டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது வாகனங்களை 2015 BBIN நட்பு ராலியில் பங்கேற்பதற்காக வழங்கியது
published on நவ 18, 2015 05:33 pm by raunak
- 21 Views
- ஒரு கருத்த ை எழுதுக
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், 2015 BBIN நட்பு ராலியில் பங்கேற்பதற்காக தனது ஃபார்ச்சியூனர்கள் மற்றும் இன்னோவாக்களை வழங்கியது. பங்க்ளாதேஷ், பூட்டான், இந்தியா மற்றும் நேபால் ஆகிய நாடுகளுக்கிடையே நடக்கும் BBIN ஃபிரண்ட்ஷிப் மோட்டார் ராலீ புவனேஸ்வரில் ஆரம்பித்தது. 80 பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் இந்த ராலியின் தூரம் 4500 கிலோ மீட்டராகும். ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியான மரியாதைக்குரிய நீதிபதி திரு. D. H. வகேளா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளரான திரு. விஜய் சிப்பெர், டொயோடா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் முழு நேர இயக்குனருமான திரு. சேகர் விஸ்வநாதன் மற்றும் இந்த ராலியில் பங்கேற்கும் 4 நாடுகளின் தூதுவர்கள்/உயர்ஸ்தானிகர்கள் உள்ளிட்ட முக்கிய கனவான்கள் இந்த ராலியைத் தொடங்கி வைத்தனர்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் துணைத்தலைவர் மற்றும் முழு நேர இயக்குனருமான திரு. சேகர் விஸ்வநாதன் இந்த நிகழ்ச்சியில் பேசும் பொது, “நான்கு நாட்டு மக்களின் பரஸ்பர நட்பை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் நடக்கும் இந்த ராலியின் ஒரு பகுதியாக செயல்படுவதில் டொயொட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் பெருமைப்படுகிறது. இந்த பேரணிக்காக நான்கு நாடுகளின் போக்குவரத்து வழிகளையும் நட்புடன் திறந்து விட்டுள்ளது போல பொருளாதார வழிகளும் திறக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனெனில், இத்தகைய மாற்றம் ஒரு ஆக்கபூர்வமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். 4 நாடுகள் இணையும் இந்த முயற்சிக்கு துணை நிற்பது எங்களுக்கு விசேஷமானது. மேலும், வாகனத் துறையில் பாதுகாப்புக்கான அறப்போரை நடத்தும் எங்கள் நிறுவனத்திற்கு, சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிற இந்தச் செயல் நிச்சயமாக மிகவும் முக்கியமானதாகும்,” என்று கூறினார்.
மீண்டும் ராலியில் கவனம் செலுத்துவோம். புபனேஸ்வரில் ஆரம்பிக்கும் இந்த ராலி, இந்தியாவில் உள்ள ராஞ்சி, பாட்னா, சிலிகுரி, கேங்க்டாக்; பூட்டானில் உள்ள புண்ட்ஷோலிங்க் திம்பு, மொங்கார், சாம்டிருப், ஜோங்க்கர்; இந்தியாவில் உள்ள கவுகாத்தி, சிக்கிம், சில்சார், அகர்ட்டாலா; பங்களாதேஷில் உள்ள சிட்டாகோங்க் மற்றும் டாக்கா போன்ற நகரங்களைச் சுற்றி வந்து, கொல்கத்தாவில் உள்ள விக்டோரியா மெமோரியலில் முடிவடையும். இந்த நீண்ட நெடிய பயணத்திற்கு தனது வாகனங்களைத் தந்ததோடு மட்டுமல்லாமல், டொயோட்டா நிறுவனம் 2015 நவம்பர் 25 -ஆம் தேதி, சாலை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான டிரைவிங்கின் முக்கியத்துவம் என்ற தலைப்பில், கவுகாத்தியில் ஒரு கருத்தரங்கு நடத்தி, மக்களின் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
மேலும் வாசிக்க:
- புதுப்பொலிவூட்டப்பட்ட டொயோட்டா எடியோஸ் லிவா அறிமுகம்
- அடுத்துவரும் டொயோட்டா கார்களை குறித்த ஒரு கண்ணோட்டம்!
0 out of 0 found this helpful