TUV 300: மஹிந்திரா நகர்புற சந்தையை குறி வைக்கிறதா?
modified on ஆகஸ்ட் 21, 2015 07:32 pm by raunak
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
நான்கு மீட்டருக்கு குறைவான SUV ரக கார்களின் சந்தையை இரண்டாவது முறையாக புது பொலிவுடனும் , பினின்பரினா உதவியுடன் கூடிய வடிவமைப்புடனும் TUV 300 மீண்டும் ஒரு முறை குறிவைக்கிறது.
ஜெய்பூர்: மஹிந்திரா பொலிரோ வெற்றிகரமான பயன்பாட்டு வாகனமாக இருந்த போதிலும் அது கிராமப்புற மற்றும் 2 மற்றும் 3 ஆம் தர நகரங்களில் மட்டுமே பிரபலமடைந்தது. சற்று 4 மீட்டரை விட கூடுதலான உயரம் கொண்டதாக இருந்தாலும் விலை குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் TUV 300 நகர்புற சந்தையை கைப்பற்றுவதற்க்கு ஏற்ற அதுவும் குறிப்பாக காம்பேக்ட் SUV வகை கார்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பொலிரோ வை விட சக்தி அதிகமாக பெற்று 4 மீட்டருக்கு குறைவான SUV வகை கார்களுடன் ஒப்பிடுகையில் விலையும் குறைவாக நிர்ணயிக்கப்படும் என்றும் எதிர் பார்க்கப்படுகிறது. போர்ட் நிறுவனத்தின் ஈகோஸ்போர்ட் கார்களுடன் TUV 300 ரக கார்கள் நேரிடையாக மோதும் என்று எதிர்பார்க்கலாம். மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனம் ஒரு உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பு என்றும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கென்றே LHD வெர்ஷன்களும் தயாரிக்கப்படுள்ளது என்றும் கூறுகிறது. ஆகவே TUV 300 எவ்வாறு நகர்புற மக்களை கவர்ந்து சந்தையை கைப்பற்றுகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
TUV யின் முக்கிய சிறப்பம்சங்கள்
வெளிப்புறம் மற்றும் என்ஜின்
மஹிந்திரா முற்றிலும் புதிய தொழில் நுட்பத்தை இந்த கச்சிதமான SUV வகை கார்களில் புகுத்தி இருப்பதாக கூறுகிறது. இது அநேகமாக ஸ்கோர்பியோ வாகனத்தில் பயன்படுத்தப்பட்ட புதிய ஹைட்ரோபோர்ம்ட் மாடுலார் சேசிஸ் இன் மேம்படுத்தப்பட்ட தன்மை கொண்டதாகவே இருக்கும் என்று யூகிக்கப்படுகிறது.
இந்த புதிய TUV 300 வாகனங்களின் வடிவமைப்பு ஒரு ராணுவ டேன்க்கினுடைய வடிவமைப்பை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வடிவமைக்கப்பட்டு இருப்பதாக மஹிந்திரா கூறுகிறது. இதைத்தவிர பரவசப்படுத்தும் பிரபல வடிவமைப்பு நிறுவனமான பினின்பரினா தங்களது கைவண்ணத்தை TUV 300 வடிவமைப்பில் காட்டியுள்ளது.
நிச்சயமாக இது பொலிரோ வாகனத்துக்கு மாற்று இல்லை என்றாலும் முன்புற தோற்றம் நமக்கு பொலிரோவை நினைவு படுத்துகிறது.
மஹிந்திரா இந்த வாகனத்தை உண்மையான ஒரு வித்தியாசமான தயாரிப்பு என்றே கூறுகிறது. இந்தக் கூற்றை நியாயப்படுத்தும் வகையில் சதுரமான வடிவமைப்பு கம்பீரமான தோற்றம், தேவையற்ற செருகல்கள் இல்லாமை, பின்புறம் பொருத்தப்பட்டுள்ள கூடுதல் சக்கரம் என்று பலவற்றை சொல்லலாம்.
4WD வசதி இருக்காது என்று மஹிந்திரா சொன்னாலும் இந்த வாகனம் உருவாக்கப்பட்டுள்ள தொழில் நுட்பத்தில் அந்த வசதியையும் நாம் எதிர்பார்க்கலாம்.
TUV 300 வாகனம் NVH அளவுகள் கூட்டப்பட்ட புதிய எம்ஹாக்80 என்ஜின் மூலம் சக்தியூட்டப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளது. எஞ்சினைப்ப் பற்றி வேறு எந்த தகவலும் இப்போதைக்கு இல்லை என்றாலும் '80' என்ற இலக்கம் இஞ்சினுடைய சக்தியை குறிப்பதாக இருக்கலாம்.
இந்த TUV 300 வாகனத்தில் 5 - வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கும். எப்படி இருப்பினும் AMT கியர் பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலும் தென்பட்டது.
கேபின் மற்றும் இன்போடைன் சிஸ்டம்
பத்து லட்சத்திற்கு உட்பட்ட மற்ற மஹிந்திரா தயாரிப்புக்கள் போல் இல்லாமல் இந்த
TUV 300 வாகனத்தின் உள் அறை (கேபின்) புத்தம் புதிதாக உயர் ரக கார்களின் கேபின் போல நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இருக்கைகள் மற்றும் சீலைகள் (அபோல்ஸ்ட்ரி) ஸ்கார்பியோ கார்களை போல் அமைக்கப்பட்டுள்ளது.
க்வாண்டோ கார்களைப் போல் பின்புறம் ஜம்ப் இருக்கைகள் பொருத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்கார்பியோ மற்றும் XUV 500 வாகனத்தில் உள்ளது போன்ற நாவிகேஷன் வசதியுடன் கூடிய தொடுதிரை இன்போடைன்மென்ட் அமைப்பும் என்றும் எதிர்பார்க்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை
முக்கிய எதிரி - டீசல் ஈகோஸ்போர்ட்
டீசல் ஈகோஸ்போர்ட் காரின் ஆரம்ப விலை ரூ. 789,000 (எக்ஸ் - டெல்லி) TUV 300 எஸ் யூவி யின் விலை அதை விட குறைவாக தான் நிர்ணயிக்கப்படும் என்று யூகிக்கப்படுகிறது.