வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் 4 -மீட்டருக்கு குறைவான உயரம் கொண்ட SUV வாகனம் 2016 ஜெனிவா மோட்டார் ஷோவில் வெளியிடப்பட உள்ளது.
published on பிப்ரவரி 17, 2016 09:46 am by raunak
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ 2014 ல் காட்சிக்கு வைக்கப்பட்ட டைகூன் தயாரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தங்களது டைகன் கான்செப்டிற்கு வடிவம் கொடுக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டது. 2014 நடைபெற்ற இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் இந்த டைகூன் கான்செப்ட் காட்சிக்கு வைக்கப்பட்டது. . உலக அளவில் 2012 ஆம் ஆண்டு சாவோபோலோ சர்வதேச மோட்டார் ஷோவில் இந்த டைகன் கான்செப்டை வோல்க்ஸ்வேகன் வெளியிட்டது. இந்த கான்செப்ட் சிறியதாக ( சுமார் 3.8m ) மீட்டர் இருந்ததே தயாரிப்பு வரை இந்த கான்செப்ட் எடுத்து செல்ல படாதற்கு காரணமாக இருக்கலாம் என்பதும் , தென் அமெரிக்க சந்தையின் பொருளாதார ஆய்வின் அடிப்டையில் கிடைத்த முடிவுகள் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதும் காரணங்களா க சொல்லப்படுகின்றன.
ஏன் இது இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக எடுத்துக்கொள்ளப் படுகிறது என்ற கேள்விக்கு விடை ஆழமாக புதைந்துள்ளது. வோல்க்ஸ்வேகன் நிறுவனம் இந்த டைகூன் வாகனத்தை தென் அமெரிக்க சந்தையில் தான் முதலில் அறிமுகப்படுத்த இருந்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. . இது இப்படி இருக்க, இன்னொருபுறம் மகிழ்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் மார்ச் மாதம் நடைபெற உள்ள ஜெனிவா மோட்டார் ஷோவில் முற்றிலும் புதிய காம்பேக்ட் SUV வாகனம் ஒன்றை T - க்ராஸ் என்ற பெயரில் வோல்க்ஸ்வேகன் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த புதிய T - க்ராஸ் , இதை விடப்பெரிய T - ராக் வாகனங்களை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. T - ராக் கோல்பை அடிப்படையாக கொண்டும் T - க்ராஸ் வாகனங்கள் போலோ வை அடிப்படையாக கொண்டும் தயாரிக்கப்படுகின்றன. . T - ராக் வாகனங்களின் தயாரிப்பு அடுத்த ஆண்டும் , T - க்ராஸ் வாகனங்களின் தயாரிப்பு 2018 ஆம் ஆண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . T - ராக் சுமார் 4.2m உயரம் கொண்டதாகவும் , T – க்ராஸ் போலோ - வை அடிப்படையாக - கொண்டு உருவாக்கப்பட இருப்பதால் 4 - மீட்டருக்கு குறைவான உயரம் கொண்டதாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் 4 - மீட்டருக்கு குறைவான உயரம் கொண்ட SUV பிரிவு மிகவும் பிரபலமாக உள்ளதால்அந்த பிரிவில் நான்கு - மீட்டருக்கு குறைவான SUV யை 2018 ல் நடைபெற உள்ள இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஆரிமுகப்படுதும் என்று தெரிகிறது. அறிமுகமாகும் போது இந்த வாகனம் போர்ட் ஈகோஸ்போர்ட் , மஹிந்திரா TUV 300 , மாருதி சுசுகி விடாரா ப்ரீஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய வாகனங்களுடன் போட்டியிடும் என்றும் தெரிகிறது.
மேலும் வாசிக்க: மேக் இன் இந்தியா நிகழ்ச்சியில் ஜாகுவார் மற்றும் வோல்க்ஸ்வேகன் நிறுவனங்கள் தங்கள் கார்களை காட்சிக்கு வைத்தன.