வோல்க்ஸ்வேகன் பீட்டில் கார்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகம்
published on நவ 02, 2015 06:10 pm by manish
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்:
உண்மையான மக்களின் காரான ( நாங்கள் டாடா நேனோ பற்றி சொல்லவில்லை ) வோல்க்ஸ்வேகன் பீட்டில் கார்களின் இந்திய அறிமுகம் நெருங்கி வருவதாகவே தோன்றுகிறது. முன்னதாக தர மற்றும் பாதுகாப்பு சான்றிதழை இந்திய தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து பெறுவதற்காக ஒரு பீட்டில் காரை மட்டும் இறக்குமதி செய்திருந்தது வோல்க்ஸ்வேகன் நிறுவனம். ஆனால் இப்போது கணிசமான எண்ணிக்கையில் பீட்டில் இறக்குமதி செய்யப்படுவதைப் பார்க்கும் போது விரைவில் இந்த கார்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றே தோன்றுகிறது. இந்த கார்கள் CBU வழியில் (முழுதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்குள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும் முறை ) இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய பீட்டில் கார்கள், வோல்க்ஸ்வேகன் பாரம்பரிய வடிவமைப்பையும், டாக்டர். பெர்டினன்ட் போர்ஷ் வடிவமைத்த உண்மையான முந்தைய பீட்டில் கார்களின் ஸ்டைலையும் தக்கவைத்துக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது.
இந்த தகவல்கள் காரின் இறக்குமதி சமயத்தில் வெளியாகும் குறிப்புக்களில் இருந்து பெறப்பட்டவை. மேலும், 1.4 லிட்டர் TSI பெட்ரோல் இஞ்சின் இந்த புதிய பீட்டில் கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் என்பதும் அறியப்படுகிறது. இதே என்ஜின் தான் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் ஜெட்டா செடான் கார்களிலும் புழக்கத்தில் உள்ளது என்பதும் இந்த ஜெட்டா காரில் பயன்படுத்தப்படும் PQ35 பிளேட்பார்ம் தான் இந்த புதிய பீட்டில் கார்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதும் கூடுதல் செய்தியாகும்.
இந்த புதிய பீட்டில் கார்கள் சமீபத்தில் அறிமுகமான அபர்த் 595 காம்பிடிசியோன் மற்றும் மினி கூப்பர் கார்களுடன் போட்டியிடும் என்றும் தெரிகிறது. இந்த பீட்டில் கார்கள் வோல்க்ஸ்வேகன் கார்களின் மிகவும் பெருமை வாய்ந்த ப்ரீமியம் கார்கள் என்பதால் இந்த கார்கள் இந்நிறுவனத்தின் மற்ற கார்கள் மீதான நன்மதிப்பையும் பெருமளவு உயர்த்தும் என்று வோல்க்ஸ்வேகன் நம்புகிறது. இந்த குறிப்பிட்ட மாடலின் மீது ஒரு நியாயமான விற்பனை எதிர்பார்ப்பையே வோல்க்ஸ்வேகன் கொண்டிருக்கும் என்றும் சொல்லலாம்.
மூலம்: சௌபா
இதையும் படியுங்கள் :
0 out of 0 found this helpful