சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

Volvo C40 Recharge EV: ரூ.61.25 லட்சத்தில் இந்தியாவில் அறிமுகமானது

rohit ஆல் செப் 04, 2023 09:54 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
28 Views

இது XC40 ரீசார்ஜ் காரை அடிப்படையாக வைத்தே வடிவமைக்கப்பட்டுள்ளது, ஆனால் WLTP -யின் படி 530கிமீ வரை செல்வதற்கான ஆற்றலை அளிக்கும் வகையில் அப்டேட் செய்யப்பட்ட 78kWh பேட்டரி பேக்குடன் வருகிறது.

  • இந்த C40 ரீசார்ஜ் காரானது XC40 ரீசார்ஜ் -க்கு பிறகு இந்தியாவில் வால்வோவின் இரண்டாவது EV காராகும்.

  • XC40 ரீசார்ஜில் இருந்து தோரின் (ஹாலிவுட் திரைப்பட கதாபாத்திரம்) சுத்தியல் வடிவ LED DRL -கள் மற்றும் அலாய் வீல்களை வாங்குகிறது, ஆனால் ஒரு தனித்துவமான சாய்வான ரூஃபை பெறுகிறது.

  • 9 இன்ச் டச் ஸ்கிரீன், பனோரமிக் கிளாஸ் ரூஃப் மற்றும் ADAS ஆகியவை இந்த காரில் உள்ளன.

  • இது 150kW DC ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது, இது 27 நிமிடங்களில் அதன் பேட்டரியை 10-80 சதவீதம் வரை டாப் அப் செய்யும்.

  • டூயல்-மோட்டார் AWD பவர்டிரெய்ன் 408PS செயல்திறன் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.

ஜூன் 2023 -ல் இந்த கார் இந்தியாவில் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, தி வால்வோ C40 ரீசார்ஜ் இப்போது ரூ.61.25 லட்சம் (அறிமுக, எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா) விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. XC40 ரீசார்ஜ் -ன் இது கூபே வெர்ஷனாகும், இது அடிப்படையில் ஒரு மின்சார எஸ்யூவி. வோல்வோ C40 ரீசார்ஜை செப்டம்பர் இறுதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யத் தொடங்கும்.

ஸ்போர்ட்டியர் லுக்ஸ்

மூடிய கிரில் மற்றும் தோரின் சுத்தியல் வடிவ LED DRL -களை உள்ளடக்கிய XC40 ரீசார்ஜின் முன்புறம் C40 ரீசார்ஜின் முன்புறம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளது. XC40 ரீசார்ஜில் இருப்பதை போன்ற அதே 19-இன்ச் அலாய் வீல்களைப் பெற்றாலும், C40 ரீசார்ஜின் முன்பக்கத்தில் உள்ள முக்கிய வேறுபாடு சாய்வான ரூஃப் மற்றும் ஒட்டுமொத்த ஸ்போர்ட்டியர் தோற்றத்திற்கான ஸ்போர்ட்டியர் பின்புற முனையாகும். டெயில்கேட்டில் இயங்கும் ஒரு ஃபங்கி ஜோடி LED டெயில்லைட்ஸ் ஆகியவை எஸ்யூவி கூபேயின் பின்புறத்தில் உள்ள சிறப்பம்சங்கள்.

வழக்கமான உட்புறம்

மற்ற வால்வோ கார்களை போலவே, C40 ரீசார்ஜ் கேபினும் XC40 ரீசார்ஜ் போன்ற அதே அ மினிமலிஸ்ட்டிக்கான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முற்றிலும் லெதர் இல்லாத உட்புறத்தைப் பெறும் கார் தயாரிப்பாளரின் முதல் மாடல் இதுவாகும். இந்த EV -யின் கேபினில் பகுதியளவு மறுசுழற்சி செய்யப்பட்ட அப்ஹோல்ஸ்டரி மற்றும் கார்பெட் ஆகியவை உள்ளன.

காரில் உள்ள வசதிகள்

வால்வோ EV ஆனது 9 -இன்ச் வெர்டிகல்-ஓரியன்டட் டச் ஸ்கிரீன் யூனிட், டிரைவருக்கான 12.3-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ஹீட்டட் மற்றும் கூலிங் செயல்பாட்டை கொண்ட பவர்டு முன் இருக்கைகள், ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல் மற்றும் 13-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றுடன் வருகிறது.

பாதுகாப்பை பொறுத்தவரையில், வால்வோ 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஹில்-அசிஸ்ட் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், கொலிஷன் அவாய்டன்ஸ் மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் டிடெக்ஷன் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS) தொகுப்பை கொண்டுள்ளது.

வெற்றிக்கான மின்சார சக்தி

C40 ரீசார்ஜ் ஆனது 78kWh பேட்டரி பேக்கை கொண்டிருக்கிறது, WLTP -யால் சான்றளிக்கப்பட்ட 530கிமீ ரேஞ்சை இது வழங்குகிறது. இது 408PS மற்றும் 660Nm -ஐ உருவாக்கும் டூயல்-மோட்டார் AWD செட்டப்பை இது கொண்டுள்ளது, இது 4.7 வினாடிகளில் 0-100கிமீ/மணி எட்டுவதற்கு இது போதுமானது.

வோல்வோ 27 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு உதவும் 150kW வேகமான சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் வசதியை இதில் கொடுத்துள்ளது.

போட்டியாளர்கள்

வோல்வோவின் எலெக்ட்ரிக் எஸ்யூவி கூபேக்கு நேரடி போட்டியாளர்கள் இல்லை. ஹூண்டாய் ஐயோனிக் 5, கியா EV6, BMW i4 மற்றும் அதன் சொந்த உடன்பிறப்பு, XC40 ரீசார்ஜ் போன்ற இதே விலையில் கிடைக்கும் EV கார்கள் இருக்கின்றன.

Share via

Write your Comment on Volvo சி40 ரீசார்ஜ்

மேலும் ஆராயுங்கள் on வோல்வோ சி40 ரீசார்ஜ்

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை