சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

2023 பிப்ரவரி மாதத்தில் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 பிராண்டுகள் இவை

modified on மார்ச் 13, 2023 07:27 pm by ansh

மாருதி அதன் வெற்றிக்கோப்பையை தக்க வைத்துள்ளது அதேநேரத்தில் ஹீண்டாய், டாடாவை விட சற்று முன்னேறி உள்ளது.

2023 பிப்ரவரி மாதத்தில் டாப் 10 பிராண்டுகள் விற்பனையில் எவ்வாறு இருந்தன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்:


கார் தயாரிப்பாளர்


பிப்ரவரி 2023


ஜனவரி 2023


MoM வளர்ச்சி (%)


பிப்ரவரி 2022

YoY வளர்ச்சி (%)


மாருதி சுஸுகி

1,47,467

1,47,348

0.1%

1,33,948

10.1%


ஹூண்டாய்

46,968

50,106

-6.3%

44.050

6.6%


டாடா

42,865

47,990

-10.7%

39.980

7.2%


மஹிந்திரா

30,221

33,040

-8.5%

27,536

9.8%


கியா

24,600

28,634

-14.1%

18,121

35.8%


டோயோட்டா

15,267

12,728

19.9%

8,745

74.6%


ரெனால்ட்

6,616

3,008

119.9%

6,568

0.7%


ஹோண்டா

6,086

7,821

-22.2%

7,187

-15.3%

MG

4,193

4,114

1.9%

4,528

-7.4%


ஸ்கோடா

3,418

3,818

-10.5%

4,503

-24.1%

டேக் அவேஸ்

மாருதி அதன் வருடாந்திர(YoY) வளர்ச்சியாக 10 சதவீதத்திற்கு அதிகமான வளர்ச்சியைக் கண்டது, ஆனால் அதன் MoM வளர்ச்சி 0.1 சதவீதம் மட்டுமே . 44 சதவீத மார்க்கெட் ஷேருடன், 2023 பிப்ரவரி மாதத்திற்கான மாருதியின் விற்பனை ஹீண்டாய், டாடா மற்றும் மஹிந்திரா மூன்றும் சேர்ந்த விற்பனையை விட அதிகம்.

ஹீண்டாய் 'இன் YoY விற்பனை 6.6 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் மாதாந்திர MoM விற்பனை 6.3 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.

டாடா வும் மாதாந்திர விற்பனையில் 10.7 சதவீத சரிவைக் கண்டது. ஆனால் ஆண்டு விற்பனை ஏழு சதவீதத்திற்கு அதிகமாக உள்ளது.

  • மஹிந்திரா 'வின் MoM விற்பனை 8.5 சதவீதத்திற்கு சரிந்துள்ளது அதேநேரத்தில் அதன் வருடாந்திர YoY விற்பனை 10 சதவீதத்தை நெருங்கியுள்ளது.

  • அதேபோன்று கியா'வின் வருடாந்திர விற்பனை 36 சதவீதத்தை நெருங்கியது, அதன் மாதாந்திர விற்பனை 14 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்துள்ளது.

  • டொயோட்டா தனது MoM மற்றும் YoY இரண்டு விற்பனைகளிலும் முறையே 19.9 சதவீதம் மற்றும் 74.6 சதவீதம் வளர்ச்சியைக் கண்ட இரு பிராண்டுகளில் ஒன்றாகும். இந்தப் பட்டியலில் 10,000யூனிட்-விற்பனைக் குறியீட்டைக் கடந்த கடைசி பிராண்டு இது.

  • 2023 பிப்ரவரியில் அனைத்து விதங்களிலும் நேர்மறை விற்பனைகளைப் பெற்ற மற்றொரு பிராண்டு ரெனால்ட். மாதாந்திர விற்பனையில் 119.9 சதவீத உயர்வுடன் ஏழாவது சிறந்த விற்பனையாகும் பிராண்டாக அது ரேங்கிங்கில் முன்னேறியது.

  • ஹோண்டா MoM விற்பனையில் 22 சதவீதத்திற்கு அதிகமாகவும் YoY விற்பனையில் 15 சதவீதத்திற்கு அதிகமாகவும் சரிவைக் கண்டது .

  • அதேநேரத்தில் MG MoM விற்பனை 1.9 சதவீத உயர்வும், YoY விற்பனையானது 7.4 சதவீத உயர்வும் கண்டது.


  • ஸ்கோடா'வின் மாதாந்திர விற்பனை 10.5 சதவீத சரிவும் அதன் வருடாந்திர விற்பனை 24.1 சதவீத சரிவும் கண்டது.

  • ஒட்டுமொத்தமாக, 2023 ஜனவரியுடன் ஒப்பிடும்போது பயணியர் வாகனத் தொழில்துறையின் மாதாந்திர விற்பனையானது மூன்று சதவீதத்திற்கு அதிகமாக சரிவைக் கண்டது.


மேலும் படிக்க: இந்த 8 கார்கள் மற்றும் அவற்றின் வண்ணமயமான ட்யூயல்-டோன் பெயின்ட் ஆப்சன்களுடன் உங்கள் ஹோலியைக் கொண்டாடுங்கள்

a
வெளியிட்டவர்

ansh

  • 17 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your கருத்தை

Read Full News

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை