கச்சிதமான சேடன் வோல்க்ஸ்வேகன் அமியோ: மூடப்படாத நிலையில் உளவுப் பார்க்கப்பட்டது
published on ஜனவரி 25, 2016 11:16 am by manish for வோல்க்ஸ்வேகன் அமினோ
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
நேற்று பெயரிடப்பட்டதை தொடர்ந்து வோல்க்ஸ்வேகன் அமியோ, எந்த திரைமறைவும் இல்லாமல் இப்போது முழுமையாக உளவுப் பார்க்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி தீர்மானிக்கப்பட்டுள்ள இந்த காரின் அதிகாரபூர்வமான சர்வதேச அளவிலான அரங்கேற்றம் மற்றும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் இடம் பெற செய்தல் ஆகியவை நடைபெறும் முன்னதாகவே, இந்த உளவுப்படங்கள் இணையதளத்தை எட்டியுள்ளன. இவை இக்காரின் பின்பக்க விபரங்களை தெளிவுப்படுத்துவதோடு, இந்த குறிப்பிட்ட மாடல் எப்படி ஒரு TDI வகையில் சேர்க்கப்படுகிறது என்பது தொடர்பான தெளிவான தகவல்களையும் இந்த உளவுப்படங்கள் மூலம் அறிய முடிகிறது. இதன் பின்பக்கத்தை பார்த்தால், பிராண்டிற்கு புதிய ஒரு டெயில்கேட்டை கொண்டுள்ளது. வோல்க்ஸ்வேகனின் செக் குடியரசு துணை நிறுவனமான ஸ்கோடாவிடம் இருந்து பெறப்பட்ட ரேபிட் சேடனிடம் இருந்து, இதன் பூட் லிட்டின் வடிவமைப்பை பகிர்ந்துள்ளது. இதில் எளிதாக கண்டறிய கூடிய நம்பர் பிளேட்டின் பக்கத்தில் செல்லும் ஒருங்கிணைந்த வரிகளை வைத்தே, இது ஸ்கோடா ரேபிட் காரில் இருந்து அப்படியே எடுக்கப்பட்டது என்ற ஒரு உறுதியான முடிவுக்கு ஒருவர் வந்துவிடலாம்.
முந்தைய உளவுப்படங்கள் மூலம் எழுந்த யூகங்களை வைத்து பார்த்தால், ஒப்பீட்டளவில் இதன் பூட் பெரியதாக அமைந்து, இந்த கார் ஒரு நாட்ச்பேக் என்ற வதந்திகளை பொய்யாக்கி கொண்டு, சப்-4 மீட்டர் கச்சிதமான சேடன் வரி வட்டத்தின் கீழ் இந்த காரும் இடம்பெறுவதற்கு இது உதவிகரமாக உள்ளது. இதன் பின்பக்கத்தில் கூட முக்கியத்துவம் மிகுந்த வரிகளை கொண்ட ஒரு ஸ்பாய்லர்-லிப்பை பெற்றுள்ளது. டெயில்லைட் கிளெஸ்டரில் ஒரு புதுப்பிக்கப்பட்ட டிசைனை பெற்றுள்ளது. அதே நேரத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட முந்தைய டீஸர் படங்களில், இந்த கிளெஸ்டரின் இம்பிஸ்சில், போலோ ஹேட்ச்பேக்கிடம் இருந்து பகிர்ந்து கொள்ளப்பட்டதாக இருந்தது.
மேலும் அந்த படங்களின் மூலம் போலோவில் காணப்படுவது போன்ற அதே ‘டோசா’ அலாய் வீல்கள் இருப்பது தெரிய வருகிறது. தற்போது உளவுப் பார்க்கப்பட்ட மாடல் ஒரு TDI என்ற முடிவுக்கு வரும் வகையில், இதில் 4-சிலிண்டர் 1.5-லிட்டர் மில் அமையப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இவை வென்டோ மற்றும் போலோ கார்களில் முறையே 90PS மற்றும் 105 PS என்ற இரு ஆற்றல் நிலைகளில் கிடைக்கின்றன. அடுத்து வரவிருக்கும் கச்சிதமான சேடனிலும் இதே யூனிட்கள் அளிக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. இந்த ஆற்றலகங்களை 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஒரு தேர்விற்குரிய 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆகிய இவ்விரண்டு முறைகளில் பொருத்தப்பட்டு கிடைக்க பெறலாம். மாருதி டிசையர், டாடா செஸ்ட், ஃபோர்டு ஆஸ்பியர் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்சென்ட் ஆகியவையோடு வோல்க்ஸ்வேகன் அமியோ போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful