இந்திய ஆடம்பர கார் சந்தையின் 10 சதவீத பங்கை கையகப்படுத்த வால்வோ திட்டம்
published on ஆகஸ்ட் 03, 2015 12:25 pm by manish
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஸ்வீடன் நாட்டு வாகன உற்பத்தியாளரான வால்வோவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவில் அந்நிறுவனத்தின் புதிய நான்கு மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இதன்மூலம் வரும் 2020 ஆம் ஆண்டிற்குள் இந்திய ஆடம்பர கார் சந்தையின் 10 சதவீத பங்கை கையகப்படுத்த வால்வோ திட்டமிட்டுள்ளது. வால்வோ ஆட்டோ இந்தியாவின் நிர்வாக இயக்குநர் டாம் வான் போன்ஸ்டோர்ப் கூறுகையில், “கடந்தாண்டு எங்களுக்கு கொஞ்சம் வளர்ச்சி ஏற்பட்டது. அந்த வளர்ச்சியை தொடர விரும்புகிறோம். நாங்கள் 30 சதவீத வளர்ச்சியை எட்டி, 1,200 யூனிட்களை விற்று தீர்த்தோம்.” என்றார். அந்நிறுவனத்தின் முதல் டீலர்ஷிப் சமீபத்தில் தான் கொல்கத்தாவில் திறக்கப்பட்டது.
அவர் மேலும் கூறுகையில், நாங்கள் 10 சதவீத பங்கை பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம். தற்போது 4.5 சதவீத பங்கை மட்டுமே கொண்டுள்ளோம். டீலர்ஷிப்பை விரிவுப்படுத்துதல் மற்றும் புதிய வாகன அறிமுகங்களின் மூலம் அந்த இலக்கை நாங்கள் எட்ட முடியும். வால்வோவை பொறுத்த வரை, இந்திய சந்தை மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்று.
2008ம் ஆண்டு இந்திய சந்தைக்குள் வியாபார தடம் பதித்த வால்வோ, மற்ற ஆடம்பர கார் தயாரிப்பாளர்களான பிஎம்டபிள்யூ, மெர்ஸிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஆகியோருடன் போட்டியிட்டு வருகிறது.
வான் போன்ஸ்டோர்ப் கூறுகையில், “எங்களிடம் பல புதிய தயாரிப்புகளும், பல தரப்பட்ட வகையான மாடல்களும் உள்ளன. அடுத்த இரண்டு ஆண்டுகளில், 5 புதிய கார்களில் மூன்றும், சில வகைகளையும் அறிமுகப்படுத்த உள்ளோம்.
எங்களுக்கு உள்ள ஜெர்மன் போட்டியாளர்களுடன் விலையிலும், தரத்திலும் நிகராக இருக்கவும், எங்கள் தயாரிப்புகளில் பாதுகாப்பு மற்றும் மனித-மையப்படுத்துதலை மேம்படுத்தவும் விரும்புகிறோம் என்றார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த நோக்கத்தை அடைய நிறுவனத்தின் டீலர்ஷிப் பலத்தை 20 ஏபிடியாக உயர்த்தி, 4 புதிய மாடல்களை சேர்க்க உள்ளோம். கடந்த மாத துவக்கத்தில் இந்நிறுவனம் எஸ்60-யை சேர்ந்த டி6 வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. வால்வோவின் ஆடம்பர மாடல்களின் பட்டியல் பின்வருமாறு: வி40 ஹாட்ச்பேக், வி40 கிராஸ் கன்ட்ரி, எக்ஸ்சி60 (ஆடம்பர எஸ்யூவி) மற்றும் எக்ஸ்சி90 (ஒரு 7-சீட் ஆடம்பர எஸ்யூவி), மற்றும் ரூ.25 லட்சத்திற்குள் அடங்கும் காரான வி40.