இந்தியாவில் Volvo C40 Recharge EV டெலிவரிகள் தொடங்கியது
published on செப் 15, 2023 12:54 pm by rohit for வோல்வோ c40 recharge
- 65 Views
- ஒரு கருத்தை எழுதுக
முதல் இரண்டு வோல்வோ C40 ரீசார்ஜ் கார்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் டெலிவரி செய்யப்பட்டன
-
வோல்வோ C40 ரீசார்ஜ் காரின் விலையை ரூ. 61.25 லட்சத்திலிருந்து நிர்ணயித்துள்ளது (அறிமுக விலை எக்ஸ்-ஷோரூம் இந்தியா முழுவதும்).
-
இந்த EV,XC40 ரீசார்ஜ் போன்ற அதே இயங்குதளத்தை அடிப்படையாகக்ன் கொண்டது மற்றும் அதன் கூபே வெர்ஷனாகவும் உள்ளது.
-
78kWh பேட்டரி பேக் 530 கி.மீ WLTP -யால் சான்றளிக்கப்பட்ட ரேஞ்சை கொண்டுள்ளது.
-
9 இன்ச் டச் ஸ்க்ரீன், டிரைவருக்கான 12.3 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் ADAS உள்ளது.
வோல்வோ C40 ரீசார்ஜ் செப்டம்பர் 4 ஆம் தேதி விற்பனைக்கு வந்தது, கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு, கார் தயாரிப்பு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு EV -யை டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது. வோல்வோ EV -யின் முதல் இரண்டு யூனிட்கள் கேரளா மற்றும் தமிழகத்தில் டெலிவரி செய்யப்பட்டன. இது XC40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் SUVயின் கூபே பதிப்பாகும், மேலும் இது ரூ.61.25 லட்சம் (அறிமுக விலை எக்ஸ்-ஷோரூம் இந்தியா முழுவதும் ) விலையில் சிங்கிள் ஃபுல்லி லோடட் வேரியன்ட்டாக விற்பனை செய்யப்படுகிறது.
ஆற்றல் அளிப்பது எது ?
வோல்வோ, C40 ரீசார்ஜை 78kWh பேட்டரி பேக் உடன் வழங்கியுள்ளது, இது WLTP-உரிமை கோரும் பயணதூர வரம்பான 530 கி.மீ மற்றும் ICAT-உரிமை கோரும் பயணதூர வரம்பான 683 கி.மீ வழங்குகிறது. 408PS மற்றும் 660Nm என மதிப்பிடப்பட்ட டூயல் மோட்டார் AWD செட்டப்புடன் வரும் இந்த EV 0-100 kmph வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும்.
27 நிமிடங்களில் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய உதவும் 150kW ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது. வோல்வோ C40 ரீசார்ஜுடன் 11kW சார்ஜரை போர்டில் வழங்குகிறது.
இதையும் பாருங்கள்: நேர்த்தியான தோற்றம் மற்றும் அழகான கேபினுடன் அப்டேட் ஆகும் Tesla Model 3
தொழில்நுட்பங்கள் நிறைந்துள்ளது
C40 ரீசார்ஜின் உபகரணங்கள் பட்டியலில் 9 இன்ச் வெர்டிகல் ஓரியன்டட் டச் ஸ்க்ரீன், ஹீட்டட் மற்றும் கூலிங் செயல்பாடு கொண்ட சக்திவாய்ந்த முன்புற இருக்கைகள், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டிரைவருக்கான 12.3 இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, 13 ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவை உள்ளன. முன்பக்கத்தில் (31 லிட்டர்), பின்புறத்தில் (413 லிட்டர்) லக்கேஜ் இடம் கிடைக்கும்.
ஏழு ஏர்பேக்குகள், ஹில்-அசிஸ்ட், 360 டிகிரி கேமரா மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், கொலிஷன் அவாய்டன்ஸ் மற்றும் பிளைண்ட்-ஸ்பாட் டெடெக்ஷன் போன்ற அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவற்றை வழங்குவதன் மூலம் வோல்வோ EV பயணிகளை பாதுகாப்பாக வைத்திருப்பதை உறுதி செய்கிறது.
போட்டியாளர்கள் யார்?
இந்தியாவில் வோல்வோவின் இரண்டாவது EV மாடலுக்கு நேரடி போட்டியாளர்கள் யாரும் இல்லை, ஆனால் இது BMW i4, கியா EV6, ஹூண்டாய் அயோனிக் 5 மற்றும் வோல்வோ XC40 ரீசார்ஜ் ஆகியவற்றிற்கு மாற்றாக உள்ளது.
மேலும் படிக்க: உலகளவில் கியா EV5 காரை அறிமுகப்படுத்துகிறது,: 2025-ம் ஆண்டுக்குள் இந்தியா வரலாம்
மேலும் படிக்க: வோல்வோ C40 ரீசார்ஜ் ஆட்டோமெட்டிக்
0 out of 0 found this helpful