2026 -ம் ஆண்டு இந்தியாவுக்கு VinFast VF 3 வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
published on பிப்ரவரி 06, 2025 06:24 pm by dipan for vinfast vf3
- 7 Views
- ஒரு கருத்தை எழுதுக
இந்தியாவில் VF 6 மற்றும் VF 7 -க்கு பிறகு வியட்நாமிய கார் நிறுவனத்தின் மூன்றாவது மின்சார காராக வின்ஃபாஸ்ட் VF 3 இருக்கலாம். VF 6 மற்றும் VF 7 ஆகிய இரண்டு கார்களும் 2025 தீபாவளிக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
-
VF 3 ஆனது பாக்ஸி வடிவமைப்பில் ஹாலோஜன் லைட்ஸ் மற்றும் 3 டோர்களுடன் மிரட்டலான தோற்றத்தை கொண்டுள்ளது.
-
4 இருக்கைகள், 2-ஸ்போக் ஸ்டீயரிங் மற்றும் 10-இன்ச் டச் ஸ்கிரீன் ஆகியவை உள்ளன..
-
இதன் பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.
-
உலகளவில் விற்பனை செய்யப்படும் இது 18.64 kWh பேட்டரி பேக்கை கொண்டுள்ளது. இது ரியர் ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட மோட்டாரை (41 PS / 110 Nm) கொண்டுள்ளது.
-
215 கி.மீ கிளைம்டு ரேஞ்சை கொடுக்கும்.
-
விலை ரூ.10 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் முடிவடைந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் வியட்நாமை சேர்ந்த எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான வின்ஃபாஸ்ட் இந்தியாவில் கால்பதித்தது. மேலும் இந்த ஆண்டு தீபாவளிக்குள் வின்ஃபாஸ்ட் VF 6 மற்றும் வின்ஃபாஸ்ட் VF 7 ஆகிய இரண்டு கார்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இப்போது வின்ஃபாஸ்ட் அதன் மிகவும் விலை குறைவான காரான வின்ஃபாஸ்ட் VF 3 ஆனது 2026 ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், வின்ஃபாஸ்ட் VF 3 அதன் குளோபல்-ஸ்பெக் மாடலில் கிடைக்கும் அனைத்து விஷயங்களின் விவரங்கள் இங்கே:
வின்ஃபாஸ்ட் VF 3 வெளிப்புறம்
வின்ஃபாஸ்ட் VF 3 ஆனது எம்ஜி காமெட் இவி -யை போலவே பாக்ஸி வடிவமைப்பை கொண்டுள்ளது. இருபுறமும் இரண்டு கதவுகளுடன் வருகிறது. இது ஹாலோஜன் ஹெட்லைட்களுடன் பிளாக் கலர் குளோஸ்டு கிரில்லையும், வின்ஃபாஸ்ட் லோகோவுடன் கிரில்லின் மையத்தில் ஒரு குரோம் ஸ்ட்ரிப்பையும் கொண்டுள்ளது. இது ஆல் பிளாக் முன்பக்கம் மற்றும் பின்புற பம்பரை கொண்டுள்ளது. இது பாடி முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள்ள பாடி கிளாடிங் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தைப் போலவே பின்புறமும் பிளாக்-அவுட் பகுதி உள்ளது. அதில் ஹாலோஜன் டெயில் லைட்ஸ் மற்றும் மையத்தில் வின்ஃபாஸ்ட் லோகோவுடன் குரோம் ஸ்ட்ரிப் உள்ளது.
வின்ஃபாஸ்ட் VF 3 உட்புறம், வசதிகள் மற்றும் பாதுகாப்பு
வின்ஃபாஸ்ட் VF 3 ஆனது ஒரு எளிய டாஷ்போர்டு செட்டப்பை கொண்டுள்ளது. 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உள்ளது மற்றும் 10-இன்ச் ஃபுளோட்டிங் டச் ஸ்கிரீன் ஆனது டிரைவர்ஸ் டிஸ்ப்ளேவாகவும் செயல்படுகிறது. குளோபல்-ஸ்பெக் மாடலில் ஆல்-கருப்பு கேபின் தீம் மற்றும் 4 சீட்கள் உள்ளன. அதன் பின் வரிசையை கோ-டிரைவரின் இருக்கையை ஃபோல்டு செய்து அணுகலாம். மேனுவல் ஏசி மற்றும் முன் பவர் ஜன்னல்கள் ஆகிய வசதிகளும் உள்ளன. பாதுகாப்புக்காக மல்டி ஏர்பேக்குகள், EBD உடன் ABS மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை உள்ளன.
மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2025 -நிகழ்வில் புதிய நிறுவனமான VinFast பங்களிப்பு
வின்ஃபாஸ்ட் VF 3 பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்
குளோபல்-ஸ்பெக் வின்ஃபாஸ்ட் VF 3 ஆனது ரியர்-ஆக்ஸிலில் பொருத்தப்பட்ட (RWD) எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்ட ஒரே ஒரு பேட்டரி பேக் ஆப்ஷன் உடன் வருகிறது. விரிவான விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
18.64 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
பவர் |
41 PS |
டார்க் |
110 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
215 கி.மீ |
டிரைவ்டிரெய்ன் |
ரியர்-வீல் டிரைவ் (RWD) |
ஃபாஸ்ட் சார்ஜிங் இருப்பதால் VF 3 -யை 36 நிமிடங்களில் 10-70 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இந்தியா-ஸ்பெக் VF 3 அதே பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
வின்ஃபாஸ்ட் VF 3 எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
இந்தியா-ஸ்பெக் வின்ஃபாஸ்ட் VF 3 விலை ரூ. 10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் வின்ஃபாஸ்ட் VF 3 ஆனது MG -ன் எலக்ட்ரிக் கார்களான எம்ஜி விண்ட்சர் மற்றும் MG ZS EV ஆகியவற்றோடு கிடைக்கும் பேட்டரி சந்தா திட்டத்துடன் வருகிறது. அத்தகைய சந்தா திட்டம் இந்தியாவில் கொடுக்கப்பட்டால். விலை சற்று குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது MG காமெட் -க்கு நேரடியாக போட்டியாக இருக்கும். மேலும் இது டாடா டியாகோ EV, சிட்ரோன் eC3, மற்றும் டாடா டிகோர் EV ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாக இருக்கும்
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.