• English
  • Login / Register

ஃப்ளெக்ஸ்-ஃபியூல் தொழில்நுட்பத்தில் இயங்கும் Camry Hybrid மாதிரி காரை ஆகஸ்ட் 29 அன்று டொயோட்டா அறிமுகப்படுத்தவுள்ளது!

published on ஆகஸ்ட் 25, 2023 05:22 pm by shreyash for டொயோட்டா காம்ரி

  • 226 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியும் துவக்க விழாவில் கலந்து கொள்கிறார்.

Toyota Camry Hybrid

இந்தியாவிற்கான தூய்மையான, பசுமையான இயக்கத்தின் அடுத்த கட்டம், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி அல்லது மின்சாரத்தில் இயங்கக்கூடிய (எத்தனால்-பெட்ரோல் கலவை) ஃப்ளெக்ஸ்-ஃபியூல் வாகனங்களைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியது. டொயோட்டா நிறுவனம் முதல் ஃப்ளெக்ஸ்-ஃபியூல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் காரின் தயாரிப்புக்கு முந்தைய நிலையில் உள்ள  மாதிரியை (BS6 ஃபேஸ்-II இணக்கமானது) ஆகஸ்ட் 29 அன்று வெளியிட உள்ளது. இந்த விழாவிற்கு தலைமை விருந்தினராக இந்தியாவின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியே கலந்து கொள்கிறார். 

 நிதின் கட்கரி டொயோட்டாவின் பைலட் திட்டமான இடது கை பக்க டிரைவ் (LHD) கொரோலா ஆல்டிஸ் கொண்ட ஃப்ளெக்ஸ்-ஃபியூல் ஸ்ட்ராங்-ஹைபிரிட் கார் தயாரிக்கும் திட்டத்தை அக்டோபர் 2022 -ல் துவக்கி வைத்தார். 10 மாதங்களுக்கும் மேலான உழைப்பிற்குப் பிறகு, டொயோட்டா இப்போது அதன் ஃப்ளெக்ஸ்-ஃபியூல் ஸ்ட்ராங்-ஹைபிரிட் வாகனத்தின் முதல் முன் மாதிரியை வழங்க தயாராக உள்ளது, இது கொரோலா அல்ல, ஆனால் கேம்ரி -யாக இருக்கும்..

இதுவரை நமக்கு தெரிந்தவை ?

செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி, கேம்ரியின் இந்த ஃப்ளெக்ஸ்-ஃபியூல் பதிப்பு 100 சதவீத பயோ-எத்தனாலை பயன்படுத்துவதாகவும், காரை இயக்குவதற்கு தேவைப்படும் ஆற்றலில் 40 சதவீதத்தை உருவாக்க ஸ்ட்ராங்-ஹைபிரிட் அமைப்பைத் தொடர்ந்து பயன்படுத்தும் என்று தெரிவித்தார். மேலும் , இந்த ஃப்ளெக்ஸ்-ஃபியூல் கேம்ரியின் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 15 கிமீ முதல் 20 கிமீ வரை இருக்கும் எனவும் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த ஃப்ளெக்ஸ்-ஃபியூல் ஸ்ட்ராங்-ஹைபிரிட் மாடலின் உண்மையான விவரக்குறிப்புகள் வெளியீட்டின் போது வெளிப்படுத்தப்படும்.

ஃப்ளெக்ஸ் ஃபியூல் என்றால் என்ன?

Nitin Gadkari in Toyota Corolla Altis Hybrid

ஃப்ளெக்ஸ்-ஃபியூல் என்பது பெட்ரோல் மற்றும் எத்தனால் ஆகிய இரண்டு எரிபொருட்களின் கலவையாகும், மேலும் ஃப்ளெக்ஸ்-ஃபியூல் வாகனம் பெட்ரோல் மற்றும் எத்தனால் இரண்டிலும் இயங்கக்கூடிய ஒரு இன்ஜினை கொண்டுள்ளது மற்றும் இரண்டின் உயர்-நிலை கலவையையும் கொண்டுள்ளது. கரும்பு வெல்லப்பாகு போன்ற விவசாய மூலங்களிலிருந்து எடுக்கப்படுவதால் எத்தனால் ஒரு பயோ ஃபியூல் என்றும் அழைக்கப்படுகிறது.

ஏன் இது முக்கியமானது?

Toyota To Unveil Its First Flex-fuel Prototype Of The Camry Hybrid On August 29

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு பசுமையான மற்றும் சிக்கனமான மாற்றாக இருப்பதுடன், ஃப்ளெக்ஸ்-ஃபியூல் எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும் உதவி செய்யும், இது இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழில் மற்றும் விவசாயத் துறை ஆகிய இரண்டிற்கும் பயனளிக்கும். மேலும், புதைபடிவ எரிபொருட்களை மட்டும் நம்பி இருக்காமல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களின் பக்கம் நமது பார்வையை மாற்றுவது மிகவும் முக்கியமாகும். ஃப்ளெக்ஸ்-ஃபியூல் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒரு பசுமையான மாற்றாக மட்டுமல்லாமல், மலிவான தேர்வாகவும் உள்ளது, ஏனெனில் அதன் விலை லிட்டருக்கு ரூ.60 மட்டுமே என்று நிதின் கட்கரி கூறினார். கார்பன் வெளியீட்டை குறைக்க மின்சார வாகனத்தை விட ஃப்ளெக்ஸ்-ஃபியூல் வாகனத்தை நீங்கள் பரிசீலிப்பீர்களா? கீழே உள்ள கமென்ட் பகுதியில்  எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலும் படிக்க: டொயோட்டா கேம்ரி ஆட்டோமேடிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Toyota காம்ரி

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience