• English
  • Login / Register
  • டாடா நிக்சன் ev முன்புறம் left side image
  • டாடா நிக்சன் ev முன்புறம் view image
1/2
  • Tata Nexon EV
    + 45படங்கள்
  • Tata Nexon EV
  • Tata Nexon EV
    + 8நிறங்கள்
  • Tata Nexon EV

டாடா நெக்ஸன் இவி

change car
4.4164 மதிப்பீடுகள்rate & win ₹1000
Rs.12.49 - 17.19 லட்சம்*
*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி
view டிசம்பர் offer
TATA celebrates ‘Festival of Cars’ with offers upto ₹2 Lakh.

டாடா நெக்ஸன் இவி இன் முக்கிய அம்சங்கள்

ரேஞ்ச்390 - 489 km
பவர்127 - 148 பிஹச்பி
பேட்டரி திறன்40.5 - 46.08 kwh
சார்ஜிங் time டிஸி40min-(10-100%)-60kw
சார்ஜிங் time ஏசி6h 36min-(10-100%)-7.2kw
பூட் ஸ்பேஸ்350 Litres
  • டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்
  • பின்பக்க கேமரா
  • கீலெஸ் என்ட்ரி
  • ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல்
  • ஏர் ஃபியூரிபையர்
  • voice commands
  • பார்க்கிங் சென்ஸர்கள்
  • பவர் விண்டோஸ்
  • advanced internet பிட்டுறேஸ்
  • wireless charger
  • ஆட்டோ டிம்மிங் ஐஆர்விஎம்
  • பின்புற ஏசி செல்வழிகள்
  • க்ரூஸ் கன்ட்ரோல்
  • சன்ரூப்
  • key சிறப்பம்சங்கள்
  • top அம்சங்கள்
space Image

நெக்ஸன் இவி சமீபகால மேம்பாடு

டாடா நெக்ஸான் EV -யின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

டாடா நெக்ஸான் EV -யின் ரெட் டார்க் பதிப்பின் யூனிட்கள் டீலர்ஷிப்களுக்கு வந்துவிட்டதால் நேரில் வாடிக்கையாளர்கள் இப்போது நேரில் பார்க்க முடியும். நெக்ஸான் EV பெரிய பேட்டரி பேக்கையும் மற்றும் இரண்டு புதிய வசதிகளையும் பெற்றுள்ளது.

டாடா நெக்ஸான் EV -யின் விலை எவ்வளவு?

டாடா நெக்ஸான் தொடக்க நிலை கிரியேட்டிவ் பிளஸ் மீடியம் ரேஞ்ச் (எம்ஆர்) வேரியன்ட் விலை ரூ. 12.49 லட்சத்தில் இருந்து, ஃபுல்லி லோடட் எம்பவர்டு பிளஸ் 45 க்கு ரூ. 16.99 லட்சம் (அறிமுக எக்ஸ்-ஷோரூம்) விலையில் டாடா இரண்டு புதிய வேரியன்ட்களை சேர்த்துள்ளது. எக்ஸ்டென்டெட் பேட்டரி பேக் (45 kWh), எம்பவர்டு பிளஸ் 45 ரெட் டார்க் மற்றும் எம்பவேர்டு பிளஸ் 45 ஆகிய வேரியன்ட்கள் உள்ளன. எலக்ட்ரிக் எஸ்யூவியின் ரெட் டார்க் எடிஷனின் விலை ரூ.17.19 லட்சம். (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை இருக்கிறது.

டாடா நெக்ஸான் EV -யில் எத்தனை வேரியன்ட்கள் உள்ளன?

டாடா நெக்ஸான் EV மொத்தம் 12 வேரியன்ட்களில் வருகிறது. கிரியேட்டிவ், ஃபியர்லெஸ் மற்றும் எம்பவர்டு என முக்கிய வேரியன்ட்களாக உள்ளன. கடைசி இரண்டு வேரியன்ட்களில் எம்பவர்டு பிளஸ் எல்ஆர் டார்க் மற்றும் எம்பவர்டு பிளஸ் 45 ஆகியவை அதிக ரேஞ்சையும் எக்யூப்மென்ட்டையும் கொண்டுள்ளது.

டாடா நெக்ஸான் EV -யின் எந்த வேரியன்ட்டை  நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்? 

நீங்கள் மீடியம் ரேஞ்ச் (MR) பதிப்பை எதிர்பார்க்கிறீர்கள் என்றால் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்கும் ஃபியர்லெஸ் வேரியன்ட்டை நாங்கள் பரிந்துரைக்கிறோம். நீங்கள் லாங் ரேஞ்ச் (LR) பதிப்பில் ஆர்வமாக இருந்தால்  டாப்-ஸ்பெக் எம்பவர்டு+ வேரியன்ட் பணத்திற்கேற்ப சிறந்த மதிப்பை வழங்குகிறது. 

டாடா நெக்ஸான் EV என்ன வசதிகளை கொண்டுள்ளது ?  

வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவர் டிஸ்ப்ளே, கனெக்டட் கார் டெக்னாலஜி, ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், வென்டிலேட்டட் முன் இருக்கைகள், 9-ஸ்பீக்கர் JBL சவுண்ட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட் உடன் கீலெஸ் என்ட்ரி, க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகிய வசதிகள் டாடா நெக்ஸான் EV -யில் உள்ளன. 

டாடா நெக்ஸான் EV எவ்வளவு பெரியது? 

டாடா நெக்ஸான் ஐந்து பேர் கொண்ட சராசரி குடும்பத்திற்கு ஏற்றதாக இருக்கும். பின் இருக்கை முழங்கால் அறை போதுமானதை விட அதிகமாகவே உள்ளது மற்றும் இருக்கை குஷனிங் போதுமானது. ஒரே ஒரு குறைபாடு என்னவென்றால் ஃபுளோரின் கீழ் பேட்டரி பேக் இருப்பதால் நீங்கள் சற்று முழங்கால்களுக்கு மேல் நிலையில் வைத்தபடி அமர வேண்டியிருக்கும். குறிப்பாக இதை லாங் ரேஞ்ச் (LR) பதிப்பில் தெளிவாக உணர முடியும். 

டாடா நெக்ஸான் EV காரில் 350-லிட்டர் பூட் உள்ளது மேலும் இது நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் நான்கு கேபின் அளவுள்ள டிராலி பேக்குகளை வைக்கலாம். மேலும் பின் இருக்கைகள் 60:40 ஸ்பிளிட் செயல்பாட்டுடன் வருகின்றன. மேலும் அதிக பூட் ஸ்பேஸை தேவைப்பட்டால் கீழே மடிக்கலாம். 

டாடா நெக்ஸான் EV -யில் என்ன இன்ஜின் ஆப்ஷன்கள் உள்ளன? 

டாடா நெக்ஸான் EV இரண்டு பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது: மீடியம் ரேஞ்ச் மற்றும் லாங் ரேஞ்ச்.

  • மீடியம் ரேஞ்ச் (MR): இந்த பதிப்பு 30 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது, இது முன் சக்கரங்களை இயக்கும் 129 PS / 215 Nm அவுட்புட் கொண்ட இ-மோட்டரை கொண்டுள்ளது. இந்த பதிப்பு 9.2 வினாடிகளில் 0-100 கி.மீ வேகத்தை எட்டும்.

  • லாங் ரேஞ்ச் (LR):  இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலில் 143 PS / 215 Nm முன்-சக்கர டிரைவிங் உள்ளது. ஒரு பெரிய 40.5 kWh பேட்டரி பேக் உள்ளது. இந்த வேரியன்ட் MR பதிப்பை விட சற்று விரைவானது. வெறும் 8.9 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டிவிடுகிறது.

நெக்ஸான் EV ஒரு எலக்ட்ரிக் கார் என்பதால், இரண்டு பதிப்புகளும் ஒரே ஒரு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷனை பெறுகின்றன. 

டாடா நெக்ஸான் EV ஒரே சார்ஜில் எவ்வளவு தூரம் செல்லும் ? 

டாடா நெக்ஸானுக்கான கிளைம்டு ரேஞ்ச் 325 கி.மீ மற்றும் லாங் ரேஞ்ச் பதிப்பிற்கு 465 கி.மீ என மதிப்பிடப்பட்டுள்ளது. நிஜ உலகில் MR 200 கி.மீ முதல் 220 கி.மீ வரை செல்லும்ம் என்று எதிர்பார்க்கலாம். அதே நேரத்தில் LR 270 கி.மீ முதல் 310 கி.மீ வரை செல்லும். உண்மையான ரியல் வேர்ல்டு ரேஞ்ச் ஆனது டிரைவிங் செய்யப்படும் பாணி, சுற்றுப்புற வெப்பநிலை மற்றும் பிரேக் எனர்ஜி ரீஜெனரேஷன் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடலாம் என்பதை நினைவில் வைக்கவும். 

டாடா நெக்ஸான் EV எவ்வளவு பாதுகாப்பானது?

டாடா நெக்ஸான் EV -யானது 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், முன் மற்றும் பின் பார்க்கிங் சென்சார்கள், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், ஹில் ஹோல்ட் கன்ட்ரோல், ஹில் டிசென்ட் கண்ட்ரோல் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய பாதுகாப்பு வசதிகளுடன் வருகிறது. 

டாடா நெக்ஸான் EV பாரத் NCAP ஆல் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட பிறகு முழுமையாக 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெறும் என்பதை உறுதியளிக்கிறது.

டாடா நெக்ஸான் EV -யில் எத்தனை கலர் ஆப்ஷன்கள் கிடைக்கின்றன ?  

டாடா நெக்ஸான் EV 7 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது: டேடோனா கிரே, பிரிஸ்டைன் ஒயிட், ஃபிளேம் ரெட், கிரியேட்டிவ் ஓஷன், ஃபியர்லெஸ் பர்பிள், எம்பவர்டு ஆக்சைடு மற்றும் ஓனிக்ஸ் பிளாக். 

கிரியேட்டிவ் ஓஷன், எம்பவர்டு ஆக்சைடு மற்றும் ஃபியர்லெஸ் பர்பிள் போன்ற நிறங்கள் வேரியன்ட்டுக்கு தகுந்தபடி கிடைக்கும். ஓனிக்ஸ் பிளாக் ஒரே ஒரு #டார்க் வேரியன்ட் ஆக விற்கப்படுகிறது, மேலும் இது ஹையர் வேரியன்ட்களுக்கு மட்டுமே. 

எங்கள் தேர்வுகள்:

எம்பர்டு ஆக்சைடு: இந்த ஷேடு ஆனது வெள்ளை மற்றும் சாம்பல் நிறத்திற்கு இடையே உள்ள ஒரு நடுத்தர நிறம் ஆகும். அதில் உள்ள பியர்ல் ஸ்பெக்ஸ்கள் காருக்கு கூடுதல் பளபளப்பைக் கொடுக்கின்றன. 

ஓனிக்ஸ் பிளாக்: நீங்கள் மிரட்டலான தோற்றத்துடன்  ஏதாவது ஸ்போர்ட்டியாக கலரை விரும்பினால், இதை தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த நிறத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் உங்களுக்கு ஆல் பிளாக் இன்ட்டீரியர் கிடைக்கும்.  

நீங்கள் டாடா நெக்ஸான் EV -யை தேர்வு செய்ய வேண்டுமா?

பதில் என்னவென்றால், ஆம்! உங்கள் தினசரி உபயோகம் வழக்கமானதாக இருந்தால், வீட்டிலேயே சார்ஜரை நிறுவும் ஆப்ஷன் இருந்தால், டாடா நெக்ஸான் EV -யை வாங்குவதை பற்றி நீங்கள் பரிசீலிக்கலாம். டிரைவிங் நிஜ உலக வரம்பிற்குள் இருந்தால், ஒரு கிலோமீட்டர் ஓட்டுதலுக்கான செலவுச் சேமிப்பை கூடுதல் நேரமாக மீட்டெடுக்க முடியும். மேலும் நெக்ஸான் இந்த விலைக்கு தேவைப்படுவதை விட ஏராளமான வசதிகளுடன் வருகிறது. மேலும் 5 நபர்களுக்கு போதுமான இடத்தைக் கொண்டுள்ளது மற்றும் வசதியாகவும் இருக்கிறது. 

இதற்கான மாற்று கார்கள் என்ன?

சந்தையில் டாடா நெக்ஸான் EV -க்கு இருக்கும் ஒரே ஒரு நேரடி போட்டியாளர் மஹிந்திரா XUV400 EV மட்டுமே. இது பெரியது மற்றும் சிறந்த இடத்தையும் பூட் ஸ்பேஸையும் கொண்டுள்ளது. இருப்பினும் மஹிந்திரா -வில் நிறைய வசதிகள் கிடைக்காது. மேலும் மற்றும் டாடாவை போல நவீனமகவும் இல்லை. ஒருவேளைஉங்கள் பட்ஜெட்டை நீட்டிக்க முடிந்தால் நீங்கள் MG ZS EV -யை கருத்தில் கொள்ளலாம்.

இதே விலையில் ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி சுஸூகி கிராண்ட் விட்டாரா, ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக் மற்றும் எம்ஜி ஆஸ்டர் போன்ற காம்பாக்ட் எஸ்யூவி -களின் ICE வெர்ஷன்களையும் நீங்கள் பரிசீலிக்கலாம்.

மேலும் படிக்க
நிக்சன் ev கிரியேட்டிவ் பிளஸ் mr(பேஸ் மாடல்)30 kwh, 275 km, 127 பிஹச்பி2 months waitingRs.12.49 லட்சம்*
நிக்சன் ev fearless mr30 kwh, 275 km, 127 பிஹச்பி2 months waitingRs.13.29 லட்சம்*
நிக்சன் ev fearless பிளஸ் mr30 kwh, 275 km, 127 பிஹச்பி2 months waitingRs.13.79 லட்சம்*
நிக்சன் ev கிரியேட்டிவ் 4546.08 kwh, 489 km, 148 பிஹச்பி2 months waitingRs.13.99 லட்சம்*
நிக்சன் ev fearless பிளஸ் எஸ் mr30 kwh, 275 km, 127 பிஹச்பி2 months waitingRs.14.29 லட்சம்*
நிக்சன் ev fearless lr40.5 kwh, 390 km, 143 பிஹச்பி2 months waitingRs.14.59 லட்சம்*
நிக்சன் ev empowered mr30 kwh, 275 km, 127 பிஹச்பி2 months waitingRs.14.79 லட்சம்*
நிக்சன் ev fearless 4546.08 kwh, 489 km, 148 பிஹச்பி2 months waitingRs.14.99 லட்சம்*
நிக்சன் ev fearless பிளஸ் lr40.5 kwh, 390 km, 143 பிஹச்பி2 months waitingRs.15.09 லட்சம்*
நிக்சன் ev fearless பிளஸ் எஸ் lr40.5 kwh, 390 km, 143 பிஹச்பி2 months waitingRs.15.29 லட்சம்*
நிக்சன் ev empowered 4546.08 kwh, 489 km, 148 பிஹச்பி2 months waitingRs.15.99 லட்சம்*
மேல் விற்பனை
நிக்சன் ev empowered பிளஸ் lr40.5 kwh, 390 km, 143 பிஹச்பி2 months waiting
Rs.16.29 லட்சம்*
நிக்சன் ev empowered பிளஸ் lr dark40.5 kwh, 390 km, 143 பிஹச்பி2 months waitingRs.16.49 லட்சம்*
நிக்சன் ev empowered பிளஸ் 4546.08 kwh, 489 km, 148 பிஹச்பி2 months waitingRs.16.99 லட்சம்*
நிக்சன் ev empowered பிளஸ் 45 ரெட் dark(top model)46.08 kwh, 489 km, 148 பிஹச்பி2 months waitingRs.17.19 லட்சம்*
வகைகள் இன் எல்லாவற்றையும் காண்க

டாடா நெக்ஸன் இவி comparison with similar cars

டாடா நெக்ஸன் இவி
டாடா நெக்ஸன் இவி
Rs.12.49 - 17.19 லட்சம்*
எம்ஜி விண்ட்சர் இவி
எம்ஜி விண்ட்சர் இவி
Rs.13.50 - 15.50 லட்சம்*
டாடா பன்ச் EV
டாடா பன்ச் EV
Rs.9.99 - 14.29 லட்சம்*
டாடா கர்வ் இவி
டாடா கர்வ் இவி
Rs.17.49 - 21.99 லட்சம்*
மஹிந்திரா xuv400 ev
மஹிந்திரா xuv400 ev
Rs.16.74 - 17.69 லட்சம்*
மஹிந்திரா be 6
மஹிந்திரா be 6
Rs.18.90 லட்சம்*
citroen ec3
சிட்ரோய்ன் ec3
Rs.12.76 - 13.41 லட்சம்*
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
Rs.11.14 - 19.99 லட்சம்*
Rating
4.4164 மதிப்பீடுகள்
Rating
4.766 மதிப்பீடுகள்
Rating
4.3112 மதிப்பீடுகள்
Rating
4.7108 மதிப்பீடுகள்
Rating
4.5254 மதிப்பீடுகள்
Rating
4.8337 மதிப்பீடுகள்
Rating
4.286 மதிப்பீடுகள்
Rating
4.4362 மதிப்பீடுகள்
Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeஎலக்ட்ரிக்Fuel Typeபெட்ரோல் / சிஎன்ஜி
Battery Capacity40.5 - 46.08 kWhBattery Capacity38 kWhBattery Capacity25 - 35 kWhBattery Capacity45 - 55 kWhBattery Capacity34.5 - 39.4 kWhBattery Capacity59 kWhBattery Capacity29.2 kWhBattery CapacityNot Applicable
Range390 - 489 kmRange331 kmRange315 - 421 kmRange502 - 585 kmRange375 - 456 kmRange535 kmRange320 kmRangeNot Applicable
Charging Time56Min-(10-80%)-50kWCharging Time55 Min-DC-50kW (0-80%)Charging Time56 Min-50 kW(10-80%)Charging Time40Min-60kW-(10-80%)Charging Time6H 30 Min-AC-7.2 kW (0-100%)Charging Time20Min-140 kW(20-80%)Charging Time57minCharging TimeNot Applicable
Power127 - 148 பிஹச்பிPower134 பிஹச்பிPower80.46 - 120.69 பிஹச்பிPower148 - 165 பிஹச்பிPower147.51 - 149.55 பிஹச்பிPower228 பிஹச்பிPower56.21 பிஹச்பிPower86.63 - 101.64 பிஹச்பி
Airbags6Airbags6Airbags6Airbags6Airbags6Airbags7Airbags2Airbags2-6
GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings5 StarGNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-GNCAP Safety Ratings-
Currently Viewingநெக்ஸன் இவி vs விண்ட்சர் இவிநெக்ஸன் இவி vs பன்ச் EVநெக்ஸன் இவி vs கர்வ் இவிநெக்ஸன் இவி vs xuv400 evநெக்ஸன் இவி vs be 6நெக்ஸன் இவி vs ec3நெக்ஸன் இவி vs அர்பன் க்ரூஸர் ஹைரைடர்
space Image

Save 5%-25% on buyin ஜி a used Tata Nexon EV **

  • டாடா நெக்ஸன் இவி எக்ஸ் இசட் பிளஸ்
    டாடா நெக்ஸன் இவி எக்ஸ் இசட் பிளஸ்
    Rs14.50 லட்சம்
    202285,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நெக்ஸன் இவி XZ Plus Dark Edition
    டாடா நெக்ஸன் இவி XZ Plus Dark Edition
    Rs15.90 லட்சம்
    20237,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நெக்ஸன் இவி எக்ஸ் இசட் பிளஸ்
    டாடா நெக்ஸன் இவி எக்ஸ் இசட் பிளஸ்
    Rs9.90 லட்சம்
    202045,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நெக்ஸன் இவி XZ Plus Dark Edition
    டாடா நெக்ஸன் இவி XZ Plus Dark Edition
    Rs11.90 லட்சம்
    202224,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நெக்ஸன் இவி empowered mr
    டாடா நெக்ஸன் இவி empowered mr
    Rs14.75 லட்சம்
    202317,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நெக்ஸன் இவி எக்ஸ் இசட் பிளஸ்
    டாடா நெக்ஸன் இவி எக்ஸ் இசட் பிளஸ்
    Rs10.50 லட்சம்
    202062,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நெக்ஸன் இவி empowered plus lr
    டாடா நெக்ஸன் இவி empowered plus lr
    Rs15.25 லட்சம்
    202311,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நெக்ஸன் இவி XZ Plus Dark Edition
    டாடா நெக்ஸன் இவி XZ Plus Dark Edition
    Rs16.25 லட்சம்
    20237, 500 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
  • டாடா நெக்ஸன் இவி எக்ஸ் இசட் பிளஸ்
    டாடா நெக்ஸன் இவி எக்ஸ் இசட் பிளஸ்
    Rs12.45 லட்சம்
    202234,000 Kmஎலக்ட்ரிக்
    விற்பனையாளர் விவரங்களை காண்க
** Value are approximate calculated on cost of new car with used car

டாடா நெக்ஸன் இவி விமர்சனம்

CarDekho Experts
ஒரு தொகுப்பாக, மின்சார மோட்டாரின் செயல்திறன் மற்றும் அமைதி, மேம்பட்ட உட்புறத் தரம் மற்றும் மிகவும் ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது இன்ஃபோடெயின்மென்ட் அனைத்தும் ஒன்றாக நெக்ஸான் EV -யை சிறந்த நெக்ஸான் ஆக மாற்றுகின்றன.

overview

2023 Tata Nexon EV

டாடா மோட்டார்ஸ் இதில் மேஜிக்கை செய்திருக்கிறது. பெட்ரோல்/டீசலில் இயங்கும் டாடா நெக்ஸானுடன் தாராளமாகப் பயன்படுத்திய பிறகு, முதன்மையான நெக்ஸான் - டாடா நெக்ஸான் EV -னிலும் அது வியக்கத்தக்க வகையில் இன்னும் மிச்சம் இருக்கிறது. கிட்டத்தட்ட ICE-இயங்கும் நெக்ஸான் -ன் புதுப்பிப்புகள் ஒரு வகையான டிரெய்லராக இருந்தால், இது ஒரு முழு நீள திரைப்படம்; டாடா மோட்டார்ஸ் புராடக்ட் அப்டேட் மூலம் என்ன செய்ய முடியும் என்பதை காட்டுவதற்கான ஒரு எடுத்துக்காட்டு.

டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்டின் அழகியலில் நீங்கள் ஈர்க்கப்பட்டிருந்தால், EV -யில் அதை விட சிறப்பானதாக இருக்கிறது.

உட்புறங்கள் சிறப்பாக இருப்பதாகவும், அதிக பிரீமியம் இருப்பதாகவும் நீங்கள் நினைத்தால், EV -யில் அதை விட சிறப்பானதாக இருக்கிறது.

அம்சங்களின் பட்டியல் விரிவானதாகத் தோன்றினால், EV அதை விட சிறப்பானதாக இருக்கிறது.

பணம் ஒரு விஷயம் இல்லை, இது டாடா நெக்ஸான் பெறுவது இதைதான்.

வெளி அமைப்பு

முதல் அபிப்ராயம் என்னவென்றால், டாடா நெக்ஸான் EV ஃபேஸ்லிஃப்ட் எலக்ட்ரிக் பதிப்பில் முன்னுரிமை பெற்று தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. டேடைம் லைட்ஸ், 16-இன்ச் அலாய் வீல்களில் உள்ள பேட்டர்ன் மற்றும் டெயில் லேம்ப்களில் உள்ள அனிமேஷன் போன்ற எலமென்ட்கள் ஆகிய்வை அனைத்தும் EV -யின் அழகியலுடன் சிறப்பாக இருக்கின்றன.

2023 Tata Nexon EV Front

பார்வைக்கு, இரண்டு முக்கிய வேறுபாடுகள் உள்ளன: DRL -களுடன் இணைக்கும் ஒரு லைட் பார் ஒன்று உள்ளது. இது வெல்கம்/குட்பை அனிமேஷன் கணிசமாக குளிர்ச்சியாக்குவது மட்டுமல்லாமல், சார்ஜ் ஏற்றும் போது இன்டிகேட்டராகவும் இது செயல்படுகிறது. மற்ற வெளிப்படையான வேறுபாடு, ஷார்ப்பான முன் பம்பர் ஆகும், இது குரோமில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள வெர்டிகல் எலமென்ட்களை கொண்டுள்ளது.

2023 Tata Nexon EV

சுவாரஸ்யமாக, டாடா நெக்ஸானுக்கு முந்தைய ஃபேஸ்லிஃப்ட் அடையாளமாக இருந்த புளூ ஆக்ஸன்ட்களை டாடா நீக்கியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களின் 'முக்கிய அடையாளத்தை' எடுத்துக்காட்டுவதற்கான வழி இது என்று டாடா கூறுகிறது. நீல நிற உச்சரிப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் உடல் நிறம் கட்டுப்படுத்தப்படாததால், பரந்த கலர் பேலட்டை வழங்க இது அவர்களுக்கு உதவுகிறது. நீங்கள் EVயில் வாகனம் ஓட்டுகிறீர்கள் என்பதை மக்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், எம்பவர்டு ஆக்சைடு (கிட்டத்தட்ட முத்து போன்ற வெள்ளை), கிரியேட்டிவ் ஓஷன் (டர்க்கைஸ்) அல்லது டீல் பாடி நிறத்தைத் தேர்ந்தெடுக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

2023 Tata Nexon "EV" Badge

முன் கதவுகளில் நுட்பமான '.ev' பேட்ஜ்கள் உள்ளன, மேலும் கார் இப்போது அதன் புதிய அடையாளத்தை - Nexon.ev - டெயில்கேட்டில் பெருமையுடன் அணிந்துள்ளது. இந்த கார் அதனுடன் சிறப்பான தோற்றத்தை கொண்டு வருகிறது, மேலும் உங்கள் பயணத்தில் கவனத்தின் மையமாக இருப்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

சிறிய புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட்கள், புதிய கண்ணாடிகள், கனெக்டட் LED டெயில் விளக்குகள், நீட்டிக்கப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் மறைக்கப்பட்ட வைப்பர் உள்ளிட்ட அனைத்து வடிவமைப்பு எலமென்ட்களும் பெட்ரோல்/டீசல் பதிப்பில் இருந்து மாறாமல் கொடுக்கப்பட்டுள்ளன.

உள்ளமைப்பு

டாடா நெக்ஸான் EV -யின் கேபினுக்குள் நுழைந்தால், ஒரு வேளை விலை குறைவான ரேஞ்ச் ரோவரில் ஏறிவிட்டோமோ என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். நாங்கள் மிகைப்படுத்தியே கூற விரும்புகிறோம். எளிமையான வடிவமைப்பு, புதிய டூ-ஸ்போக், பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல் மற்றும் கலர் ஸ்கீம் அனைத்தும் இந்த உணர்வையே கொடுக்கின்றன.

2023 Tata Nexon EV Cabin

டாடா இங்கே மிகவும் சாகசமாக உள்ளது, டாப்-ஸ்பெக் எம்பவர்டு+ வேரியண்டில் வொயிட்-கிரே கலர் ஸ்கீம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இருக்கைகள் மற்றும் கிராஷ் பேடில் டர்க்கைஸ் தையல் உள்ளது. நிச்சயமாக, இந்திய நிலைமைகளுக்கு இந்த நிறங்கள் ஏற்றவையாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் நீங்கள் அதை ஸ்பைக்-அண்ட்-ஸ்பேனாக வைத்திருக்க முடிந்தால், அது கொண்டு வரும் மகத்தான அனுபவத்தை நீங்கள் அனுபவிப்பீர்கள்.

ICE-பவர்டு வெர்ஷன்களை போலவே, தரத்தில் முன்னேற்றம் கேபினுக்குள் இருக்கும் மிகப்பெரிய சிறப்பம்சமாகும். டாஷ்போர்டில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் லெதரெட் பேடிங், அப்ஹோல்ஸ்டரியின் தரம் மற்றும் உச்சரிப்புகளின் புத்திசாலித்தனமான பயன்பாடு அனைத்தும் கேபினுக்கு பிரீமியம் உணர்வைக் கொடுக்கிறது. இதன் விளைவாக, கிட்டத்தட்ட ஜெர்மன் கார் போன்ற டாஷ்போர்டு வடிவமைப்பு இதில் இருக்கிறது என்றே கூறலாம். ஃபிட் மற்றும் ஃபினிஷ் அடிப்படையில் டாடா முன்னேறும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விஷயத்தில் எங்களுக்கு சோதனைக்காக கொடுக்கப்பட்ட காரில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் எதுவும் இல்லை.

2023 Tata Nexon 12.3-inch Touchscreen Infotainment System

வடிவமைப்பு நிலைப்பாட்டில், சில வேறுபாடுகள் உள்ளன - ஒரு பெரிய 12.3" டச் ஸ்கிரீன், யூஸர் இன்டர்ஃபேஸ் -க்கான தனித்துவமான கலர் பேலட் மற்றும் எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக்கை கொண்ட புதிய வடிவிலான ஃப்ளோர் கன்சோல்.

2023 Tata Nexon EV Rear Seats

நடைமுறையானது ICE வெர்ஷனை போலவே அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளது. நாங்கள் சோதனை செய்த லாங் ரேஞ்ச் பதிப்பை நீங்கள் தேர்வுசெய்தால், பெரிய பேட்டரி பேக் ஃபுளோரை மேலே தள்ளுகிறது என்பதை நினைவில் கொள்ளவும். முன் இருக்கைகளில் இது ஒரு பிரச்சனையல்ல, ஆனால் பின்புறத்தில் உள்ள தொடையின் ஆதரவை குறைக்கிறது. மேலும், முன் இருக்கையில் சிறந்த குஷனிங், பெரிய பின் இருக்கை ஸ்குவாப் மற்றும் இருக்கை பின் ஸ்கூப் இல்லாததால், முழங்கால் அறையில் சிறிய இடவசதி குறைகிறது.

அம்சங்கள்

டாடா நெக்ஸான் EV -யின் கிட்டியை ஆல்-ரவுண்டராக மாற்ற டாடா மோட்டார்ஸ் சில முக்கியமான அம்சங்களைச் சேர்த்துள்ளது. ICE வெர்ஷனில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட நிறைய விஷயங்கள் உள்ளன. அதில் கீழே உள்ள விஷயங்கள் அடங்கும்:

கீலெஸ் என்ட்ரி வென்டிலேட்டட் முன் இருக்கைகள்
புஷ்-பட்டன் ஸ்டார்ட் ஸ்டாப் எலக்ட்ரிக் சன்ரூஃப்
ஆட்டோமெட்டிக் ஹெட்லைட்கள் வயர்லெஸ் சார்ஜிங்
க்ரூஸ் கன்ட்ரோல் டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே
ஆட்டோமெட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 9-ஸ்பீக்கர் ஜேபிஎல் சவுண்ட​ சிஸ்டம்
பின்புற ஏசி வென்ட்கள் 360 டிகிரி கேமரா

முதல் பெரிய மாற்றம் புதிய 12.3-இன்ச் டச் ஸ்கிரீன், இது எளிமையாகச் சொல்வதானால், டாடா கார் இதுவரை கண்டிராத சிறந்ததாகும். ICE-பவர்டு டாடா நெக்ஸான் (மற்றும் நெக்ஸான் EV ஃபியர்லெஸ் வேரியன்ட்) இல் சிறிய 10.25-இன்ச் திரையில் நாங்கள் சில குறைபாடுகள் மற்றும் தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும், பெரிய திரையில் இது பெரிய விஷயமாக இல்லை. சிறிய டிஸ்பிளேவை போலவே, இதுவும் மிருதுவான கிராபிக்ஸ், சிறந்த வேரியன்ட் மற்றும் பழகுவதற்கு மிகவும் எளிதான பயனர் இடைமுகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

2023 Tata Nexon EV Arcade.ev

ஸ்கிரீனுக்கு பின்னால் குவால்காம் புராசஸர் இயங்குகிறது, 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் உள்ளது. OS ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோமோட்டிவ் அடிப்படையிலானது, இது டாடா ஆப்ஸ் முழுவதையும் திறக்க உதவுகிறது. டாடா இதை ‘Arcade.EV’ என்று அழைக்கிறது — இது பிரைம் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் மற்றும் கேம்கள் போன்ற பொழுதுபோக்கு ஆப்களை பதிவிறக்க அனுமதிக்கும் ஆப் ஸ்டோர் ஆகும். உங்கள் சார்ஜிங் நிறுத்தங்களை இன்னும் கொஞ்சம் நிதானமாக்குவதே இங்கே யோசனை. வாகனம் சார்ஜ் ஆகும்போது, உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகளை நீங்கள் டியூன் செய்யலாம் அல்லது நேரத்தைக் குறைக்க சில கேம்களை விளையாடலாம். நீங்கள் ஒரு விரைவான வாகனத்தை ஓட்டும் போது குழந்தைகளை மகிழ்விப்பது கிடைக்கும் மற்றொரு எளிமையான வசதி இது.

2023 Tata Nexon EV 10.25-inch Digital Driver's Display

10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மூலம் உங்கள் விரல் நுனியில் பல தகவல்களை அணுகலாம். EV - கிராபிக்ஸ் பேக், பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் மிகக் குறைவாகவும், கம்பீரமாகவும் இருக்கிறது. இந்தத் திரையில் கூகுள்/ஆப்பிள் மேப்ஸைப் பிரதிபலிக்கும் திரையின் திறன், தடையற்ற நேவிகேஷன் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. இந்த திரையில் ஐபோன் மூலம் கூகுள் மேப்ஸ் -ஐ இயக்குவோம் என்று நம்புகிறோம்! (இதை செய்து கொடுங்கள், ஆப்பிள்!)

பாதுகாப்பு

2023 Tata Nexon EV Rearview Camera

பாதுகாப்பு தொகுப்பில் 6 ஏர்பேக்குகள், ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் ஆகியவை ஸ்டான்டர்டாக உள்ளன. மற்ற பாதுகாப்பு அம்சங்களில் முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா மற்றும் ISOFIX சைல்டு சீட்  மவுன்ட்கள் ஆகியவை அடங்கும். புதிய டாடா நெக்ஸான் EV இன்னும் க்ராஷ்-டெஸ்ட் செய்யப்படவில்லை, இருப்பினும் இது நன்றாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பக்கவாட்டு தாக்கங்களைச் சிறப்பாகத் தாங்கும் வகையில் கட்டமைப்பு வலுவூட்டப்பட்டுள்ளதாக டாடா எங்களுக்கு உறுதியளித்துள்ளது.

பூட் ஸ்பேஸ்

2023 Tata Nexon EV Boot Space

பூட் ஸ்பேஸ் 350 லிட்டராக மாறாமல் இருக்கும், மேலும் உங்களிடம் மக்களை விட அதிகமான லக்கேஜ் இருந்தால் 60:40 ஸ்ப்ளிட் செயல்பாடு உள்ளது. மேலும், டாடா நெக்ஸான் -ல் காலம் காலமாக இருக்கக்கூடிய சிக்கல்கள் இன்னும் உள்ளன - முன்பக்கத்தில் பயன்படுத்தக்கூடிய கப்ஹோல்டர்கள் இல்லாமை, பின்புறத்தில் சிறிய டோர் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு குறுகலான கால் வைக்கும் பகுதி போன்றவையும் அப்படியே இருக்கின்றன.

செயல்பாடு

டாடா மோட்டார்ஸ் நெக்ஸான் EV -யை இரண்டு பேட்டரி பேக்குகளுடன் வழங்குகிறது: 30kWh மற்றும் 40.5kWh. பேட்டரி பேக்குகள் மாறாமல் இருக்கும், மேலும் சார்ஜ் நேரங்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்.

லாங் ரேஞ்ச் மீடியம் ரேஞ்ச்
பேட்டரி கெபாசிட்டி 40.5kWh 30kWh
கிளைம்டு ரேஞ்ச் 465 கிமீ 325 கிமீ
சார்ஜிங் நேரம்
10-100% (15A பிளக்) ~15 மணி நேரம் ~10.5 மணி நேரம்
10-100% (7.2kW சார்ஜர்) ~6 மணி நேரம்  ~4.3 மணி நேரம்
10-80% (50kW DC) ~56 நிமிடங்கள்

டாடா மோட்டார்ஸ் லாங் ரேஞ்ச் பதிப்புடன் 7.2kW சார்ஜரையும் (நடுத்தர வரம்பிற்கு ஆப்ஷனலாக கிடைக்கும்) மற்றும் நடுத்தர ரேஞ்ச் மாறுபாட்டுடன் 3.3kW சார்ஜரையும் வழங்குகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.

2023 Tata Nexon EV Charging Port

பேட்டரி பேக் மாறாமல் இருக்கும் போது, ஒரு புதிய மோட்டார் உள்ளது. இந்த மோட்டார் 20 கிலோ எடை குறைவாக உள்ளது, அதிக rpms வரை சுழலும், மேலும் NVH அடிப்படையில் இது சிறந்தது. பவர் கூடியுள்ளது, ஆனால் அது இப்போது டார்க் குறைந்துள்ளது.

லாங் ரேஞ்ச் மீடியம் ரேஞ்ச்
பவர் 106.4PS 95PS
டார்க் 215Nm 215Nm
0-100கிமீ/மணி (கிளைம்டு) 8.9நொடிகள் 9.2நொடிகள்

நெக்ஸான் EV Max உடன் நாங்கள் முன்பு அனுபவித்ததை விட செயல்திறன் முற்றிலும் வேறுபட்டதாக நாங்கள் உணரவில்லை. டாடா அனுபவத்தை மெருகூட்டியுள்ளது மற்றும் 'அதிகபட்ச' பவர் டெலிவரி  தட்டையானது. EV பவரை  வழங்கும் விதத்தில் ஆர்வலர்கள் இன்னும் கொஞ்சம் ஆக்ரோஷத்தை விரும்பினாலும், புதிய மோட்டாரின் மென்மையான பவர் டெலிவரி பெரும்பான்மையான பயனர்களுக்கு நட்பாக இருக்கும். டாடா மோட்டார்ஸ் லாங் ரேஞ்ச் வேரியன்ட்டின் அடிப்படையில் அதிகபட்சமாக மணிக்கு 10 கிமீ வேகத்தை கூடுதலாக சேர்த்துள்ளது- 150 கிமீ வேகத்தில் (மீடியம் ரேஞ்ச் மணிக்கு 120 கிமீ வேகத்தை பெறுகிறது).

2023 Tata Nexon EV

டாடா மோட்டார்ஸ் லாங் ரேஞ்சிற்கு 465 கிமீ மற்றும் நடுத்தர ரேஞ்சுக்கு 325 கிமீ 300 கிமீ மற்றும் ரியல் வேர்ல்டு நிலைமைகளில் ~ 200 கிமீ இந்த கார் வழங்கும் என்று கூறுகிறது. உங்கள் வாராந்திர அலுவலக பயணங்களுக்கு இது போதுமானதாக இருக்கும்.

நெக்ஸான் EV -யின் கிட்டில் ஒரு சுவாரஸ்யமான கூடுதலாக வாகனத்திலிருந்து வெஹிகிள் (V2V) டூ வெஹிகிள் லோடிங் (V2L) செயல்பாடு ஆகும். நெக்ஸான் EV -யானது 3.3kva வரை மின்சாரத்தை வழங்க முடியும். நீங்கள் மிகவும் யதார்த்தமாக ஒரு சிறிய முகாம் தளத்தை இயக்கலாம் அல்லது தேவையிலுள்ள வடிகால் EV -க்கு உதவலாம். டாடா நெக்ஸான் EV -யானது முன்னரே தீர்மானிக்கப்பட்ட சார்ஜ் அளவை தேர்ந்தெடுக்க உங்களை அனுமதிக்கிறது, அது மின் விநியோகத்தை துண்டிக்கும்.

ரிடே அண்ட் ஹண்ட்லிங்

டாடா நெக்ஸானில் சவாரி -யை ஒரு சிறப்பம்சமாக சொல்லலாம். EV -யுடன், வலிமையும் பிரகாசிக்கிறது. இது அதன் ICE உடன்பிறப்பை விட உறுதியான உணர்வை தருகிறது, ஆனால் ஒருபோதும் அசெளகரியமாக இருக்காது. மோசமான சாலைகளை இந்த கார் சிறப்பான முறையில் கையாள்கிறது, மேலும் அதிவேக நிலைத்தன்மையும் ஏற்றுக் கொள்ளத்தக்கது. கிரவுண்ட் கிளியரன்ஸ் லாங் ரேஞ்ச் வேரியன்ட்டுக்கு 190 மிமீ மற்றும் மீடியம் ரேஞ்ச் வேரியன்ட்டுக்கு 205 மிமீ என மதிப்பிடப்பட்டுள்ளது.

2023 Tata Nexon EV

நெக்ஸான் EV-யை இயக்குவதற்கு எந்த கடினமாக முயற்சியும் தேவையில்லை. ஸ்டீயரிங்கும் நகரத்தில் ஓட்டும் போது விரைவாகவும் இலகுவாகவும் உள்ளது, மேலும் நெடுஞ்சாலைகளுக்கு போதுமான எடையை கொடுக்கிறது. இது துல்லியமானதாகவும் திருப்பங்களில் கணிக்கக்கூடியதாகவும் உள்ளது. உடனடி செயல்திறனும் இதனுடன் கிடைக்கிறது, நீங்கள் விரும்பினால் டாடா நெக்ஸானை EV வாங்கலாம்.

வெர்டிக்ட்

2023 Tata Nexon EV

அப்டேட்கள் நெக்ஸான் EV -யை முன்பை விட விட மிகவும் சிறந்த காரான மாற்றுகின்றன. புதுப்பிக்கப்பட்ட வடிவமைப்பு, பிரீமியம் இன்டீரியர்ஸ், சிறந்த அம்சங்கள் மற்றும் மென்மையான செயல்திறன் அனைத்தும் சுவாரஸ்யமாக இருக்கும் அனுபவத்தை வழங்குகின்றன. நிச்சயமாக, டிரைவ் அனுபவம் குறிப்பிடத்தக்க வகையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை, ஆனால் அதை இங்கே நாம் ஒரு குறையாக சொல்ல முடியாது. ஒட்டுமொத்த தொகுப்பாக பார்த்தால், மின்சார மோட்டாரின் செயல்திறன் மற்றும் அமைதி, மேம்பட்ட உட்புறத் தரம் மற்றும் மிகவும் ஈர்க்கக்கூடிய இன்ஃபோடெயின்மென்ட் அனைத்தும் ஒன்றாக இருக்ககூடிய காராக நெக்ஸான் EV ஆனது சிறந்த நெக்ஸான் ஆக இங்கே இடம்பிடித்துள்ளது.

டாடா நெக்ஸன் இவி இன் சாதகம் & பாதகங்கள்

நாம் விரும்பும் விஷயங்கள்

  • நிறைய அம்சங்கள்: பெரிய 12.3” டச் ஸ்கிரீன், டிரைவருக்கான டிஜிட்டல் டிஸ்பிளே, வெஹிகிள் டூ லோட் சார்ஜிங்
  • மென்மையான டிரைவிங் அனுபவம்: புதிதாக EV வாங்குபவர்களுக்கு ஏற்றது
  • பல பேட்டரி பேக் ஆப்ஷன்கள்: 30kWh மற்றும் 40.5kWh
View More

நாம் விரும்பாத விஷயங்கள்

  • எரகனாமிக்ஸ் தொடர்பான சிக்கல் இன்னும் உள்ளது
  • லாங் ரேஞ்ச் வேரியண்டில் பின் இருக்கைக்கு அடியில் ஆதரவு சரியாக இல்லை

டாடா நெக்ஸன் இவி கார் செய்திகள்

  • நவீன செய்திகள்
  • அவசியம் படிக்க வேண்டிய கட்டுரைகள்
  • ரோடு டெஸ்ட்
  • Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்
    Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்

    டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!

    By arunAug 07, 2024

டாடா நெக்ஸன் இவி பயனர் மதிப்புரைகள்

4.4/5
அடிப்படையிலான164 பயனாளர் விமர்சனங்கள்
ஒரு விமர்சனத்தை எழுதுங்கள் விமர்சனம் & win ₹ 1000
Mentions பிரபலம்
  • All (164)
  • Looks (29)
  • Comfort (46)
  • Mileage (19)
  • Engine (6)
  • Interior (44)
  • Space (15)
  • Price (30)
  • More ...
  • நவீனமானது
  • பயனுள்ளது
  • Critical
  • U
    user on Dec 22, 2024
    4.8
    I Have A Tata Nexon EV Empowered45
    I have a Tata Nexon EC Empowered 45. Happy With 360 Camera, Alexa And iRA connectivity. As A single Person Driving In Eco Mode Can Getting 380 With AC In Summers And Without AC In Winters Getting More Than 400Kms With Every Charge. Nice Car , Must Buy, Value For Money
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • A
    aman kumar raj on Dec 18, 2024
    5
    Happy Car Looking Good Nice
    Happy car looking good nice performance and I very happy this sub comfort are well.360 digree camera are aosme i fell like luxuryous car and finally i am very happy
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • S
    sam on Dec 18, 2024
    4.8
    Best Car In India So Good Love You Car
    Very nice good car very nice experience very very smooth very good Very fast charging drive very smooth interest car iwant to say that if you think purchases tha car donot ather car
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • S
    shashi renu on Dec 17, 2024
    5
    Best Tata EV
    Excellent ev by tata company.One of my favourite cars.I will definitely buy this one.I will recommend everyone to buy this.EV is the future.Petrols and diesels days have gone.Absolutely Please promote EVS.
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • S
    soham sathe on Dec 14, 2024
    5
    Most Comfortable The Car
    Very nice the car thr car is very comfortably the car is very nice and very nice vert but the nice and comfert for everything but and very niche pn
    மேலும் படிக்க
    Was th ஐஎஸ் review helpful?
    yesno
  • அனைத்து நிக்சன் ev மதிப்பீடுகள் பார்க்க

டாடா நெக்ஸன் இவி Range

motor மற்றும் ட்ரான்ஸ்மிஷன்அராய் ரேஞ்ச்
எலக்ட்ரிக் - ஆட்டோமெட்டிக்between 390 - 489 km

டாடா நெக்ஸன் இவி வீடியோக்கள்

  • Shorts
  • Full வீடியோக்கள்
  • Nexon EV vs XUV 400  Hill climb test

    XUV 400 Hill climb test போட்டியாக நெக்ஸன் இவி

    4 மாதங்கள் ago
  • Nexon EV Vs XUV 400 hill climb

    XUV 400 hill climb போட்டியாக நெக்ஸன் இவி

    4 மாதங்கள் ago
  • Nexon EV Vs XUV 400 EV

    XUV 400 EV போட்டியாக நெக்ஸன் இவி

    4 மாதங்கள் ago
  • Driver vs Fully loaded

    Fully loaded போட்டியாக Driver

    4 மாதங்கள் ago
  • Tata Nexon EV: 5000km+ Review | Best EV In India?

    Tata Nexon EV: 5000km+ Review | Best EV In India?

    CarDekho1 month ago
  • Tata Curvv EV vs Nexon EV Comparison Review: Zyaada VALUE FOR MONEY Kaunsi?

    MONEY Kaunsi? க்கு Nexon EV Comparison Review: Zyaada VALUE போட்டியாக டாடா கர்வ் இவி

    CarDekho1 month ago
  • Tata Nexon EV Detailed Review: This Is A BIG Problem!

    Tata Nexon EV Detailed Review: This Is A BIG Problem!

    CarDekho5 மாதங்கள் ago
  • Tata Nexon EV vs Mahindra XUV400: यह कैसे हो गया! 😱

    Tata Nexon EV vs Mahindra XUV400: यह कैसे हो गया! 😱

    CarDekho5 மாதங்கள் ago

டாடா நெக்ஸன் இவி நிறங்கள்

டாடா நெக்ஸன் இவி படங்கள்

  • Tata Nexon EV Front Left Side Image
  • Tata Nexon EV Front View Image
  • Tata Nexon EV Rear Parking Sensors Top View  Image
  • Tata Nexon EV Grille Image
  • Tata Nexon EV Taillight Image
  • Tata Nexon EV Front Wiper Image
  • Tata Nexon EV Hill Assist Image
  • Tata Nexon EV 3D Model Image
space Image

டாடா நெக்ஸன் இவி road test

  • Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்
    Tata Nexon EV LR: நீண்ட கால விமர்சனம் — கார் அறிமுகம்

    டாடா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் காரான நெக்ஸான் EV கார்தேக்கோ -வின் லாங் டேர்ம் ஃபிளீட்டில் இணைகிறது!

    By arunAug 07, 2024
space Image

கேள்விகளும் பதில்களும்

Anmol asked on 24 Jun 2024
Q ) What is the ground clearance of Tata Nexon EV?
By CarDekho Experts on 24 Jun 2024

A ) The ground clearance (Unladen) of Tata Nexon EV is 205 in mm, 20.5 in cm, 8.08 i...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Devyani asked on 8 Jun 2024
Q ) What is the maximum torque of Tata Nexon EV?
By CarDekho Experts on 8 Jun 2024

A ) The Tata Nexon EV has maximum torque of 215Nm.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 5 Jun 2024
Q ) What are the available colour options in Tata Nexon EV?
By CarDekho Experts on 5 Jun 2024

A ) Tata Nexon EV is available in 6 different colours - Pristine White Dual Tone, Em...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswers (2) இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 28 Apr 2024
Q ) Is it available in Jodhpur?
By CarDekho Experts on 28 Apr 2024

A ) For the availability and waiting period, we would suggest you to please connect ...மேலும் படிக்க

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
Anmol asked on 11 Apr 2024
Q ) What is the seating capacity Tata Nexon EV?
By CarDekho Experts on 11 Apr 2024

A ) The Tata Nexon EV has a seating capacity of 5 people.

Reply on th ஐஎஸ் answerAnswer இன் எல்லாவற்றையும் காண்க
இஎம்ஐ துவக்க அளவுகள்
Your monthly EMI
Rs.33,617Edit EMI
48 மாதங்கள் க்கு <interestrate>% இல் கணக்கிடப்படும் வட்டி
Emi
view இ‌எம்‌ஐ offer
டாடா நெக்ஸன் இவி brochure
brochure for detailed information of specs, features & prices. பதிவிறக்கு
download brochure
ப்ரோசரை பதிவிறக்கு

சிட்டிஆன்-ரோடு விலை
பெங்களூர்Rs.13.48 - 18.77 லட்சம்
மும்பைRs.13.17 - 18.09 லட்சம்
புனேRs.13.17 - 18.09 லட்சம்
ஐதராபாத்Rs.13.17 - 18.09 லட்சம்
சென்னைRs.13.37 - 18.08 லட்சம்
அகமதாபாத்Rs.13.17 - 18.09 லட்சம்
லக்னோRs.13.17 - 18.09 லட்சம்
ஜெய்ப்பூர்Rs.14.74 - 20.59 லட்சம்
பாட்னாRs.13.17 - 18.09 லட்சம்
சண்டிகர்Rs.13.17 - 18.09 லட்சம்

போக்கு டாடா கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவரி 17, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சாஃபாரி ev
    டாடா சாஃபாரி ev
    Rs.32 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிப்ரவரி 15, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
view டிசம்பர் offer
space Image
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை
×
We need your சிட்டி to customize your experience