• English
  • Login / Register

2016 ஆட்டோ எக்ஸ்போவில் டொயோடா

published on ஜனவரி 28, 2016 12:13 pm by nabeel

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

டொயோடா நிறுவனம் இந்தியாவில் இப்போது மிகவும் பிரசித்தி பெற்ற  கார் தயாரிப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறது. தங்களது  ஹைப்ரிட் மற்றும் மின்சார தொழில்நுட்பத்தால்  உலகம் முழுக்க நன்கு தெரிந்த பெயராக டொயோடா நிறுவனம் விளங்குகிறது.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  தங்களது தயாரிப்புக்களை இந்த 2016 ஆட்டோ எக்ஸ்போவில்  டொயோடா நிறுவனம் காட்சிபடுத்த உள்ளது.   தொடர்ந்து நான்காவது முறையாக , உலக அளவில் விற்பனையில் முதல் இடத்தை கடந்த 2015 ஆம் ஆண்டுக்காக இந்நிறுவனம்  பெற்றுள்ள  நிலையில் .  இது இந்நிறுவனத்தின் வெற்றி மகுடத்தில் மேலும் ஒரு மாணிக்க கல் போல  இணைந்து கூடுதல் சிறப்பு  சேர்க்கிறது. மற்ற கார் தயாரிப்பாளர்களை  போலவே இந்த ஜப்பான் நாட்டு கார் தயாரிப்பாளர்களும்  எதிர்வரும் ஆட்டோ எக்ஸ்போ 2016ல் வாடிக்கையாளர்களை  கவர்ந்திழுக்க  வரிந்து கட்டிக் கொண்டு  களத்தில் இறங்கி உள்ளனர்.  இந்தியர்களால் பெரிதும் விரும்பப்பட்ட டொயோடா இன்னோவா கார்களின் முற்றிலும் புதிய  மேம்படுத்தப்பட்ட மாடல் ஒன்று இந்த ஆட்டோ எக்ஸ்போவில்  காட்சிக்கு வைக்கப்படுகிறது.  டொயோடா நிறுவனம் இந்த ஆட்டோ எக்ஸ்போவில்  தங்களது அரங்கம்  எண் - 9 ல் காட்சிக்கு வைக்க உள்ள வாகனங்களின்  விவரங்களை இனி வரும் பத்திகளில் பாப்போம். 

டொயோடா இன்னோவா 

இன்னோவா கார்களின் இந்த புதிய அவதாரம் சற்று நீளமாகவும் , மிக நேர்த்தியான நவீன வடிவமைப்புக்களுடனும் ஏராளமான சிறப்பம்சங்களுடனும் வெளியிடப்பட உள்ளது. இந்த இன்னோவா புதிய ஹெலிக்ஸ் ப்லேட்பார்மின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த MPV ரக வாகனங்கள் 2.4 - லிட்டர் GD டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு  வெளியிடப்படும் என்றும் 5 - வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வசதி மற்றும் 6 - வேக ஆட்டோமேடிக் ட்ரேன்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும்  என்றும் தெரிகிறது. இந்த 2.4 லிட்டர் என்ஜின்  147bhp   அளவு சக்தியையும் , 380Nm  அளவுக்கு டார்கையும் வெளியிடும் ஆற்றல் கொண்டதாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இவைகளைத் தவிர   டச் ஸ்க்ரீன் இந்போடைன்மென்ட் அமைப்பு , டிஜிடல் MID, ஏம்பியன்ட் லைட்டிங் , உயரம் மற்றும் டில்ட் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதியுடன் கொடிய ஸ்டீரிங் வீல் போன்ற அம்சங்களும் இந்த புதிய இன்னோவா  வாகனங்களை அலங்கரிக்கிறது. 

டொயோடா பார்சூனர்

மிக அதிகமாக பேசப்படும் SUV வாகனமான 2016  பார்சூனர் வாகனங்கள் இந்த 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போ மூலமாக இந்தியாவில் நுழைகிறது. இந்த  2016  பார்சூனர் ஏற்கனவே ஆஸ்ட்ரேலியா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகமாகி ரூ. 22 லட்சங்களுக்கு விற்பனை ஆகி கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 6, 2015 ல் தான் இந்த பார்சூனர் வாகனங்கள் கடைசியாக மேம்படுத்தப்பட்டு வெளியானது.  அதன் பின் எந்த மாற்றத்திற்கும் உட்படுத்தப்படவில்லை . இந்த 2 ஆம் தலைமுறை பார்சூனர் புதிய  முன்புற க்ரில் மற்றும் இரட்டை குரோம் ஸ்லேட்ஸ் போருதப்பட்டதன் காரணமாக கம்பீரமான  தோற்றத்தை பெற்றுள்ளது. இந்த க்ரில் அமைப்பு கிடைமட்டமாக நீண்டு முகப்பு விலக்கல் வரை நீண்டு இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது காரின் தோற்றத்தை மேலும் சிறப்பாக்கி காட்டுகிறது. 

டொயோடா கரோலா ஆல்டிஸ் ஹைப்ரிட்

ஹைப்ரிட் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக  கரோலா ஆல்டிஸ் கார்களின் ஹைப்ரிட் வெர்ஷன் ஒன்றை இந்த ஆட்டோ எக்ஸ்போவில் டொயோடா நிறுவனம் காட்சிப்படுத்தும் என்று தெரிகிறது.  ஆட்டோ எக்ஸ்போ முடிந்த பின்னர் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும்  இந்த கார் ,73 bhp சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும் என்றும் மேலும் இந்த என்ஜின் அமைப்புடன் 60 bhp சக்தியை வெளியிடும் மின்சார மோட்டார் டொயோடா ஹைப்ரிட் சிஸ்டம் 11 இணைக்கப்பட்டிருக்கும் என்றும் தெரிகிறது. லிட்டருக்கு 33கி.மீ மைலேஜ் தரும் என்று ஜப்பானிய சந்தையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 மேலும் வாசிக்க 

was this article helpful ?

Write your கருத்தை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience