• English
  • Login / Register

தங்களின் ஆஃப்-ரோடு சாகசங்களில் அதிக தொழில்நுட்பத்தை தேடுபவர்களுக்காக இந்த ஃபேஸ்லிப்டட் ஜீப் ரேங்லர்

ஜீப் வாங்குலர் க்காக ஏப்ரல் 07, 2023 06:01 pm அன்று rohit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 68 Views
  • ஒரு கருத்தை எழுதுக

இந்த அப்டேட்டுடன், புதிய 12.3 -இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 12 -வே பவர்டு மற்றும் ஹீட்டட் ஃபிரன்ட் இருக்கைகள் உட்பட பல அழகியல் மற்றும் செயல்பாட்டுக்கு உகந்த அம்சங்களை ரேங்லர் சேர்த்துள்ளது.

2024 Jeep Wrangler range unveiled

ஜீப் ரேங்லருக்கு அமெரிக்க சந்தைக்கான மிட்லைஃப் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் சொல்லக்கூடியது போல, பெரும்பாலான மாற்றங்கள் காஸ்மெட்டிக் தொடர்பானவை , சில கேபின் மற்றும் அம்சங்கள் பட்டியலுடன் தொடர்புடையவை.

நீங்கள் அதைப் பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்

2024 Jeep Wrangler Rubicon
2024 Jeep Wrangler Rubicon front

ரேங்க்லர் ரூபிகான் 20 -வது ஆண்டுவிழா எடிஷனில் அறிமுகமான அதே மேம்படுத்தப்பட்ட ஏழு-ஸ்லாட் கிரில் (மெலிதான மற்றும் கருப்பு-வடிவமைக்கப்பட்ட ஸ்லாட்டுகளுடன்)ஜீப் தோற்றத்தை ஃபேஸ்லிப்டட் ரேங்லருக்கு வழங்கியுள்ளது இது கார் தயாரிப்பாளருக்கு ஆஃப்-ரோடு சார்ந்த ரூபிகான் இட்டரேசனின் முன் பம்பரில் ஃபேக்டரி ஃபிட்டட் வின்ச் -ஐ(சுமார் 3,650 கிலோ வரை இழுக்கும் திறன் கொண்டது) சேர்க்க உதவுகிறது. இது ஆஃப்ரோடிங் செய்யும் போது மரங்களுக்கிடையே சிக்குவதைத் தவிர்ப்பதற்காக முன்பக்க விண்ட்ஷீல்ட்டில்-ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டெனாவையும் பெறுகிறது.

2024 Jeep Wrangler

மிட்லைஃப் அப்டேட் புதிய டயர் அளவுகளையும் கொண்டு வருகிறது, இது நிலையான ரேங்லருக்கு 17 -லிருந்து 20 -இன்ச் மற்றும் ரூபிகான் பதிப்பிற்கு 32-லிருந்து 35-இன்ச் வரை இருக்கும். புதிய சாஃப்ட்-டாப் (ஸ்டாண்டர்டு), இரண்டு ஹார்ட் டாப்கள் மற்றும் தனியே பிரிக்கக்கூடிய கதவுகள் கொண்ட இரட்டை கதவு குழு உள்ளிட்ட  டாப், டோர் மற்றும் விண்ட்ஷீல்டு சேர்க்கைகளை ஜீப் வழங்குகிறது.

கூடுதல் நவீனமான கேபின்

2024 Jeep Wrangler cabin
2024 Jeep Wrangler Rubicon cabin

தோற்றப் பொலிவுடன் கூடிய, ரேங்லரின் கேபின் கருவி பேனலைச் சுற்றி மென்மையான-தொடு பொருட்கள் மற்றும் கான்ட்ராஸ்ட் தையல் மற்றும் நாப்பா லெதர் இருக்கைகளைப் பெறுகிறது. முன்பு வழங்கப்பட்ட வட்ட மைய ஏசி வென்ட்கள் இப்போது மேலே உள்ள பெரிய டிஸ்பிளேவுக்கு இடமளிக்கும் வகையில் கிடைமட்டமாக சிறிய அளவுடையதாக மாறியுள்ளதால், டேஷ்போர்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. கேபினிலும் அதைச் சுற்றிலும் அதிக ஒலி-தடுப்புப் பொருட்களைப் பயன்படுத்தியதன் மூலம் எஸ்யூவி அமைதியான பயணத்தை வழங்கும் என்பதை ஜீப் உறுதி செய்துள்ளது.

ஏழு USB டைப்-A மற்றும் டைப்-C சார்ஜிங் போர்ட்டுகள் (இரண்டு டைப்-C கள் முன்புறம்), கேபினில் மல்டிபிள் 12V சாக்கெட்டுகள் மற்றும் 115V ஏசி பவர் சாக்கெட் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் ரேங்க்லர் நடைமுறையில் கூடுதலான மதிப்பெண்களைப் பெறுவதை ஜீப் உறுதி செய்துள்ளது. சில வீட்டு மின்னணு சாதனங்களை இணைத்து பயன்படுத்தவும் இது உதவிகரமாக உள்ளது.

மேலும் படிக்கஜீப், BS6 2 ஆம் நிலை புதுப்பிக்கப்பட்ட கார்கள் மற்றும் உரிமையாளர்களுக்கான புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது

விருப்பமான அம்ச மேம்படுத்தல்கள்

2024 Jeep Wrangler touchscreen

எவ்வாறாயினும், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளேயுடன் ஸ்டெல்லாண்டிஸின் சமீபத்திய யூகனெக்ட் 5 இயங்குதளத்தில் இயங்கும் துல்லியமான 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் (இதுவரையிலான பெயர்ப்பலகைக்கு மிகப் பெரியது) மிகவும் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல் ஆகும். இது கூடுதலான கனெக்டட் கார் அம்சங்களான, ஐந்து பயனர் புரோஃபைல்கள் மற்றும் ஒரு வேலட் மோட், வாய்ஸ் ரெககனைசேஷன் மற்றும் அலெக்சா "ஹோம்-டு-கார்" இணைப்பு ஆகியவற்றைப் பெறுகிறது.

அமெரிக்காவில் சாகசங்களை விரும்புவோருக்கு, ஜீப் இன்ஃபோடெயின்மென்ட் யூனிட்டில் "டிரெயில்ஸ் ஆஃப்ரோட்" மென்பொருளைச் சேர்த்துள்ளது, இதில் உள்ள 3,000 மேல் உள்ள தடங்களை அணுகுவதற்கு சந்தா மூலமாக அப்கிரேட் செய்து கொள்ளலாம். இது நாடு முழுவதும் உள்ள ஜீப்பின் "62 பேட்ஜ் ஆஃப் ஹானர்" பாதைகள் உட்பட பல பிரபலமான ஆஃப்-ரோடு பாதைகளைக் காட்டுகிறது.

2024 Jeep Wrangler powered front seat

ஜீப் தோற்றத்தில் பொலிவு கூட்டப்பட்ட ரேங்லருக்கு 12- வே பவர்-அட்ஜஸ்டபிள் மற்றும் ஹீட்டட் முன் இருக்கைகள், ஹீட்டட் ஸ்டீயரிங் வீல், முன்புற கேமரா மற்றும் ஒன்பது-ஸ்பீக்கர் ஆல்பைன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றை வழங்கியுள்ளது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது பக்கவாட்டு மற்றும் கர்டெயின் ஏர்பேக்குகள், பிளைண்ட்-ஸ்பாட் கண்காணிப்பு, பின்புற கிராஸ்-ட்ராஃபிக் வார்னிங், ஃபார்வர்டு கொலிஷன் சிஸ்டம் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உள்ளிட்ட 85+ அம்சங்களைப் பெறுகிறது.

ஆஃப்-ரோடு மற்றும் பவர்டிரெய்ன் விவரங்கள்

2024 Jeep Wrangler
2024 Jeep Wrangler Rubicon

ஜீப், 2024 ரேங்க்லர்-க்கு புதுப்பிக்கப்பட்ட முன்புற மற்றும் பின்புற ஆக்ஸில்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கிராவ்ல் விகிதத்தை வழங்கியுள்ளது. ஆஃப்-ரோடர் சிறந்த அணுகுமுறைக்காக, பிரேக்ஓவர் மற்றும் டிபார்ச்சர் கோணங்கள் மற்றும் திருத்தப்பட்ட கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் மேம்படுத்தப்பட்ட நீர்-வழியும் திறன் ஆகியவற்றைப் பெறுகிறது.

2024 Jeep Wrangler Rubicon

மின்மயமாக்கப்பட்ட 4xe பதிப்பு உட்பட பல பவர்டிரெய்ன்களில் -ஃபேஸ்லிப்டட் ரேங்லர் 270PS, 2-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (எட்டு-வேக AT உடன்) மற்றும் 285PS, 3.6-லிட்டர் V6 பெட்ரோல் யூனிட் இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் () ஆகியவற்றைப் பெறுகிறது. (ஆறு-வேக MT அல்லது எட்டு-வேக AT உடன் இணைக்கப்பட்டுள்ளது).

மேலும் படிக்கஇந்த ஆண்டு இதுவரை வெளியிடப்பட்ட அனைத்து கார்களைப் பற்றி பார்க்கலாம்

எதிர்பார்க்கப்படும் அறிமுகம் மற்றும் விலை

2024 Jeep Wrangler rear

65 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் ஜீப் 2024 -ல் இந்தியாவிற்கு ஃபேஸ்லிப்டட்  ரேங்லரைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கிறோம். லேண்ட் ரோவர் டிஃபென்டருக்கு மாற்றாக இது இருக்கும். நமக்கு இப்போது கிடைக்கும் தற்போதைய ரேங்க்லர், உள்ளூரில் அசெம்பிள் செய்யப்பட்டதாகும்.

மேலும் படிக்கவும்: ஜீப் ராங்லர் ஆட்டோமெட்டிக்

was this article helpful ?

Write your Comment on Jeep வாங்குலர்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்Estimated
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்Estimated
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ட�ாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்Estimated
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்Estimated
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience