புதிய அறிமுகங்கள் இப்போது பிரபலமாகின்றன: மஹிந்திரா XUV500 AT
published on நவ 27, 2015 04:22 pm by manish for மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
மஹிந்திரா XUV500 AT
க்ரேடா டீசல் ஆட்டோமேட்டிக் அடைந்துள்ள பிரபலத்தை கண்டு, தனது XUV5OO-யின் ஆட்டோமேட்டிக் வகை வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இந்தாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோவின் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் யூனிட்டை, இந்த வாகனம் பகிர்ந்துள்ளது. XUV5OO-ன் W8, W10 மற்றும் W10 AWD ஆகிய வகைகளில், இந்த ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் அமைப்புடன் கிடைக்கிறது. இதன் விலையை குறித்து பார்க்கும் போது, ரூ.15.36 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், நவி மும்பை) விலை நிர்ணயத்தில் துவங்குகிறது.
அதிக ஆற்றலுள்ள சஃபாரி ஸ்டார்ம் இதோ!
ஒருவழியாக, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சஃபாரி ஸ்டார்மின் சக்திவாய்ந்த பதிப்பை, ரூ.13.52 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலை நிர்ணயத்தில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இயந்திரவியலில், இந்த பதிப்பு வாரிகர் 400 2.2 லிட்டர் 4 சிலிண்டர் என்ஜின் மூலம் ஆற்றலைப் பெற்று, முந்தைய பதிப்புடன் ஒப்பிட்டால் 25% கூடுதல் முடுக்குவிசையை (அதிகபட்சமாக 400 Nm) அளிக்க வல்லது. மேலும் இதில் ஒரு மேம்பட்ட கியர்பாக்ஸை பெற்று, ஒரு அதிகபட்ச ஆற்றலான 156 PS-யை வெளியிடுகிறது. அதே நேரத்தில் இந்த நவீன மேம்பட்ட பதிப்பு, VX டிரிம் (4×2 கான்ஃபிகரேஷனில்) மட்டுமே கிடைக்கிறது. வரும் நாட்களில் இதே போன்ற 4x4 வகை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் AMG GT S
மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனம், தனது முன்னணி மாடலான AMG GT S-யை ரூ.2.4 கோடி (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் இந்தாண்டு அறிமுகம் செய்யப்படும் 5வது AMG ஆன இது, முழுக்க முழுக்க மெர்சிடிஸ் AMG துறையினரின் இன்-ஹவுஸ் படைப்பாகும். SLS AMG-க்கு மாற்றாக அமையும் இந்த சூப்பர் காரை, ஒரு புதிய 4.0-லிட்டர் ட்வின் டர்போ V8 இயக்கி, 510 PS ஆற்றலையும், 650 NM முடுக்குவிசையையும் வெளியிடுகிறது.
லம்போர்கினி LP580-2
லம்போர்கினி நிறுவனம் அதன் RWD-யை மட்டும் அறிமுகம் செய்துள்ள நிலையில், 2015 லாஸ் ஏஞ்சில்ஸ் ஆட்டோ ஷோவில் உலக அரங்கேற்றம் பெற்ற ஹுராகேன் LP580-2-னின் இந்திய பிரவேஷம் நிகழ உள்ளது. லம்போர்கினி ஹுராகேன் LP580-2-யை ரூ.2.99 கோடி (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) விலை நிர்ணயத்தில் அறிமுகம் செய்துள்ளது. பல நாட்களுக்கு முன்பே இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டாலும், தரமான ஹுராகேனில் உள்ள AWD சிஸ்டம் மூலம் ஓட்டும் போது ஏற்படும் குதுகலம் தொடர்பான பிரச்சனையை சமரசம் செய்வதில் இந்த இத்தாலி நாட்டு வாகன தயாரிப்பாளர் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் வாசிக்க :
0 out of 0 found this helpful