பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் அறிமுகமானது VinFast VF 9
vinfast vf9 க்காக ஜனவரி 19, 2025 09:45 pm அன்று shreyash ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 40 Views
- ஒரு கருத்தை எழுதுக
VF 9 என்பது வின்ஃபாஸ்டின் வரிசையில் ஒரு ஃபிளாக்ஷிப் எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். மேலும் இது 531 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்ச் கொண்டதாக இருக்கும்.
-
வின்ஃபாஸ்ட் VF 9 ஒரு ஃபிளாக்ஷிப் 3-வரிசை எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும்.
-
இதில் 7 பேர் வரை பயணிக்கலாம்.
-
V-வடிவ கிரில், நேர்த்தியான ஹெட்லைட்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
இது டூயல்-டோன் பிளாக் மற்றும் பிரெளவுன் கேபின் தீம் உடன் வருகிறது.
-
15.6-இன்ச் டச் ஸ்கிரீன், ஆம்பியன்ட் லைட்ஸ், வென்டிலேஷன் மற்றும் ஹீட்டட் ஃபங்ஷன்களுடன் பவர்டு முன் இருக்கைகள் மற்றும் பெரிய ஃபிக்ஸ்டு கிளாஸ் ரூஃப் போன்றவற்றுடன் வருகிறது.
-
123 kWh பேட்டரி பேக் இதில் உள்ளது. மற்றும் 531 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டுள்ளது.
-
டூயல்-மோட்டார் ஆல்-வீல்-டிரைவ் (AWD) செட்டப் ஸ்டாண்டர்டாக வருகிறது.
-
இதன் விலை ரூ.65 லட்சத்தில் இருந்து தொடங்கலாம் (எக்ஸ்-ஷோரூம்).
வியட்நாமிய EV தயாரிப்பாளரான வின்ஃபாஸ்ட் VF 9 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டது. VF 9 என்பது 3-வரிசை எலக்ட்ரிக் எஸ்யூவி ஆகும். இது 7 நபர்களுக்கு இடத்தை வழங்குவது மட்டுமல்லாமல் பல பிரீமியம் வசதிகளுடன் வருகிறது. ஒரு சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் மோட்டார், மற்றும் ஒரு சிறப்பான டிரைவிங்ரேஞ்ச் உடன் இது கிடைக்கிறது. வின்ஃபாஸ்ட் VF 9 பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
வின்ஃபாஸ்ட் VF 9 வடிவமைப்பு
VF 9 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது வின்ஃபாஸ்ட் -ன் வழக்கமான வடிவமைப்பை பின்பற்றுகிறது மற்றும் 7-சீட்டர் கார் என்பதால் இதன் அளவு பெரிதாக தெரிகிறது. முன்புறத்தில் இது V-வடிவ கிரில்லை கொண்டுள்ளது. மேலும் மையத்தில் 'வின்ஃபாஸ்ட்' லோகோவுடன், நேர்த்தியான ஹெட்லைட்கள் உள்ளன. இது குளிரூட்டலுக்காக மட்டுமல்லாமல் சிறந்த ஏரோடைனமிக்ஸ் -க்காக ஒரு பெரிய ஹூட் ஸ்கூப்பை கொண்டுள்ளது.
பக்கவாட்டில் பெரிய 21-இன்ச் அலாய் வீல்கள் மற்றும் ஆல் சீசன் டயர்கள் உள்ளன. சார்ஜிங் ஃபிளாப் டிரைவரின் பக்கத்தில் உள்ள ஃபெண்டரில் அமைந்துள்ளது. அதே சமயம் பிரீமியம் கவர்ச்சியானது குரோம் டோர் ஹேண்டில்களால் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. பின்புறத்திலிருந்து பார்க்கும்போது, கனெக்டட் எல்இடி டெயில் லைட்களை கொண்ட ஒரு பிளாட் டெயில்கேட்டை பெறுகிறது.
VinFast VF 9 இன்டீரியர் மற்றும் வசதிகள்
இன்ட்டீரியரில் டூயல்-டோன் பிளாக் மற்றும் பிரெளவுன் கேபின் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்து ஹெட்ரெஸ்ட்களிலும் பிராண்ட் லோகோவுடன், பிரெளவுன் வீகன் லெதரெட் அப்ஹோல்ஸ்டரியில் இருக்கைகள் மூடப்பட்டிருக்கும். இது 6- மற்றும் 7-சீட்டர் கட்டமைப்புகளில் இருக்கலாம்.
VF 9 எலக்ட்ரிக் எஸ்யூவியில் பெரிய 15.6-இன்ச் டச் ஸ்கிரீன், 8-இன்ச் ரியர் ஸ்கிரீன், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் 14-ஸ்பீக்கர் வரையிலான சவுண்ட் சிஸ்டம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இது ஆம்பியன்ட் லைட்ஸ், வென்டிலேஷன் மற்றும் ஹீட்டட் செயல்பாடுகளுடன் பவர்டு முன் சீட்கள் மற்றும் பெரிய ஃபிக்ஸ்டு கிளாஸ் ரூஃப் ஆகியவற்றைப் பெறுகிறது. பாதுகாப்புக்காக இது 11 ஏர்பேக்குகள், ஒரு டயர் பிரஷர் மானிட்டர் சிஸ்டம் (TPMS), 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்களின் முழு தொகுப்பு (ADAS) ஆகியவற்றைப் பெறுகிறது.
வின்ஃபாஸ்ட் VF 9 பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ச்
VF 9 எலக்ட்ரிக் எஸ்யூவி ஆனது 123 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. அதன் தொழில்நுட்ப விவங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
விவரங்கள் |
வின்ஃபாஸ்ட் VF 9 |
பேட்டரி பேக் |
123 kWh |
கிளைம்டு ரேஞ்ச் |
531 கி.மீ வரை |
பவர் |
408 PS |
டார்க் |
620 Nm |
ஆக்ஸிலரேஷன் (0-100 கி.மீ/மணி) |
6.6 வினாடிகள் |
டிரைவ் டைப் |
ஆல்-வீல் டிரைவ் (AWD) |
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
VF 9 காரின் விலை ரூ.65 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது., அதன் விவரக்குறிப்புகளை வைத்துப் பார்க்கையில் இது கியா EV9, BMW iX, மற்றும் மெர்சிடிஸ்- பென்ஸ் EQE எஸ்யூவி ஆகிய கார்களுக்கு இணையாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.