டொயோட்டா ஹைரைடர் vs ஸ்கோடா குஷாக் vs ஹூண்டாய் க்ரெட்டா vs மாருதி கிராண்ட் விட்டாரா vs வோக்ஸ்வேகன் டைகுன்: இடவசதி மற்றும் நடைமுறை சூழ்நிலைக்கான ஒப்பீடு
modified on மார்ச் 22, 2023 03:50 pm by rohit for ஹூண்டாய் கிரெட்டா 2020-2024
- 37 Views
- ஒரு கருத்தை எழுதுக
உங்கள் குடும்பத்திற்கு ஒரு SUV -யை தேர்ந்தெடுப்பது என்பது கடும் சோதனையாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் எதை, எதற்காக தேர்வு செய்யவேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
ஹூண்டாய் க்ரெட்டா நமது சந்தையில் நுழைந்ததிலிருந்து காம்பாக்ட் SUV இடத்தில் பிரபலமான தேர்வாக இருந்து வருகிறது. அதற்கு நிகரானதாக கருதப்படும் கியா செல்டோஸ், 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் களமிறங்கிய அதே நேரத்தில் ஹூண்டாய் அதைத் தொடர்ந்து வருடத்தில் இரண்டாம் தலைமுறை மாடலை அறிமுகப்படுத்தியது. செல்டோஸின் மூன்று ஆண்டு சந்தை இருப்பைத் தொடர்ந்து, கியா விரைவில் இந்தியாவில் அதன் ஃபேஸ்லிஃப்டட் மறுசீரமைப்பு செய்யப்பட்ட மாடலை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய்-கியா ஜோடி வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்களை ஈர்ப்பதோடு ஸ்கோடா/VW SUVகள் மற்றும் சமீபத்தில் டொயோட்டா-மாருதி நிறுவனங்களும் இந்த பட்டியலில் சேர்ந்து கொண்டதால் போட்டி கடுமையாகத் தொடங்கியது. எனவே, இந்த மதிப்பாய்வில், காம்பாக்ட் SUV இடத்தில் உள்ள ஸ்டால்வார்ட்களை ஒப்பிட்டுப் பார்த்து, உங்கள் குடும்பத்திற்கு சரியானதைத் தேர்வு செய்வதற்காக உங்களுக்கு உதவ முடிவு செய்தோம்.
Looks
தோற்றம்
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
-
அனைத்து சிறிய SUVகளும் அவற்றின் நீளம் மற்றும் வீல்பேஸ் அடிப்படையில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருந்தாலும், அவை அனைத்தும் தனித்துவமான தோற்றம் கொண்டவையாக உள்ளன.
-
SUVகளின் வழக்கமான பாக்ஸி ஸ்டைலை விரும்புவோருக்கு, ஸ்கோடா குஷாக் மற்றும் வோக்ஸ்வாகன் டைகன் ஆகியவை கவர்ச்சியாக தோன்றலாம். அவை மிகவும் சிறிய SUV -களாக இருந்தாலும், இவற்றில் மிக நீளமான வீல்பேஸ்களும் உள்ளன. ஸ்டைலிங் மற்றும் க்ரில் அளவில் மாற்றம் இல்லாமல் வெறித்தனமான டிசைன் ஃபிலாசஃபியும் இவற்றில் உள்ளது.
-
மற்ற மூன்று SUVகளான ஹூண்டாய் க்ரெட்டா, டொயோட்டா ஹைரைடர் மற்றும் மாருதி கிராண்ட் விட்டாரா ஆகியவை சற்று வளைவான தோற்றம் கொண்டவை, அதே சமயம் டொயோட்டா மாடல் மிக நீளமானது மற்றும் மாருதி மிக உயரமானது. க்ரெட்டாவில் அதிகபட்ச போலரைசிங் முன்பக்கம் இருந்தாலும், அதன் வளைவான தோற்றம் மற்றவற்றிலிருந்து அதை பெரிதாகத் தோற்றமளிக்கச் செய்கிறது.
