சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

புதிய கவர்ச்சிகரமான வோல்வோ பெட்ரோல் இஞ்ஜின் S-60 T6 சிறப்பம்சங்கள்

published on ஜூலை 13, 2015 05:40 pm by raunak for வோல்வோ எஸ்60 2015-2020

ஒரு சில காலமாக தேக்கமுற்ற நிலையில் இருந்த வோல்வோ மீண்டும் புத்துயிர் பெற்று 2015ல் பற்பல அறிமுகங்களை செய்துள்ளது. V40 கிராஸ் கண்ட்ரி T4, புதிய xc 90 மற்றும் V40 ஹாட்ச் அறிமுக வரிசையில், நான்காவதாக தனது S-60 T6-ஐ வோல்வோ அறிமுகப்படுத்துகிறது.

வோல்வோ இந்தியா நிறுவனம் ஜுலை 3 2015 அன்று பெட்ரோலில் இயங்ககூடிய சிறிய சொகுசு ரக சேடன் S-60 கார்-ஐ மறுஅறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் முதலில் அறிமுகபடுத்தியபோது 6சிலிண்டர் மோட்டார் பொருத்தபட்ட ஏ.டபீள்யு.டி தொழில்நுட்பத்தில் S-60 உலா வந்தது. ஆனால் அதன்பின், மேம்படுத்தப்பட்ட வகையில் இதன் பெட்ரோல் இஞ்ஜின் மாற்றபட்டு D5, D4 என்ற டீசல் இஞ்ஜின் பொருத்தி விற்பனைக்கு வந்தது. ஜூலை 3 முதல், நேரடி உட் செலுத்தும் டர்போசார்ஜ்ட நான்கு சிலிண்டர் பெட்ரோல் இஞ்ஜினை அறிமுகப்படுத்தியுள்ளது.

வால்வோ S-60 T6-இன் தனிச்சிறப்புகள்:

  • இதன் நேரடி உட்செலுத்தல் நான்கு சிலிண்டர் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 306 ஹெச்பி செயல் திறன் அதிகபட்ச 400 முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது.
  • பழைய பெட்ரோல் வகை AWD தொழில்நுட்பம் போலல்லாமல், புதிய S-60 T6 வோல்வோ மோட்டார், எட்டு மடங்கு அதிக உந்து சக்தியை தானியங்கி செயல்திறன் மூலம் முன் சக்கரத்திற்கு அனுப்புகிறது.
  • புதிய மோட்டார் கொண்ட இவ்வாகனம் 100kmph வேகத்தை தொட வெறும் 5.9 வினாடியே எடுத்துக்கொள்கிறது. மேலும், அதன் அதிக வேகம் 230 kmph வரை செல்கிறது.

இது தவிர, தற்போது இந்தியாவில் விற்பனைக்கு உள்ள S-60 டீசல் மாடலை ஒத்ததாகவே பெட்ரோல் மாடலும் உள்ளது. பெட்ரோல் மாடல் S-60 கார் எல்.இ.டி. – டி.ஆர். எல்லுடன் கூடிய வளைக்கும் தன்மை கொண்ட முகப்பு விளக்குகளையும், எல்.இ.டி பின்புற விளக்குகளையும் கொண்டு வடிவமைக்கபட்டுள்ளது. உட்புற தோற்றதில் 7 அங்குல இன்போடெயின்மென்ட் அமைப்புடன் அனைத்தும் இலக்கமுறை மயமாக்கபட்டுள்ளன. மேலும், வோல்வோ S-60 , சந்தையில் உலா வரும் மெர்சிடிஸ் பென்ஸ் சி 200 பெட்ரோல் மற்றும் பி.எம்.டபிள்யூ 328i ஆகிய தரமான கார்களுடன் போட்டியிட தயாராகவுள்ளது.

r
வெளியிட்டவர்

raunak

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது வோல்வோ எஸ்60 2015-2020

Read Full News

trendingசேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
எலக்ட்ரிக்
Rs.2.03 - 2.50 சிஆர்*
எலக்ட்ரிக்
Rs.41 - 53 லட்சம்*
Rs.11.53 - 19.13 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை