• login / register

கான்செப்ட் ‘26’-யை வோல்வோ காட்சிக்கு வைத்தது

வெளியிடப்பட்டது மீது nov 23, 2015 04:53 pm இதனால் sumit

  • 5 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

ஜெய்ப்பூர்:

கான்செப்ட் 26 என்ற ஆட்டோநோமஸ் காரின் சமீபகால தோற்றத்தை, வோல்வோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனது நிலையான கண்டுபிடிப்புகளின் மூலம் அறியப்படும் இந்த ஸ்வீடன் நாட்டு வாகன தயாரிப்பாளர், வீட்டிற்கும், அலுவலகத்திற்கும் இடையிலான பயணத் தூரத்தை கடக்க பயணிகள் எடுத்துக் கொள்ளும் சராசரியான நேரத்தை (26 நிமிடங்கள்) அடிப்படையாக கொண்டு, இந்த முறை தனது வாகனத்திற்கு பெயரிட்டுள்ளது. உலகமெங்கும் உள்ள எல்லா வாகன நிறுவனங்களும் ஆட்டோநோமஸ் தொழில்நுட்பத்தில் தங்களின் சிறந்த படைப்பையும், சாதாரண ஓட்டுநருக்கு கூட அளிக்க நினைக்கும் இந்த நேரத்தில், இந்த கார் காட்சிக்கு வருகிறது.

இந்த வாகன தயாரிப்பாளரை பொறுத்த வரை, இந்த காரில் சில காப்புரிமை பெற்ற மெக்கானிசம்கள் மற்றும் சரியான இடத்தில் அமைக்கப் பெற்ற அதன் சீட் வடிவமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது. மேலும், இந்த காரில் டிரைவ், கிரியேட் மற்றும் ரிலாக்ஸ் என்ற மூன்று மோடுகளைக் கொண்டு செயல்படுகிறது. இந்த கான்செப்ட் காரில் “டிரைவ்” மோடு மூலம் வழக்கமான கேபினை கொண்ட ஒரு காராகவும், “கிரியேட்” மற்றும் ”ரிலாக்ஸ்” ஆகிய மோடுகளில் இருக்கும் போது, அதிக வசதியான உட்புற அமைப்பை கொண்ட ஒரு காராக மாற்றம் அடைகிறது. டேஸ்போர்டின் உள்ளே இந்த இரு தொழில்நுட்பங்களுக்கான ஸ்டீயரிங் சிஸ்டத்தை பெற்று, அதற்கு ஈடாக ஒரு பெரிய டிஸ்ப்ளே அமைப்பு இருப்பதால், பொழுதுப்போக்கு / வேலை (அவர்களின் தேவைக்கு ஏற்ப) என உள்ளே இருப்பவர்களின் பயன்பாட்டிற்கு உதவுகிறது.

ஸ்டீயரிங்-மவுண்டேட் பெடல்கள் மூலம் ஆட்டோநோமஸ் சிஸ்டத்தை ஆக்டிவ் செய்ய முடியும். மேலும் இந்த பெடல்களை உள்ளே இருப்பவர் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ந்து பிடித்திருப்பதாக, அவற்றால் உணரப்பட்டால், இந்த கார் ஆட்டோமேட்டிக் மோடு நிலைக்கு மாறிவிடும். காரின் பயணிக்கு எப்போது வேண்டுமானாலும் இந்த சிஸ்டத்துடன் தொடர்பு கொள்ளவும், தேவைப்படும் போது அதை மேற்கொள்ளவும் முடியும்.

இந்த நிறுவனம் எதை செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்களோ, அதையே செய்கிறது என்பதை அந்நிறுவனத்தால் மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வோல்வோ உள்புற வடிவமைப்பிற்கான மூத்த வடிவமைப்பாளர் டிஷா ஜான்சன் கூறுகையில், ஒரு காரில் என்னென்ன செய்ய வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள் என்பதை குறித்து அவர்கள் ஆராய்ச்சி செய்து, கார் ஓட்டுவதை கடந்து, மக்களால் சில வித்தியாசமான காரியங்களை செய்யும் வகையிலான உட்புறத்தை அளிக்க மறுகட்டமைப்பு செய்துள்ளனர். இது குறித்து வோல்வோ நிறுவனத்தின் R&D பிரிவின் துணைத் தலைவர் பீட்டர் மெர்டென்ஸ் கூறுகையில், “இனிவரும் ஆண்டுகளில் மக்களுக்கு ஆட்டோநோமஸ் கார்களால் கிடைக்க உள்ள வசதிகள் மற்றும் சவால்கள் குறித்து புரிந்து கொள்ளும் வகையிலான மிக நீண்ட ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளோம். மேலும் எங்களின் SPA-யின் மூலம் என்ஜினியரிங் மற்றும் டிசைன் ஆகியவை மீதான எங்களின் சுமூகமான அணுகுமுறையை செயல்படுத்தி உள்ளோம். இதிலிருந்து கான்செப்ட் நிலையில் உள்ள இதை உடனடியாக எங்களால் உண்மை நிலைக்கு கொண்டு வரும் முடியும் என்பதை புரிந்து கொள்ளலாம்” என்றார்.

இதையும் படியுங்கள்

  • New Car Insurance - Save Upto 75%* - Simple. Instant. Hassle Free - (InsuranceDekho.com)
  • Sell Car - Free Home Inspection @ CarDekho Gaadi Store
வெளியிட்டவர்

Write your கருத்தை

Read Full News
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?