-
ஐந்து SUV-கள் அனைத்திலும் உள்ள பொதுவான கூறுகள் 17-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள் மற்றும் LED DRLகள் கொண்ட ஆட்டோ-LED ஹெட்லைட்கள் ஆகியவை அடங்கும்.
கேபின் தரம்
-
காம்பாக்ட் SUV ஸ்பேஸில் மிகச் சமீபத்திய அறிமுகமாக இருப்பதால், டொயோட்டா ஹைரைடர்- மாருதி கிராண்ட் விட்டாரா டுயோ அதிக பிரீமியம் மற்றும் விலையுயர்ந்த இண்டீரியரால் தனித்து நிற்கின்றன. இரண்டு SUV -க்களும் டூயல்-டோன் கேபின் தீம்களைப் பெறுகின்றன (இரண்டில் லேசான அல்லது வலுவான-ஹைப்ரிட் வேரியன்ட்டைப் பொறுத்து ஷேட் மாறுபடலாம்), டேஷ்போர்டில் மென்மையான-டச் லெதரெட் மெட்டீரியல் அவற்றின் பிரீமியம் இன்டீரியர் அழகை மேம்படுத்துகிறது.
-
அடுத்த இடத்தைப் பிடிப்பது ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா கார்கள். டொயோட்டா-மாருதி SUV கள் போன்ற செழிப்பான மற்றும் பிரீமியம் அனுபவத்தை அவை வழங்கவில்லை என்றாலும், டாஷ்போர்டில் டிரிம் இன்செர்ட் (தேர்ந்தெடுக்கப்பட்ட வேரியன்டுகளில் நிறம்-ஒருங்கிணைக்கப்பட்டது) மற்றும் குரோம் ஆக்சண்ட் ரோட்டரி டயல்கள் (குஷாக்) கொண்ட இரண்டு-ஸ்போக் ஸ்டீயரிங் உட்பட அவற்றின் தனித்துவமான ஸ்டைலில் உள்ளன. இரண்டு ஜெர்மன் SUV -களிலும் பிளாஸ்டிக் தரம் சற்று குறைவாக இருக்கின்ற ரூஃப் லைனர் மற்றும் சன் ஷேடுகள் உள்ளிட்ட சில இடங்கள் உள்ளன.
-
க்ரெட்டாவின் கேபின் அதன் போட்டி SUV களில் உள்ளதை விட செயல்பாட்டின் அடிப்படையில் குறைவாக இல்லை என்றாலும், இங்குள்ள மற்ற நான்குடன் ஒப்பிட்டால் பிரீமியம் டிசைன் அப்பீல் இதில் இல்லை. நிச்சயமாக, அதன் கேபின் வசதியான ரீதியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் நன்றாக அமைக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் பட்டன்களையும் பெறுகிறது, ஆனால் பிளாஸ்டிக் மற்றும் SUV -யின் பில்ட் தரம் என வருகையில் நீங்கள் மேலும் எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: ஹூண்டாய் இந்தியா, GM இன் தலேகான் ஆலையை வாங்குவதற்கான டெர்ம் ஷீட்டில் கையெழுத்திட்டது
முன் இருக்கை
-
ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா இரண்டும் நன்கு வலுவூட்டப்பட்ட மற்றும் சொகுசான வகையில் செய்யப்பட்ட (கிராண்ட் விட்டாரா) லெதரெட் முன் இருக்கைகளைப் பெறுகின்றன. உறுதிக்கும் பஞ்சமில்லை, நீண்ட பயணங்களில் களைப்பிலிருந்து உங்களை களைப்பேற்படாமல் பாதுகாக்கிறது. டிரைவரின் இருக்கை மற்றும் ஸ்டீயரிங் இரண்டும் உங்களுக்கு மிகவும் பொருத்தமான மற்றும் வசதியான ஓட்டும் நிலையைக் கண்டறிய உதவும் வகையில் ஏராளமான அட்ஜெஸ்ட்மெண்ட்களைப் பெறுகின்றன.
-
உங்களுக்கு பெரிய மற்றும் இடவசதியான முன் இருக்கைகள் தேவைப்பட்டால், க்ரெட்டாவை இங்கே நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். பொருத்தமான டிரைவிங் பொசிஷன் கிடைக்க, ஓட்டுநருக்கு 8-வே சீட் அட்ஜஸ்ட்மெண்ட் உடன் தாராளமாக குஷன் செய்யப்பட்ட இருக்கைகள். இருப்பினும், ஹூண்டாய் ஸ்டீயரிங் வீலுக்கான டெலஸ்கோபிக் அட்ஜஸ்மெண்ட் உடன் பொருத்தப்படவில்லை.
-
ஸ்கோடா குஷாக் மற்றும் வோக்ஸ்வேகன் டைகன் இரண்டிலும், முன் இருக்கைகள் நல்ல வடிவமாகவும், பெரும்பான்மையான மக்களுக்கு எற்றபடியும் இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள், இருப்பினும் உடல்வாகு பெரிதாக உள்ளவர்களுக்கு சற்று தொந்திரவாக இருக்கலாம்.
பின் இருக்கை
-
ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா இரண்டிலும் தேவைப்பட்டால் மூன்று சராசரி அளவிலான பெரியவர்கள் உட்கார முடியும், பெரிய உடல்வாகு கொண்டவர்கள் அதிக இடத்தை விரும்புவார்கள். அதன் பின் இருக்கைகளை ரெக்லைன் செய்ய முடிந்தாலும், ஆறு அடி அல்லது அதற்கு மேல் உள்ளவர்கள் ஹெட்ரூம் சற்று இறுக்கமாக இருப்பதைக் காணலாம். இரண்டு SUV -களிலும் மூன்று தனித்தனி ஹெட்ரெஸ்ட்கள் மற்றும் மூன்று-பாயின்ட் சீட் பெல்ட்கள் அனைத்து பின்புற பயணிகளுக்கும் கிடைக்கும். டொயோட்டா மற்றும் மாருதி ஆகியவை இரட்டை பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் இரண்டு USB போர்ட்களுடன் (டைப் A மற்றும் டைப் C) பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் கேபின்களில் டார்க் ஹ்யூஸ் இருந்தாலும், பெரிய பனோரமிக் சன்ரூஃப்கள் அதிக காற்றோட்டமாக இருக்கும் வகையில் சிறிது வெளிச்சத்தை உள்ளே அனுமதிக்கின்றன. லேசான கலர் தீம் இருப்பதால் கேபின் அளவை பெரிதாக காட்ட உதவுகிறது.
-
க்ரெட்டா இங்கே மூன்று பேருக்கான இருக்கைகளுக்கு சிறந்த SUV ஆகும், அதில் தட்டையான சீட் பேக் உள்ளது, இதனால் நடுவில் உட்காரும் பயணிகளும் வசதியாக இருக்க அனுமதிக்கிறது. பின்புற ஏசி வென்ட்கள் மற்றும் USB போர்ட் உள்ளிட்ட ஓட்டுனர்களால் இயக்கப்பட விரும்புவோருக்கு, அருமையாக அமைந்துள்ளது. இதன் ஹெட் ரெஸ்ட்களுக்கு இரண்டு குஷன்கள் உள்ளது (ஆனால் நடுவில் உட்காரும் பயணிகளுக்கு ஹெட்ரெஸ்ட் இல்லை), சன் ஷேட்கள் மற்றும் பின்புற இருக்கை அனுபவத்தைப் கூடுதலாக்க ஒரு பனோரமிக் சன்ரூஃப் (கேபினை பின்புறத்திலும் காற்றோட்டமாக உணர வைக்கிறது) உள்ளது.
-
ஸ்கோடா குஷாக் மற்றும் VW டைகுனின் பின் இருக்கைகள் கேபினுக்குள் நகர்ந்தாலும் பயணிகளை தங்கள் இருக்கைகளில் நன்றாக வைத்திருக்கும் வலிமையான போல்ஸ்டெரிங் உடன் போதுமான அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஃபோர்-சீட்டர்களாக டுயோவைப் பயன்படுத்துவது சிறந்தது, ஏனெனில் கூடுதல் நபர் (நடுவில் உட்காரும் பயணிகள்) குறைந்த கேபின் அகலம் மற்றும் இருக்கைகளின் நெருக்கமான இடத்திற்காக சிரமப்படலாம்.
மேலும் படிக்க: உங்கள் சன்ரூஃபை சரியாகப் பராமரிக்க டாப் 5 ஆலோசனைகள்
அம்சங்கள்
|
|
|
|
|
|
|
|
-
இங்குள்ள அனைத்து ஐந்து SUVக்களும், சன்ரூஃப் (மூன்று மாடல்களில் பனோரமிக் யூனிட்), வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் உட்பட நீங்கள் விரும்பும் பெரும்பாலான பிரீமியம் அம்சங்களைப் பெறுகின்றன.
-
ஒவ்வொரு SUV அல்லது இந்த விஷயத்தில் ஒவ்வொரு ஜோடி SUVயிலும் தங்கள் போட்டியாளர்களை விட சில நன்மைகள் கொண்டிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, வலுவான- ஹைப்ரிட் வேரியண்ட்களான டொயோட்டா மற்றும் மாருதி மாடல்கள் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே மற்றும் 360 டிகிரி கேமராவைப் பெறுகின்றன, இவை இரண்டும் செக்மெண்ட்-எக்ஸ்க்ளூசிவ் ஆகும்.
-
ஜெர்மன் டுயோவான கிராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடரில் ரெயின் - சென்சிங் வைப்பர் மற்றும் கூல்டு கிளவ் பாக்ஸ் வருகிறது.
-
க்ரெட்டா இங்கு மிகப்பெரிய டச்ஸ்க்ரீனை பெறுகிறது (10.25-இன்ச் அளவு) மேலும் பவர்டு ஓட்டுனர் இருக்கை, பின்புற சன்ஷேடுகள் மற்றும் டிரைவ் மற்றும் டிராக்ஷன் மோட்களைப் பெறும் ஒரே SUV இதுவாகும்.
பாதுகாப்பு
-
ஸ்கோடா/வோக்ஸ்வேகன் SUV -களுக்கு இங்குள்ள மிகப்பெரிய பிளஸ் என்னவென்றால், குளோபல் NCAP இலிருந்து பெறப்பட்ட வலுவான ஐந்து நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீடு ஆகும்.
-
மறுபுறம், க்ரெட்டாவின் சோதனை முடிவுகள் ஏப்ரல் 2022 -ல் வெளிவந்தன, இதில் சராசரியாக மூன்று நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. சோதனையின் கடினத் தன்மை என்பது சற்று குறைவாகவே இருந்தபோதும், இன்று இருப்பது போல் இது பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்படவில்லை என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
-
மாருதி-டொயோட்டா மாடல்களைப் பற்றி பேசுகையில், இவை குளோபல் NCAP ஆல் இன்னும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை.
-
ஐந்து SUV -கள் அனைத்தும் ஆறு ஏர்பேக்குகள், EBD உடன் ABS, ISOFIX சைல்ட் சீட் ஆங்கரேஜ்கள் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிடி கண்ட்ரோல் (ESC) ஆகியவற்றைப் பெறுகின்றன.
மேலும் படிக்க: ஒரு கார் SUV என வகைப்படுத்துவதற்கான 5 தேவைகளை சாட்GPT விளக்குகிறது
பூட் ஸ்பேஸ்:
-
மூன்று சூட்கேஸ்கள் மற்றும் இரண்டு சாஃப்ட் பேக்குகள் அடங்கிய எங்கள் டெஸ்ட் லக்கேஜ்களை ஐந்து SUV -களில் எது அதிகபட்ச பூட் இடத்தை வழங்குகிறது என்பதைப் பார்க்க பயன்படுத்தினோம்.
-
மாருதி கிராண்ட் விட்டாரா/டொயோட்டா ஹைரைடர் என்று வரும்போது, பெரிய பேட்டரி பேக் இல்லாததால், அதிக லக்கேஜ்களை சேமிக்கக்கூடியது அதன் மைல்ட்-ஹைப்ரிட் வெர்ஷனாகும். மைல்ட்-ஹைப்ரிட் வேரியண்ட்டைப் பொருத்தவரையில், SUV -கள் இரண்டு சாஃப்ட் பேக்குகளுடன் மிகப்பெரிய மற்றும் சிறிய டிராலி பேக்குகளை எடுத்துக் கொள்ளலாம். மறுபுறம், வலுவான ஹைப்ரிட்-வேரியன்டுகள் ஒரு சாஃப்ட் பேக்குடன் மிகப்பெரிய மற்றும் மிகச்சிறிய டிராலி பேக்குகளுக்கு மட்டுமே இடம் இருக்கின்றன.
-
மீதமுள்ள மூன்று SUV -களில், ஹூண்டாய் க்ரெட்டாவில் மட்டுமே அதிகபட்ச பூட் ஸ்பேஸ் திறன் உள்ளது (433 லிட்டர்) என ஆவணப்படுத்தப்பட்டுள்ள அதே வேளையில், ஐரோப்பிய SUV -கள் ஒவ்வொன்றிலும் 385 லிட்டர்கள் உள்ளன. நிதர்சனத்தில், குஷாக் மற்றும் டைகுனில் மட்டுமே மூன்று சூட்கேஸ் அத்துடன் ஒரு சாஃப்ட் பேக்கை வைக்கலாம். ஏனென்றால், குஷாக் மற்றும் டைகனில் உள்ள பூட் நன்கு வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், கிரெட்டாவை விட ஆழமானது. ஹூண்டாய் SUV -யில் அதன் பார்சல் ட்ரே அகற்றப்பட்டால் மட்டுமே இரண்டு சாஃப்ட் பேக்களுடன் பெரிய மற்றும் சிறிய டிராலி பேக்குகளை எடுத்துச் செல்ல முடியும்.
பவர்டிரெய்ன்கள் மற்றும் சவாரியின் தரம்
|
|
|
|
|
|
|
|
|
|
115PS/ 150PS |
115PS/ 140PS/ 115PS |
|
|
178Nm/ 250Nm |
144Nm/ 242Nm/ 250Nm |
|
|
|
|
|
|
FWD |
FWD |
-
இங்குள்ள அனைத்து SUV -களிலும், க்ரெட்டா தான் அதிக எண்ணிக்கையிலான இன்ஜின்-கியர்பாக்ஸ் காம்பினேஷன்களைக் கொண்டுள்ளது. டீசல் பவர்டிரெய்ன் விருப்பத்தை வழங்கும் ஒரே கார் தயாரிப்பு நிறுவனமும் ஹூண்டாய் தான். டீசல் பவர்டிரெய்ன் ஓட்டுவதற்கு எளிதானது மற்றும் அதிக எரிபொருள் செயல்திறனை வழங்குகிறது என்பதுடன், இது நகரத்திற்கு மிகவும் பொருத்தமான நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் யூனிட் ஆகும். இருந்தாலும், இதனால் அவ்வப்போது ஹைவே டிரைவ்களையும் சமாளிக்க முடியும். நீங்கள் க்ரெட்டாவை ஆக்ரோஷமான இன்ஜினுடன் விரும்புபவராக இருந்தால், உங்கள் தேர்வு டர்போ-பெட்ரோல் பவர்டிரெயினாக இருக்க வேண்டும்.
-
ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வேகன் கார்கள் எப்போதுமே அவற்றின் ஆக்ரோஷமான மற்றும் அற்புதமானஇன்ஜின்களுக்காக அறியப்படுகின்றன, மேலும் அவை ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிடித்தவையாக உள்ளன. குஷாக்-டைகுன் ஆகிய இரண்டும் பெரிய 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் என்று வரும்போது, ஸ்மூத்தான, அதிக ரெஸ்பான்சிவ் ஆன ரீஃபைன் செய்யப்பட்ட இன்ஜினை விரும்புவோருக்கு இது பொருத்தமானது.
-
மாருதி-டொயோட்டா SUV -களின் மைல்ட்-ஹைபிரிட் யூனிட் நகரத்தில் அதன் கடமைகளைச் சிறப்பாகச் செய்தாலும், குறிப்பாக அதன் ஆட்டோமேடிக் வெர்ஷனில் நெடுஞ்சாலைப் பயணங்களில் அல்லது அதிக நபர்கள்/சாமான்களுடன், சென்றால் நீங்கள் விரும்புவது போல இருக்காது. SUV -யில் இருந்து அதிக எரிபொருள் செயல்திறந் கிஅடிக்க வேண்டும் என விரும்புபவர்கள் ஹைப்ரிட் வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும், இது பெரும்பாலான சூழ்நிலைகளில் குறைந்தபட்சம் 20 kmpl ஐ வழங்கும். எக்ட்ரிக் மோட்டார் ஆக்சிலரேஷனில் ஊக்கத்தை அளித்தாலும், நெடுஞ்சாலைகளில் அது போதுமான அளவு ஆக்ரோஷத்தை உணரமுடிவதில்லை. மாருதி மற்றும் டொயோட்டா SUV -களில், உங்களுக்குத் தேவைப்படும் பட்சத்தில், ஆல்-வீல் டிரைவ் டிரெய்னை (AWD) பெறுகின்றன, ஆனால் மைல்ட்-ஹைப்ரிட் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் காம்போவுடன் மட்டுமே.
தீர்ப்பு
-
க்ரெட்டா - மிகப் பழமையான மாடலாக இருந்தாலும் - அதிக எண்ணிக்கையிலான பவர்டிரெய்ன் விருப்பங்களைப் பெறும் ஒரே SUV மற்றும் தாராளமான கேபினில் இடம் மற்றும் நல்ல சவாரி தரம் போன்ற பல வலுவான விஷயங்களைக் கொண்டுள்ளது. அதன் பூட் ஸ்பேஸ் மற்றும் இன்டீரியர் தரம் சற்று சிறப்பாக இருந்திருந்தால், ஹூண்டாய் கார் இங்கு சரியான ஆல்ரவுண்டராக இருந்திருக்கும்.
-
அதன் பிரிவில் அதிக எரிபொருள் சிக்கன திறன் கொண்ட காம்பாக்ட் SUV மற்றும் பிரீமியம் கேபின் மற்றும் அம்சங்கள் பட்டியலை நீங்கள் தேடுகிறீர்களானால், உங்கள் தேர்வுகளாக மாருதி கிராண்ட் விட்டாரா/டொயோட்டா ஹைரைடர் ஹைப்ரிட் மட்டுமே இருக்கும். இரண்டுமே பெட்ரோல் - ஒன்லி ஆஃபரிங்கில் வந்தாலும், இரண்டு பவர்டிரெயின் ஆப்ஷன்கள் மற்றும் பல பெஸ்ட் - இன் - செக்மெண்ட் அம்சங்களுடன் வருகிறது.
-
கடைசியாக, ஜெர்மன் தயாரிப்புகள் அதன் பெயருக்கு ஏற்ப அழகான தோற்றம் கொண்டிருக்கும், அத்துடன் வேடிக்கை நிறைந்ததாகவும் அதன் பெயருக்கேற்ப இருக்கிறது. நிச்சயமாக, அவை ஹூண்டாய் மற்றும் மாருதி-டொயோட்டா உடன் ஒப்பிடும்போது சில அம்சங்கள் இல்லை மற்றும் மற்றதைப் போல பெரிதாகத் தெரியவில்லை, ஆனால் நீங்கள் அதைக் பொருட்படுத்தாமல், சிறப்பான ஓட்டுநர் அனுபவத்தில் ஈடுபாடு கொண்டு அதைப் பெற விரும்பினால், இவை சிறந்த ஒன்றாகும்.
மேலும் படிக்கவும்: கிரெட்டா ஆன் ரோடு விலை.
0 out of 0 found this helpful