TUV300: எது சிறந்த விலையாக இருக்க முடியும்?
raunak ஆல் செப் 08, 2015 03:36 pm அன்று மாற்றியமைக்கப்பட்டது செய்யப்பட்டது
- 19 Views
- 3 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
செப்டம்பர் 10, 2015 ல் அறிமுகமாகவுள்ள TUV300 வாகனத்தின் விலை பற்றிய எந்த வித விவரங்களையும் மஹிந்திரா நிறுவனம் வெளியிடாத சூழலில் தற்போது நிலவும் சூழலின் அடிப்படையில் இந்த நான்கு மீட்டருக்கும் குறைவான பிரிவை சேர்ந்த இந்த SUV வாகனதின் விழி பற்றிய அனுமானங்களையும் யூகங்களையும் பார்க்கலாம்.
ஜெய்பூர்: மஹிந்திரா நிறுவனம் TUV300 வாகனத்தை நாளை மறுதினம் அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய பயன்பாட்டு வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா கச்சிதமான SUV பிரிவில் வலுவாக காலூன்றி பின் அதிகமான வாகனங்களை விற்பனை செய்வதற்காகவே இந்த TUV300 வாகனத்தை அறிமுகம் செய்கிறது. இதற்கு முன்னால் அவர்கள் இந்த பிரிவில் அறிமுகம் செய்த குவாண்டோ தோல்வியை சந்தித்தது. இந்த TUV300 போர்ட் ஈகோஸ்போர்ட், க்ரேடா, எஸ் - கிராஸ் மற்றும் ஓரளவுக்கு டஸ்டர் உடனும் போட்டியிடும் என்று சொல்லலாம்.