எதிர்காலத்தில் டாடா ஜிக்காவில் AMT வசதி பொருத்தப்படும்
published on டிசம்பர் 08, 2015 05:49 pm by nabeel
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
கடந்த சில காலமாக, வாகன சந்தையில் இழந்துவிட்ட தனது இடத்தை கைப்பற்ற டாடா மோட்டார்ஸ் முயற்சிகள் பல செய்தாலும், வெற்றி பெறுவதற்குத் தேவையான மனஉறுதி இல்லை என்றே சொல்லவேண்டும். ஏனெனில், ஜெஸ்ட் மற்றும் போல்ட் போன்ற கார்கள் தரமான வகையில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும், இந்திய வாடிக்கையாளர்களை கவர தவறிவிட்டன என்பதே உண்மை. ஆதலால் மீண்டும் புது ரத்தம் பாய்ச்ச, அனைத்து வசதிகளும் கொண்ட ஜிக்கா என்ற புதிய மாடலை டாடா நிறுவனம் வெளியிடவுள்ளது. டாடா, இந்த பிரிவில் மீண்டெழுந்து மறுமலர்ச்சி அடைய, புத்தம் புதிய வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஜிக்கா மாடலே முழு பொறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா நிறுவனம் தனது ஜிக்கா காரில் ஏற்கனவே உள்ள ஏராளமான சிறப்பம்சங்களுடன், கூடுதல் சிறப்புகளை சேர்க்கும் வகையில் புதிய AMT வசதி விரைவிலேயே இணைக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் இதழில் வந்த அறிக்கையின் படி, டாடா மோட்டார் நிறுவனத்தின் ப்ரோக்ராம் ப்ளானிங் அண்ட் மானேஜ்மென்ட் (பயணிகள் வாகனங்கள்) பிரிவின் சீனியர் வைஸ் பிரெஸிடெண்டான திரு. கிரிஷ் வாக் அவர்கள், “தற்போது விற்பனையில் சூடு பறக்கும் GenX Nano மாடலில், பாதிக்கும் மேற்பட்ட விற்பனை எண்ணிக்கையை தருவது AMT பொருத்தப்பட்ட வேரியண்ட்களாகும். எனவே, ஜிக்கா மாடல் அறிமுகமான பின், சந்தையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் போதோ அல்லது, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகும் போதோ, அதிநவீன AMT வசதி ஜிக்காவில் பொருத்தப்படும்,” என்று அதிகாரபூர்வமாக தெரிவித்தார்.
டாடா நிறுவனத்தின் கனெக்ட்நெக்ஸ்ட் வரிசையில் உள்ளது போல Harman கொண்டு சக்தியூட்டப்பட்ட புதிய பொழுதுபோக்கு சாதனத்துடன் ஜிக்கா கார் சந்தைக்கு வருகிறது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். இந்த புதிய பொழுதுபோக்கு சாதனத்துடன் ப்ளூ டூத், UCB மற்றும் இந்த பிரிவில் முதல் முறையாக எட்டு ஸ்பீக்கர்கள் (4 ஸ்பீக்கர்ஸ் மற்றும் 4 ட்வீட்டர்ஸ்) கொண்ட Aux-in கனெக்டிவிட்டி ஆகிய சிறப்பு வசதிகள் இணைந்துள்ளன. மேலும், புதிய இரண்டு பயன்பாடுகளும் (ஆப்) வாடிக்கையாளர்களுக்காக சேர்க்கப்பட்டுள்ளன. அவை, நேவிகேஷன் ஆப் மற்றும் இடையூறுகள் இன்றி இசையை அனுபவிக்க ஜுக்-கார் ஆப் ஆகியனவாகும். டாடாவின் ரெவோட்ரோன் மற்றும் ரெவோடோர்க் வகைகளை சார்ந்த 3 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின் கொண்டு டாடா ஜிக்கா சக்தியூட்டப்பட்டுள்ளது. ஜிக்காவின் பெட்ரோல் வகையில் 85PS @ 6000rpm மற்றும் 114Nm @ 3500rpm என்ற அளவில் சக்தியை உற்பத்தி செய்யவல்ல 1.2 லிட்டர் ரெவோட்ரோன், 3-சிலிண்டர் 4 வால்வ் MPFi பொருத்தப்பட்டுள்ளது. ஜிக்காவின் டீசல் வகையில் 70PS சக்தி @ 4000rpm மற்றும் 140 Nm டார்க் @1800-3000rpm என்ற அளவில் உற்பத்தி செய்யவல்ல 1.05 லிட்டர் ரெவோடோர்க், 3-சிலிண்டர் CRAIL இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
டாடா ஜிக்காவின் ஃபர்ஸ்ட் ட்ரைவ் வீடியோவை கண்டுகளியுங்கள்:
மேலும் வாசிக்க
- அதிக சக்திவாய்ந்த டாடா சஃபாரி ஸ்டார்ம், ரூ.13.52 லட்சத்தில் அறிமுகம்
- புதிய டாடா ஸீகா காரை குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை