சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2026 ஆம் ஆண்டுக்குள்ளாக இந்தியாவில் புதிய எஸ்யூவி -யை கொண்டு வர திட்டமிடும் டொயோட்டா நிறுவனம்... மஹிந்திரா XUV700 க்கு போட்டியாக அறிமுகமாகுமா ?

published on செப் 29, 2023 05:29 pm by sonny

ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் ஹைரைடர் காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் ஹைகிராஸ் MPV -க்கு இடையே ஏதாவது ஒரு காரை கொண்டு வர விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • சமீபத்திய அறிக்கை இந்தியாவில் டொயோட்டாவின் வளர்ச்சித் திட்டங்களை வெளிப்படுத்துகிறது.

  • டொயோட்டா புதிதாக மூன்றாவது உற்பத்தி ஆலையை தொடங்க விரும்புவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • புதிய நடுத்தர அளவிலான எஸ்யூவி ஆனது 340D என்ற குறியீட்டு பெயரில் உள்ளது.

  • இந்தியாவிற்கான ஃபார்ச்சூனருக்கு மேலேயும் லேண்ட் க்ரூஸருக்கு கீழேயும் ஆடம்பரமான எஸ்யூவியை அறிமுகம் செய்ய டொயோட்டா பரிசீலித்து வருகிறது.

New Toyota SUV by 2026

இந்தியாவில் டொயோட்டா வரிசை இரண்டு பிரீமியம் மாடல்களால் சிறப்பிக்கப்படுகிறது மற்றும் இன்னமும் அனைத்து முக்கிய பிரிவுகளிலும் அதற்கு போட்டியாளர்கள் இல்லை, எஸ்யூவி பாடி டைப்பிலும் கூட. டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆகியவற்றுக்கு இடையேயான இடைவெளியை நிரப்ப ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவிற்கான புதிய எஸ்யூவி -யை உருவாக்கி வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

இதுவரை நாம் அறிந்தவை என்ன?

ராய்ட்டர்ஸ் செய்தி அறிக்கையில் டொயோட்டா சம்மந்தமான ஆதாரம் வழங்கியவர்கள் பெயரை வெளியிடாமல் இருக்க முடிவு செய்துள்ளனர், ஆனால் இந்த புதிய எஸ்யூவி தற்போது 340D என்ற குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது என்பதை அவர்கள் வெளிப்படுத்தினர். ஹைரைடர் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் போட்டியிடுவதால், இது இந்தியாவின் நடுத்தர அளவிலான எஸ்யூவி பிரிவை இலக்காகக் கொண்டிருக்கும் என்றும் இந்த புதிய எஸ்யூவி மஹிந்திரா XUV700, டாடா ஹாரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் போன்றவைகளுக்கு போட்டியாக இருக்கும் என்றும் நம்புகிறோம். இந்த வகையான எஸ்யூவிகள் வழக்கமாக ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருக்கும்.

இந்த புதிய எஸ்யூவி 2026 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், இந்தியாவில் இருந்து மற்ற வலது பக்கம் ஸ்டீயரிங் இருக்கும் சந்தைகளுக்கு ஆண்டுக்கு 60,000 யூனிட் உற்பத்தி இலக்குடன் ஏற்றுமதி செய்யப்படலாம் என்றும் அறிக்கை மேலும் கூறுகிறது. இது நாட்டின் மூன்றாவது (புதிய) உற்பத்தி ஆலையில் உற்பத்தி செய்யப்படும். இந்த திட்டங்கள் குறித்து டொயோட்டாவின் இந்தியா பிரதிநிதியிடமிருந்தும் எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஏன் மற்றொரு எஸ்யூவியை கொண்டு டொயோட்டா கொண்டு வர விரும்புகிறது ?

இன்னோவா எம்பிவி மற்றும் ஃபார்ச்சூனர் முழு அளவிலான எஸ்யூவியின் பிரபலத்துடன் நீண்ட காலமாக, டொயோட்டா பெரிய பாடி வகை கொண்ட பிரிவுகளுடன் சிக்கிக்கொண்டது. இருப்பினும், இது மாருதி சுஸூகியின் பகிரப்பட்ட மாடல்களுடன் மிகவும் போட்டி நிறைந்த சிறிய மாடல் பிரிவுகளில் நுழையத் தொடங்கியது. இந்த கூட்டாண்மையின் மிக சமீபத்திய வெற்றி மாருதி கிராண்ட் விட்டாராவாக விற்கப்படும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகும், இரண்டு சிறிய எஸ்யூவிகளும் ஆல் வீல் டிரைவ் (AWD) மற்றும் ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியன்ட்களின் தனித்துவமான தேர்வை வழங்குகின்றன.

எனவே, டொயோட்டா, இந்திய எஸ்யூவி சந்தையில், குறிப்பாக வலுவான ஹைப்ரிட் பவர் ட்ரெய்ன்களுடன், டீசல் இன்ஜின்கள் விஷயத்தில் அரசாங்கம் கடுமையாக இருந்தாலும், நிறைய விற்பனை சாத்தியங்களைக் காணக்கூடும்.

ஏன் நடுத்தர அளவிலான எஸ்யூவி?

பிரெஸ்ஸாவுடன் சப்காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் மாருதி இன்னும் வலுவான இடத்தில்இருந்தாலும், பிரிமியம் தொழில்நுட்பங்களின் நீண்ட பட்டியலை வழங்கும் 2023 டாடா நெக்ஸான் மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்றவற்றின் விலை மற்றும் அம்சங்களின் அடிப்படையில் இந்த பிரிவு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. அர்பன் க்ரூஸரை மீண்டும் கொண்டு வருவது டொயோட்டாவுக்கு உகந்ததாக இருக்காது. ஒருவேளை, டொயோட்டா தனது நிபுணத்துவத்தை பெரிய எஸ்யூவிகளுடன் பயன்படுத்துவது மற்றும் மஹிந்திரா XUV700 மற்றும் டாடா ஹாரியர் ஆதிக்கம் செலுத்தும் நடுத்தர அளவிலான எஸ்யூவி சந்தையை கவனமாகப் பார்ப்பது சிறந்தது.

வேறு எஸ்யூவிகள் வருமா?

இந்தியாவில் உள்ள லேண்ட் க்ரூஸர் சொகுசு எஸ்யூவி -யின் மினியேச்சர் பதிப்பை டொயோட்டா ஃபார்ச்சூனர் வாகனத்துக்கு மேலே நிலை நிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை டொயோட்டா கவனித்து வருவதாகவும் ராய்ட்டர்ஸ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. டொயோட்டா அதனுடன் முன்னோக்கிச் சென்றால், அது ஆடம்பரப் பிரிவு வாகனங்களுக்குக் குறைவான விலையில் உள்ளூரில் அசெம்பிள் செய்யப்பட்ட காராக அது இருக்கும்.

ஆதாரம்

மேலும் படிக்க: XUV700 ஆன் ரோடு விலை

s
வெளியிட்டவர்

sonny

  • 71 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.86.92 - 97.84 லட்சம்*
Rs.68.50 - 87.70 லட்சம்*
பேஸ்லிப்ட்
பேஸ்லிப்ட்
Rs.7.51 - 13.04 லட்சம்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை