• English
  • Login / Register

வோக்ஸ்வேகன் டீசல் கார்களை இந்திய அரசாங்கம் பரிசோதனை செய்யும்

published on டிசம்பர் 04, 2015 04:43 pm by manish

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

வோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் 3.23 லட்சம் கார்களை திரும்பப் பெறப் போவதாக அறிவித்ததை அடுத்து, இந்திய அரசாங்கம் இந்நிறுவனத்தின் டீசல் வாகனங்களின் தரத்தைப் பற்றிய பரிசோதனையை மேற்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் டீசல் வாகனங்கள் இந்திய மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி உள்ளனவா என்று சோதனை செய்யப்படும், என்று கனரக தொழில் மற்றும் பொது நிறுவனங்களின் அமைச்சரான திரு. ஆனந்த் கீதே, தெரிவித்துள்ளார். வோக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பிய பின், தனது தவறை ஒத்துக் கொண்ட பின்னரே இந்த நிறுவனம் வாகனங்களைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது, என்று அவர் மேலும் குறிப்பிட்டார். தேவையென்றால், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்.

திரு. கீதே, “இந்தியாவில் உள்ள அனைத்து டீசல் பயணிகள் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை அளவை, அடுத்த ஆறு மாதங்களில் சோதனை செய்யப் போகிறோம்,” என்று கூறினார்.

கனரக தொழில் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளரான அம்புஜ் ஷர்மா, PTI உடனான ஒரு உரையாடலில், “இந்தியாவில் உள்ள அனைத்து டீசல் வகை பயணிகள் வாகனங்களும் மாசு கட்டுப்பாட்டை மீறாமல் உள்ளனவா என்று, இந்த மாத இறுதியில் இருந்து சோதனை செய்ய ஆரம்பிக்க உள்ளோம். அடுத்த 6 மாதங்களில், ARAI அமைப்பு அனைத்து டீசல் பயணிகள் வாகனங்களையும் சோதனை செய்து முடித்து விடும்,” என்று கூறினார்.

1.2 லிட்டர், 1.5 லிட்டர், 1.6 லிட்டர் மற்றும் 2.0 லிட்டர் டீசல் இஞ்ஜின்களை உள்ளடக்கிய EA 189 டீசல் இஞ்ஜின் வகையில், மோசடி சாஃப்ட்வேர் பொருத்தப்பட்டதால் இந்த சர்ச்சையில் சிக்கி உள்ளன. வோக்ஸ்வேகன் குரூப் இந்தியா நிறுவனம், கனரக தொழில்கள் அமைச்சகம் மற்றும் ARAI அமைப்பிடமும் இந்த சர்ச்சைக்கான தீர்வுகளை வழங்கியுள்ளது. தனது கார்களைத் தவிர, இந்நிறுவனத்திற்கு சொந்தமான வேறு பிராண்ட்களான ஸ்கோடா மற்றும் ஆடி கார்களையும் இந்நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொள்ளும். வோக்ஸ்வேகன் நிறுவனம், இந்த சர்ச்சைக்கான தீர்வுகளை ARAI மட்டும் கனரக தொழில் அமைச்சகத்திற்கு பரிந்துரைத்து கொடுத்துள்ள பிரோபோசலுக்கு, சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து ஒப்புதல் கிடைத்த பிறகு, தனது வாகனங்களைத் திரும்பப் பெரும் வேலையை ஆரம்பிக்கும். மேற்சொன்ன ஒப்புதல் வந்த பின், இந்நிறுவனம் அதன் கார் உரிமையாளர்கள் மற்றும் அதன் துணை நிறுவனங்களையும் தொடர்பு கொள்ளும்.

2008 –ஆம் ஆண்டு முதல் 2015 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை உற்பத்தியான வாகனங்களை, இந்நிறுவனம் திரும்பப் பெற்றுக் கொள்ளும். 36500 ஆடி கார்கள், 88700 ஸ்கோடா கார்கள் மற்றும் 198500 வோக்ஸ்வேகன் கார்கள் போன்றவை இந்த காலகட்டத்தில் உற்பத்தியானவை ஆகும்.

மேலும் வாசிக்க

சோதனைக்காக, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட வோல்க்ஸ்வேகன் 1.0L போலோ TSI

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience