சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

வோல்க்ஸ்வேகன் கச்சிதமான சேடனின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்த ஒரு ஆய்வு

published on ஜனவரி 04, 2016 01:02 pm by raunak

ஏறக்குறைய இந்த (கடந்த) ஆண்டின் இடைப்பட்ட நாட்களில் கச்சிதமான சேடன், முதல் முறையாக வேவுப் பார்க்கப்பட்ட நிலையில், கடந்த மாதம் இந்த வாகனத்தின் வெளியீடு குறித்து வாகன தயாரிப்பாளர் தரப்பில் அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பிற்கு பிறகு, வரும் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் வகையில், கடைசிக்கட்ட சோதனையில் ஈடுபடுத்தப்பட்டதால், எண்ணற்ற முறை இந்த வாகனம் வேவுப் பார்க்கப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் வேவுப் பார்க்கப்பட்ட போது, அதன் உள்-வெளிப்புறத்தில் உள்ள எண்ணற்ற சிக்கலான தகவல்களை அறிய முடிந்தது. எனவே இதில் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் என்ற முறையில், என்னென்ன அளிக்கப்பட உள்ளன என்பதை காண்போம்.

இந்த கச்சிதமான சேடன் (CS), போலோவின் பிளாட்பாமை (தெளிவாக!) அடிப்படையாக கொண்டிருக்கும் என்று கூறப்படும் நிலையில், தோற்றத்திலும் ஏறக்குறைய அதை ஒத்து காணப்படுகிறது. சோதனைக்கான வாகனம் அதிகளவில் மூடப்பட்ட நிலையில் இருந்த போதும், போலோவிடம் இருந்து அநேக காரியங்களை பெற்றுள்ளதை எளிதாக கண்டறிய முடிகிறது. அதே நேரத்தில் டேஸ்போர்டும் இதற்கு ஒத்துள்ளது. பின்புறத் தோற்றம் குறிப்பாக குட்டையாக இருப்பது, 4 மீட்டருக்கு குறைவாக அமைந்து வரி சலுகை பெறும் முயற்சியாக இருக்கலாம்.

ஹெட்லைட்களின் தோற்றத்தை பார்த்தால், நேரடியாக போலோவிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. அதேபோல, புதுப்பிக்கப்பட்ட வென்டோ / ஜெட்டாவில் இருக்கும் கிரிலை போலவே, இதிலும் காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் பின்புற கால் பகுதி (குவாட்டர்) விண்டோ உள்ளிட்டவை கொண்ட விண்டோ லைன் ஏறக்குறைய ஒரே போல அமைந்திருப்பதால், கதவுகள் அப்படியே போலோவின் ஒரு நகலாக காட்சி அளிக்கிறது. கேபினை குறித்து பார்க்கும் போது, மேலே குறிப்பிட்டது போல, அதை ஒத்ததாக காணப்படுகிறது. உலகளாவிய புதுப்பிக்கப்பட்ட போலோவில் உள்ளது போல, சோதனைக்கான வாகனத்திலும் ஒரு டச்ஸ்கிரீன் யூனிட்டை காண முடிகிறது. இருப்பினும், இந்தியாவிற்கான போலோ அல்லது வென்டோவில், இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் தவிர, எஞ்சியுள்ள அம்சங்கள் அனைத்தும், போலோ / வென்டோவை ஒத்ததாக உள்ளன. புதிய ஃபிளாட்-பாட்டம் ஸ்டீயரிங் வீல், கிளைமேட் கன்ட்ரோல், குரூஸ் கன்ட்ரோல் (எதிர்பார்க்கப்படுகிறது), எலக்ட்ரோனிக்கலி அட்ஜெஸ்டபிள் மற்றும் மடக்கக் கூடிய வெளிபுற பின்புற வ்யூ மிரர் மற்றும் பல அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் வென்டோ மற்றும் போலோவில் உள்ளதை போல, இந்த கச்சிதமான சேடனும் தரமான விளங்கும் வகையில், தரமான இரட்டை முன்பக்க ஏர்பேக்குகளை கொண்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

மேலும் வாசிக்க

r
வெளியிட்டவர்

raunak

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை