Volkswagen Virtus இந்தியாவில் 50,000 கார்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்தது
published on அக்டோபர் 22, 2024 07:14 pm by dipan for வோல்க்ஸ்வேகன் விர்டஸ்
- 33 Views
- ஒரு கருத்தை எழுதுக
விர்ட்டஸ் மே 2024 முதல் அதன் பிரிவில் சிறந்த விற்பனையாளராக உள்ளது. சராசரியாக மாதத்திற்கு 1,700 -க்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.
-
ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஜூன் 2022 ஆண்டில் ஃபோக்ஸ்வேகன் வென்டோ -க்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்டது.
-
கடந்த 5 மாதங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் 1,500 விற்பனையைத் தாண்டியுள்ளது.
-
விர்ட்டஸ் ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களுடன் இரண்டு டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
-
குளோபல் NCAP 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைக் கொண்டுள்ளது.
-
விலை ரூ.11.56 லட்சம் முதல் ரூ.19.41 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) உள்ளது.
ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் விற்பனைக்கு வந்து 2 ஆண்டுகளுக்கு சற்று மேல் ஆகிறது. இப்போது இந்தியாவில் 50,000 யூனிட்களின் விற்பனை மைல்கல்லை கடந்துள்ளது. அதன் இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ஜெர்மன் மார்க்கெட்டின் இரண்டாவது காரான விர்ட்டஸ் சமீபத்திய மாதங்களில் சந்தையில் மிகவும் விரும்பப்படும் காம்பாக்ட் செடான்களில் ஒன்றாகும். அதன் வேறு சில சாதனைகளைப் பார்ப்போம்:
ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ்: மற்ற குறிப்பிடத்தக்க சாதனைகள்
விர்ட்டஸ் மே 2024 முதல் அதன் பிரிவில் சிறந்த விற்பனையாளராக உள்ளது. சராசரியாக மாதத்திற்கு 1,700 யூனிட்கள் விற்பனையாகின்றன.
அது மட்டுமல்ல விர்ட்டஸ் மற்றும் டைகுன் கார்களின் விற்பனை இந்த FY25 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இரண்டு கார்களும் இந்தியாவில் ஃபோக்ஸ்வேகனின் மொத்த விற்பனையில் சுமார் 18.5 சதவீத பங்களிப்பை வழங்கியுள்ளன.
மேலும் பார்க்க: 7 நிஜ வாழ்க்கைப் படங்களில் புதிய ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் GT லைன் வேரியன்ட்டை பாருங்கள்
ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் -ன் பிரபலத்திற்கான காரணங்கள்
விர்ட்டஸின் பிரபலத்திற்கு ஒரு முக்கிய காரணம் இது பிரிவில் இரண்டு சக்திவாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களை கொண்டுள்ளது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் ஆப்ஷன் |
1-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் |
பவர் |
115 PS |
150 PS |
டார்க் |
178 Nm |
250 Nm |
டிரான்ஸ்மிஷன்* |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT |
*எம்டி = மேனுவல் டிரான்ஸ்மிஷன், ஏடி = ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன், டிசிடி = டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன்
ஃபோக்ஸ்வேகன் பல பிரீமியம் டச்களுடன் வருகிறது. 10.1-இன்ச் டச் ஸ்கிரீன், 8-இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே மற்றும் சிங்கிள்-பேன் சன்ரூஃப் ஆகியவை உள்ளன. இது புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளையும் கொண்டுள்ளது.
இது 2023 ஆண்டில் குளோபல் NCAP ஆல் கிராஷ்-டெஸ்ட் செய்யப்பட்டது. இது 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. செடானில் உள்ள பாதுகாப்புக்காக் 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC), ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ISOFIX சைல்டு சீட் மவுண்ட்கள், ரெயின்-சென்ஸிங் வைப்பர்கள் மற்றும் பின்புற பார்க்கிங் கேமரா ஆகியவை உள்ளன.
ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ்: விலை மற்றும் போட்டியாளர்கள்
ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் -ன் விலை ரூ. 11.56 லட்சம் முதல் ரூ. 19.41 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) வரை உள்ளது. இது ஸ்கோடா ஸ்லாவியா, ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி மற்றும் மாருதி சியாஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக உள்ளது.
கார் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற வேண்டுமா? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் ஆன் ரோடு விலை
0 out of 0 found this helpful