ஆடி, சீட், ஸ்கோடா, வோல்க்ஸ்வேகன் ஆகியவற்றில் ஊழல்: பாதிக்கப்பட்ட கார்களை வோல்க்ஸ்வேகன் அடையாளம் காண்கிறது
published on நவ 18, 2015 01:46 pm by nabeel
- 11 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
தனது தவறுகளை சரி செய்ய வோல்க்ஸ்வேகன் நிறுவனம் கடினமாக உழைத்து வருகிறது; இல்லாவிட்டால் அது போல தெரிகிறது எனலாம். அந்நிறுவனம் ஏற்படுத்திய மாசுப்படுத்தலுக்காக விதிக்கப்பட்ட வரிகள், வாடிக்கையாளர்களின் மீது செலுத்தப்படாமல், இந்த பிராண்டு மீது மட்டும் அமைவதை உறுதி செய்யும் வகையில், பல்வேறு துறையினருடன் அந்நிறுவனம் செயலாற்றி வருகிறது.
இதுவரை நடந்துள்ள விசாரணையின் மூலம் 2016 ஆம் ஆண்டு மாடலை சேர்ந்த சுமார் 4,30,000 கார்கள் மாசுக் கட்டுப்பாட்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை எவ்வளவு பழைய வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தீர்மானிக்க பல்வேறு துறையினருடன், அந்நிறுவனத்தினர் செயலாற்றி வந்தாலும், 8,00,000 என்ற எதிர்பார்க்கும் எண்ணிக்கை உடன் ஒப்பிட்டால், இந்த எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இனிவரும் சில வாரங்களில், இந்த வாகன தயாரிப்பாளரின் இணையதளத்தில், காரின் வெஹிக்கிள் ஐடென்டிஃபிகேஷன் நம்பரை (VIN) அளித்து, தங்களின் வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை வாடிக்கையாளர்கள் சோதித்து தீர்மானித்து கொள்ள முடியும். இது தொடர்பாக தாங்கள் கண்டறியும் காரியங்களை சம்பந்தப்பட்ட துறையினருக்கு தொடர்ந்து அறிவித்து வரும் இந்த ஜெர்மன் கார் தயாரிப்பாளர் நிறுவனம், ஜெர்மன் ஃபிடரல் வெஹிக்கிள் மற்றும் டிரான்ஸ்போர்ட் அத்தாரிட்டி (KBA) உடன் பாதிக்கப்பட்ட வாகனங்களில் வெளியாகும் புதிய CO2 அளவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ள மாடல்கள் பின்வருமாறு:
1. ஆடி A1
2. சீட் இபிசா
3. சீட் டோலிடோ
4. சீட் லியோன்
5. ஸ்கோடா ஃபாபியா
6. ஸ்கோடா ரேஃபிட்
7. ஸ்கோடா அக்டிவா
8. ஸ்கோடா எட்டி
9. ஸ்கோடா சூப்பர்ப்
10. வோல்க்ஸ்வேகன் போலோ
11. வோல்க்ஸ்வேகன் திகுயன்
12. வோல்க்ஸ்வேகன் ஜிட்டா
13. வோல்க்ஸ்வேகன் சிரோக்கோ
14. வோல்க்ஸ்வேகன் கோல்ஃப்
15. வோல்க்ஸ்வேகன் தூரன்
16. வோல்க்ஸ்வேகன் பாஸ்அட்
17. வோல்க்ஸ்வேகன் CC
18. வோல்க்ஸ்வேகன் காடி
19. வோல்க்ஸ்வேகன் T6
இதையும் படியுங்கள்