இந்தியாவின் முதல் டீசல் இரட்டை-கிளெச் ஆட்டோமேட்டிக்: வோல்க்ஸ்வேகனின் கச்சிதமான சேடன் கார்களாக இருக்கலாம்.
published on நவ 27, 2015 02:21 pm by raunak
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
சமீபகாலத்தில் அறிமுகம் பெற்று, வெற்றி நடைபோடும் வென்டோ / ரேபிட் டீசல் DSG மூலம் வோல்க்ஸ்வேகன் இந்தியா குரூப் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றுள்ளது. இதற்கு கிடைத்த சுமூகமான வரவேற்பை தொடர்ந்து, அடுத்து வரவுள்ள 7-ஸ்பீடு DSG டயல்-கிளெச் ஆட்டோ பாக்ஸ் உடன் கூடிய கச்சிதமான சேடனை வோல்க்ஸ்வேகன் இந்தியா வெளியிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. வரும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இந்த வாகனம், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.
இந்த கச்சிதமான சேடன், போலோவின் ஆற்றலகத்தை பகிர்ந்துள்ளது மிகவும் எதார்த்தமானது என்றாலும், 1.2-லிட்டர் MPI 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 1.5-லிட்டர் TDi டீசல் ஆகிய இவ்விரு என்ஜின்களும், ஒரே சுங்க வரி எல்லைக்குள் உட்படுகின்றன. வென்டோவின் என்ஜின் 105 PS நிலையில் பயன்படுத்துவதாக இருந்தாலும், போலோ மற்றும் போலோ கிராஸ் ஆகியவற்றில் காணப்படுவது போன்ற 90 PS பதிப்பையும், அது பெறலாம். வென்டோ டீசல் DSG-ன் தற்போதைய பிரபலத் தன்மையை கருத்தில் கொண்டு, வோல்க்ஸ்வேகன் நிறுவனம் மூலம் 1.5-லிட்டர் TDi-யின் 90 PS பதிப்பு உடன் டயல்-கிளெச் ஆட்டோமேட்டிக்கை, அடுத்துவரும் கச்சிதமான சேடனில் வெளியிடக் கூடும். இப்படி நடக்கும் பட்சத்தில், அது போலோவிற்கும் லாபகரமாக அமையும். ஏனெனில் இந்த பிரிவிலேயே டயல்-கிளெச் ஆட்டோமேட்டிக் கொண்ட டீசல் பெறும் முதல் ஹேட்ச்பேக் என்ற புகழை பெற செய்யும். நம் நாட்டில் டீசல் ஆட்டோமேட்டிக்கிற்கான தேவை அதிகரித்து வரும் நிலையை பார்த்தால், இந்த மேம்பாட்டின் மூலம் இந்த வாகனங்களுக்கான வாய்ப்பை ஒளிர செய்யும் என்பதில் சந்தேகமில்லை.
இதன் போட்டியாளர்களை குறித்து பார்க்கும் போது, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பியர் காரிலும், இந்த டயல்-கிளெச் ஆட்டோமேட்டிக் அளிக்கப்பட்டாலும், 1.5-லிட்டர் TiVCT பெட்ரோலில் மட்டுமே அளிக்கப்படுகிறது. தற்போதைக்கு, இந்த பிரிவில் உள்ள டாடா செஸ்ட் F-ட்ரோனிக் மட்டுமே டீசல் ஆட்டோமேட்டிக் அளிக்கும் கச்சிதமான சேடனாக உள்ளது. இதை குறித்து பார்த்தால், அது ஒரு AMT (ஆட்டோமேட்டேடு-மேனுவல் டிரான்ஸ்மிஷன்) ஆகும். இங்கே என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷனை கொண்டுள்ள வோல்க்ஸ்வேகன் நிறுவனம், இதை அளிக்கும் என்று நம்புவோம். எனவே எங்களோடு இணைந்திருங்கள்.
இதையும் படியுங்கள்