இந்தியாவில் கால்பதிக்கும் டெஸ்லா: நேரடியாக டீலர்ஷிப்களை தொடங்க திட்டமிடுகிறதா ?
இந்திய சந்தைக்கான வேலை வாய்ப்பு பட்டியலை டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக டெஸ்லா நிறுவனம் முழுவதுமாக டீலர்ஷிப்களை நிர்வகிக்கும் என தெரிய வருகிறது.
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லாவின் இந்திய என்ட்ரி இப்போது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. இப்போது டெஸ்லா நிறுவனம் இந்திய சந்தைக்கான வேலை வாய்ப்பு விவரங்களை அதிகாரப்பூர்வமாக பட்டியலிட்டுள்ளது. இது முழுமையாக நிறுவனத்தால் 3S (விற்பனை, சேவை மற்றும் உதிரிபாகங்கள்) நிர்வகிக்கப்படும் டீலர்ஷிப் போன்றது. இது இந்தியாவில் கார் டீலர்ஷிப்கள் வழக்கமாக செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட டீலர் அமைப்புடன் ஒப்பிடும் போது சற்று வித்தியாசமானது.
டெஸ்லா நிறுவனம் மும்பையில் ஒரு டீலர்ஷிப்பை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது போலத் தெரிகிறது. டெஸ்லா -வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஏற்கனவே பெங்களூரில் செயல்பட்டு வருகிறது. மேலும் 2023 ஆகஸ்ட்டில் புனேவில் ஒரு அலுவலக இடத்தை குத்தகைக்கு டெஸ்லா எடுத்தது. இப்போது டீலர்ஷிப் எப்போது திறக்கப்படும் என்பதையும் எந்த மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதையும் டெஸ்லா அறிவிக்க வேண்டியுள்ளது மட்டுமே இன்னும் மிச்சம் உள்ளது. டெஸ்லா உலகளவில் - மாடல் 3, மாடல் Y, மாடல் S, மாடல் X மற்றும் சைபர்ட்ரக் என 5 மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
டெஸ்லாவின் இந்திய அறிமுகம் நீண்ட கால எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட இந்திய அரசுடன் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக தாமதமாகி வந்தது. இந்நிலையில் சில நாள்களுக்கு முன்னர் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது எலோன் மஸ்க் உடன் கலந்துரையாடினார்.
இந்தியாவில் டெஸ்லா ஆரம்பத்தில் தங்கள் வாகனங்களை முழு இறக்குமதியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் புதிய கார்களுக்கு எப்படி வரவேற்பு கொடுக்கிறார்கள் என்பதை சோதனை செய்ய டெஸ்லா இந்த முறையை பின்பற்ற முடிவு செய்திருக்கலாம். உண்மையில், டெஸ்லா இதற்கு வரிச் சலுகைகளை கோரியது. இறுதியாக இந்திய அரசாங்கம் வலுவான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் அதற்கு ஒப்புதல் அளித்தது. இதில் $500 மில்லியன் (சுமார் 4347 கோடி ரூபாய்) முதலீட்டு உறுதிப்பாடு மற்றும் மூன்று ஆண்டுகளுக்குள் ஒரு உற்பத்தி ஆலையை அமைக்க ஒரு நிபந்தனை ஆகியவை அடங்கும்.
மேலும் படிக்க: இந்தியா முழுவதும் 14 பிரீமியம் 'MG செலக்ட்' டீலர்ஷிப்களை MG துவங்கவுள்ளது
இப்போது டெஸ்லாவின் சமீபத்திய நடவடிக்கைகள் அனைத்தும் கார் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக களமிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பது போல் தெரிகிறது. கூடிய விரைவில் சந்தையில் நுழைவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டெஸ்லாவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.