டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் லீடர்ஷிப் பதிப்பு ரூபாய் 21.21 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
published on மார்ச் 14, 2020 01:48 pm by dinesh for டொயோட்டா இனோவா கிரிஸ்டா 2016-2020
- 39 Views
- ஒரு கருத்தை எழுதுக
இதன் 2.4 விஎக்ஸ் எம்டி 7-இருக்கைகள் கொண்ட வகையைக் காட்டிலும் 62,000 ரூபாய் அதிகம்
-
கைமுறை செலுத்துதல்களுக்கு மட்டுமே டீசல் இயந்திரம் கிடைக்கிறது.
-
இரட்டை தொனியிலான மேற்கூரை மற்றும் உலோக கலவைகள் போன்ற ஒப்பனை புதுப்பிப்புகளைக் கொண்டுள்ளது.
-
விஎக்ஸ் வகையில் 360 டிகிரி கேமரா மற்றும் தானியங்கி முறையிலான மடியக்கூடிய ஓஆர்விஎம்களைப் பெறுகிறது.
-
சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் இரண்டுக்கும் கருப்பு வண்ண மேற் கூரை அமைப்பைப் பெறுகிறது
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவில் லீடர்ஷிப் பதிப்பை ரூபாய் 21.21 லட்சம் (எக்ஸ்ஷோரூம் டெல்லி) விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது விஎக்ஸ் வகையை அடிப்படையாகக் கொண்டது, ஆனால் இது 7 இருக்கைகளில் கிடைக்கிறது, அதாவது இரண்டாவது வரிசையில் பிரதான இருக்கைகளைப் பெறுகிறது.
லீடர்ஷிப் பதிப்பில் முதன்மையானது வடிவமைப்பு வேலை ஆகும். இது முன்-ஃபெண்டர்களில் லீடர்ஷிப் பதிப்பு அடையாள சின்னங்களுடன் கறுப்பு-மேற்புறக் கூரை, உலோகக் கலவை மற்றும் உடல் பகுதி முழுவதும் வண்ணப்பூச்சைப் பெறுகிறது. உட்புறத்தில், இது இருக்கை உறைகளில் ஒத்த அடையாள சின்னம், கருப்பு நிற உட்பூச்சுக் கொண்ட உட்புறத்தையும் பெறுகிறது. ஒப்பிடுகையில், நிலையான இன்னோவா டன்-ப்ரௌன் இருக்கை உறைகளுடன் வருகிறது, அதே சமயத்தில் முகப்பு பெட்டி செயற்கை முறையிலான மர செருகலைப் பெறுகிறது.
தானியங்கி முறையில் மடியக்கூடிய ஓஆர்விஎம் கள் மற்றும் 360 டிகிரி கேமராவைத் தவிர்த்து, வரையறுக்கப்பட்ட பதிப்பு மாதிரி அதன் சிறப்பம்சங்களின் பட்டியலை விஎக்ஸ் வகையுடன் பகிர்ந்து கொள்கிறது. உயர்-சிறப்பம்சம் பொருந்திய இசட்எக்ஸ் வகையில் கூட இன்னோவாவுக்கு 360 டிகிரி கேமரா இடம் பெறவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மூன்று காற்றுப் பைகள், இபிடி கொண்ட ஏபிஎஸ், வாகன நிலைத்தன்மை கட்டுப்பாடு, மலை ஏற்ற உதவி, வாகனத்தை பின்புறமாக நிறுத்த உதவக்கூடிய உணர்விகள், தானியங்கி முறையிலான குளிர்சாதன வசதி, தானியங்கி முறையிலான எல்இடி முகப்பு விளக்குகள், மழை-நீரைத் துடைக்கும் துடைப்பான், அழுத்த-பொத்தான் மூலம் வாகன இயக்கம், வேகக் கட்டுப்பாடு மற்றும் 7 அங்குல தொடுதிரை ஒளிப்பரப்பு அமைப்பு ஆகியவை தயாரிப்பின் பிற சிறப்பம்சங்கள் ஆகும்.
லீடர்ஷிப் பதிப்பு ஒரு வடிவமைப்பு வேலை கொண்டது என்பதால், இது தொடர்ந்து 2.4 லிட்டர் டீசல் அலகைப் பெறுகிறது, இது 150 பிஎஸ் ஆற்றலையும் 343 என்எம் முறுக்கு திறனையும் உருவாக்குகிறது. டொயோட்டா 5-எச்டி எம்டியுடன் மட்டுமே வரையறுக்கப்பட்ட பதிப்பு மாதிரியை வழங்குகிறது.
நிலையான விஎக்ஸ் டீசல் இயந்திரம் 7 இருக்கைகள் கொண்ட மாதிரியின் விலை ரூபாய் 20.59 லட்சம் ஆகும் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி), லீடர்ஷிப் பதிப்பைக் காட்டிலும் ரூபாய் 62,000 குறைவாக உள்ளது.
• டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா சிஎன்ஜி முதல் முறையாகச் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது
மேலும் படிக்க: டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா டீசல்
0 out of 0 found this helpful