூமாக செயல்பட்டு வந்த பாந்த்ரா குர்லா வளாகத்தில் இந்த புதிய பெர்ராரி ஷோரூம் தொடங்கப்படுகிறது. 3,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த ஷோரூமில் இந்தியாவில் கிடைக்கும் அனைத்து வகையான பெர்ராரி கார்களும் காட்சிக்கு வைக்கப்படும். பெர்ராரி நிறுவனத்தின் மும்பை விநியோகஸ்தர்களான நவ்நீத் மோட்டார்ஸ் இந்த பாந்த்ரா குர்லா வளாகத்தின் உரிமையாளர்களான வாத்வா குழுமத்துடன் குத்தகை ஒப்பந்தம் ( லீஸ் காண்ட்ரேக்ட் ) செய்துக்கொண்டுள்ளனர்.
இந்த ஷோரூமில் பெர்ராரி கலிபோர்னியா T ( ரூ. 3.45 கோடி) , பெர்ராரி 488 GTB ( ரூ. 3.99 கோடி) பெர்ராரி 458 ஸ்பைடர் ( ரூ.4.22 கோடி ) , பெர்ராரி 458 ஸ்பெஷல் ( ரூ,4.40 கோடி ) மற்றும் F12 பெர்லிநெட்டா (ரூ. 4.87 கோடி) ஆகிய மாடல்கள் விற்பனைக்காக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் குறிப்பிட்டுள்ள இந்த விலை விவரங்கள் எக்ஸ் - ஷோரூம் விலைகளாகும். இருந்தாலும் இறுதியான விலை , விற்பனையின் போது குறிப்பிட்ட கார் எந்த விதமான மாற்றங்கள் மற்றும் மேம்படுத்துதல்களை பெறுகிறதோ அதை பொறுத்தே அமையும்.
பெர்ராரி நிறுவனத்தின் சமீபத்திய மாடலான கலிபோர்னியா T ரூ. 3.45 கோடி( எக்ஸ் - ஷோரூம் , டெல்லி ) என்ற விலையுடன் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் வேரியபல் பூஸ்ட் மானேஜ்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய 552பிஎச்பி திறன் , 3.9 லிட்டர் பை - டர்போ V8 என்ஜின் பொருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
பரிந்துரைக்கப்படுகிறது
0 out of 0 found this helpful