• English
  • Login / Register

புதுப்பிக்கப்பட்ட ஃபோர்ட் ஈகோ ஸ்போர்ட்ஸின் முன்பதிவு ஐரோப்பாவில் தொடங்கப்பட்டுவிட்டது.

published on ஜூலை 21, 2015 04:49 pm by raunak for போர்டு இக்கோஸ்போர்ட் 2015-2021

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ன்று முதல், மேம்படுத்தப்பட்ட ஃபோர்ட் ஈகோ ஸ்போர்ட்ஸ் காரை, பின்புறம் பொருத்தப்பட்ட உபரி சக்கரம் இல்லாமல் ஐரோப்பாவில் வாங்கி கொள்ளமுடியும். இந்த கார் 1.5 லிட்டர் TDCi  ஒரு புதிய விசை மோட்டாருடன் இன்னும் பிற பொறியியல் மற்றும் சிறப்பம்ச மேம்பாடுகளையும் கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது!


ஐரோப்பாவின் ஃபோர்டு நிறுவனம், தனது மேம்படுத்தப்பட்ட ஈகோ ஸ்போர்ட்ஸ் காரின் முன்பதிவைத் தொடங்கியது. ஃபோர்டின் மேம்படுத்தப்பட்ட ஈகோ ஸ்போர்ட்ஸ்  காரை 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைத்தது. இப்போது, ஃபோர்டு காம்பாக்ட் SUV  மாடல், கூடுதல் அம்சங்கள் மற்றும் எந்திரவியல் மேம்படுத்தல்கள் இணைந்து நவீனமான மாறுதல்களை பெற்றுள்ளது.
 
இந்தியாவில் ஃபோர்டின் நிலைப்பாட்டைப் பார்க்கும்பொழுது, சென்னையில் உள்ள ஃபோர்டு தொழிற்சாலையில் இருந்து  ஐரோப்பாவிற்கு ஈகோ ஸ்போர்ட்ஸ் கார்  ஏற்றுமதி செய்யப்படுகிறது.  எனினும், ஃபோர்டு நிறுவனம்,  இந்திய நாட்டில் எந்தவொரு மேம்பாட்டு திட்டங்களையும்  வெளியிடவில்லை. ஏற்கனவே, இந்திய சந்தைக்கு வந்து 2 ஆண்டுகள் முடிவுற்றதால் ஈகோ ஸ்போர்ட்ஸ் விரைவில் செம்மையாகப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த மேம்பாடுகள் ஐரோப்பாவில் இருந்து ஆரம்பிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பொழுது வந்துள்ள மாற்றங்களை பற்றி பேசுகையில், இன்னபிற மாற்றங்களையும் விட பின்புற உபரி சக்கரத்தை அகற்றியதே முக்கியமான மாற்றமாக எல்லோராலும் கூறப்படுகிறது. இப்போது  வாடிக்கையாளர்கள் பின்புற உபரி சக்கரம் இல்லாமலோ அல்லது  சக்கரத்துடனோ தங்களது விருப்பம் போல் பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பை வழங்கியுள்ளது. உபரி சக்கரம் பொருத்தப்படாத வாகனங்களில், உரிமம் தகடு சற்று மேலே நகர்த்தியும், பின்புற பம்பர் நுட்பமான வளைவுகளையும் பெற்றுள்ளது. ஈகோ ஸ்போர்ட்ஸின் உட்புறத்தைப் பார்க்கும்போது,  ஒரு புதிய வகை ஸ்டீயரிங், சில்வர் நிறத்திற்கு பதிலாக கருப்பு நிற பியானோ மற்றும் அழகிய பளபளக்கும் குரோமிய பகுதிகளையும் கொண்டுள்ளது.

ஃபோர்ட் காம்பாக்ட் SUV  மாடலில் SYNC நுட்பம் மேம்படுத்தப்பட்டு இப்பொழுது 4 அங்குல பெரிய வண்ண கணினி, செம்மையான திரையுடன் முன்புற நடுபகுதியில் கச்சிதமாக இடம்பெற்றுள்ளது. மேலும் இந்நிறுவனம், சத்தத்தை தடுக்கும் கடினமான பொருட்களை உபயோகித்து NVH அளவை குறைத்துள்ளோம் என்றும் வாக்குறுதியளித்துள்ளது.

ஐரோப்பிய ஈகோ ஸ்போர்ட் வரிசையில் செயற்கைக்கோள் முறை வழிகாட்டு சாதனம் மற்றும் காமிராவுடன் கூடிய பின்நோக்கு பார்க்கிங் வசதியும் இந்த ஆண்டு இறுதிக்குள் வந்துவிடும் என்று ஃபோர்டு நிறுவனம் உறுதி கூறுகிறது. மேலும், புதிதாக குளிர்கால சலுகையாக, சூடாக்ககூடிய முன் இருக்கைகள், கண்ணாடிகள் மற்றும் காற்றுத்திரை போன்றவை வழங்கப்படுகின்றன. ஈகோ ஸ்போர்ட்-ன் டைட்டானியம் மாடல்கள் இப்பொழுது தரமான தோல் மற்றும் துணியாலான இருக்கைகளுடன் கிடைக்கின்றன.1.5 லிட்டர் TDCi டீசலின் திறன் 95 பி‌எஸ்-க்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர, எந்திரவியலின்படி, இதன் ஓட்டத்திற்குத் தகுந்த ஸ்பிரிங், காற்று திசையை சரி செய்யும் சன்னல், பின்புற முறுக்கு பட்டை, மேம்படுத்தப்பட்ட மின்னணு நிலைப்பாடு அமைப்பு மற்றும் மின்னணு திறன் கொண்ட ஸ்டியரிங் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Ford இக்கோஸ்போர்ட் 2015-2021

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience