வோல்க்ஸ்வேகன் 2.0 லிட்டர் டீசல் என்ஜினை இந்தியாவில் தயாரிக்க யோசித்து வருகிறது
published on பிப்ரவரி 02, 2016 05:47 pm by sumit
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தங்களது 2.0 லிட்டர் டீசல் என்ஜினை இந்தியாவில் உள்ள தங்களது சக்கன் தொழிற்சாலையில் தயாரிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தற்போது இந்த என்ஜின், இந்தியாவில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஸ்கோடா ஆக்டேவியா , ஆடி A3 உட்பட பல கார்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது . கடந்த வருடம் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் தங்களது சக்கன் தொழிற்சாலையில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை தயாரிக்க தொடங்கிய போது இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த 2.0 லிட்டர் டீசல் என்ஜின் BS-VI மாசு கட்டுப்பாடு சட்ட விதிகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட விதிகள் இந்தியாவில் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஆகவே இந்நிறுவனம் இந்த சட்ட விதிமுறைகள் குறித்து சிறிதும் கவலை கொள்ள தேவை இல்லை . இந்தியாவில் BS-V மாசு கட்டுபாட்டு விதிகளை விட்டுவிட்டு நேரடியாக BS-VI கட்டுபாட்டு விதிகள் 2020 ஆம் ஆண்டு வாக்கில் நடைமுறைக்கு கொண்டு வரப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2.0 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்கள் சார்ந்த பிரிவிற்கு இந்தியாவில் பெருகி வரும் வரவேற்பை பார்க்கையில், இந்த 2.0 டீசல் என்ஜின் உற்பத்திக்கு வோல்க்ஸ்வேகன் நிறுவனம் செய்ய உள்ள மிகப்பெரிய முதலீடு நியாயமானது என்றே தோன்றுகிறது. இவ்வாறு என்ஜின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுவதால் வாகன உற்பத்தி செயல்பாடுகள் விரைவாக நடைபெறுவது மட்டுமின்றி உதிரி பாகங்களும் உடனுக்குடன் கிடைக்கும் நிலை உருவாகும். EA288 என்று இன்னொரு பெயர் கொண்ட இந்த 2.0 லிட்டர் டீசல் என்ஜின் புதிய தலைமுறை ஆடி A4 மற்றும் ஸ்கோடா சுபெர்ப் கார்களில் பொருத்தப்படலாம் என்று தெரிகிறது. MQB ப்லேட்பார்மை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் வாகனங்களில் இந்த EA288 எஞ்சின்கள் தான் பொருத்தப்படுகின்றன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
வோல்ஸ்வேகன் நிறுவனமும் தங்களது புதிய அமேயோ கார்களின் டீசர்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் ஆவலை தூண்டி வருகிறது. 2016 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார்கள் காட்சிக்கு வைக்கப்படுவது உறுதி என்றும் கூறப்படுகிறது. இரண்டு நான்கு - சிலிண்டர் 1.5 லிட்டர் என்ஜின் மூலம் சக்தியூட்டப்பட உள்ளது இந்த புதிய அமேயோ கார்கள். இதே என்ஜின் தான் முறையே வெண்டோ மற்றும் போலோ கார்களின் 90PS மற்றும் 105 PS வேரியன்ட்களில் பயன்பாட்டில் உள்ளது என்பது கூடுதல் செய்தியாகும்.
மேலும் வாசிக்க