ஜனவரி 20 -ஆம் தேதி டாடா ஜிக்கா அறிமுகம்

published on ஜனவரி 06, 2016 02:36 pm by konark

  • 11 Views
  • ஒரு கருத்தை எழுதுக

83 bhp சக்தி மற்றும் 114 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 69 bhp சக்தி மற்றும் 140 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் இஞ்ஜின் ஆகிய இரண்டு புதிய இஞ்ஜின்கள், ஹாட்ச்பேக் பிரிவில் வரும் புதிய ஜிக்காவில் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு வகை இஞ்ஜின்களுமே 3 சிலிண்டர் வகையாக உள்ளன. மேலும், இவை 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டு வருகின்றன. 

‘இது டாடாவின் தயாரிப்பா?' என்று வியப்பு ஏற்படுத்தும் விதத்தில், ஜிக்காவின் உட்புற அலங்காரங்கள் ஆடம்பரமாக உள்ளன. கேபின் உள்ளே உள்ள டேஷ் போர்டில் இடம் பெற்றிருக்கும் அனைத்தும் தரமாகவும், சாஃப்ட்-டச் மெட்டீரியல்களாகவும் உள்ளன. ஜிக்காவின் உயர்தர வேரியண்ட்டில், முன்புறத்தில் 2 காற்றுப்பைகள், ABS வசதி, அலாய் சக்கரங்கள் மற்றும் உலகின் முன்னணி நிறுவனமான ஹர்மான் வடிவமைத்திருக்கும் சவுண்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு, அதனுடன் ப்ளூ-டூத், USB மற்றும் Aux-in போன்ற வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. 

டாடா ஜிக்காவின் அளவுகள்

  • நீலம் - 3746 மிமீ; அகலம் - 1647 மிமீ; உயரம் - 1535 மிமீ
  • சக்கர அகலம் (வீல் பேஸ்) - 2400 மிமீ
  • கேர்ப் எடை - பெட்ரோல் - 1012 கிலோ; டீசல் - 1080 கிலோ
  • கிரவுண்ட் க்ளியரன்ஸ் - 170 மிமீ
  • எரிபொருள் டேங்க் கொள்ளளவு - 35 லிட்டர் (பெட்ரோல், டீசல் இரண்டும்)
  • டயர் அளவு - 175/65 க்ராஸ் செக்சன் R14
  • பூட் ஸ்பேஸ் - 240 லிட்டர்கள்
  • கேபின் ஸ்டோரேஜில் 22 விதமான ஸ்பேஸ்கள்

நவீன மல்டி-ட்ரைவ் மோடுகள், இதன் பிரிவிலேயே முதல் முதலாக ஜிக்காவில் இணைக்கப்பட்டு வருகிறது. சிட்டி மற்றும் எக்கோ என்ற இரண்டு விதமான மோடுகளை உபயோகித்து ஜிக்காவை ஓட்ட முடியும். மேலும், இந்த நவீன மல்டி-ட்ரைவ் மோடுகள், ஜிக்காவின் பெட்ரோல் மற்றும் டீசல் என்ற இரண்டு வகைகளிலும் பொருத்தப்பட்டுள்ளது என்பது சிறப்பு செய்தி ஆகும். இவை மட்டுமல்லாது, ஜிக்காவில் சிறந்த நேவிகேஷன் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இது, இந்த காரின் இன்ஃபோடைன்மெண்ட் டிஸ்ப்ளே யூனிட்டுடன் இணைக்கப்பட்டுள்ளதால், நேவிகேஷன் அமைப்பில் வரும் வழியை உங்களால் எளிதாக பின்பற்ற முடியும். அதிநவீன அமைப்புகளைக் கொண்ட ஜிக்காவில், Juke கார் ஆப் பொருத்தப்பட்டுள்ளதால், உங்களின் மொபைல் ஃபோனில் உள்ள பெர்சனல் ஹாட்ஸ்பாட் மூலம், விர்சுவல் நெட்வொர்க் உருவாக்கி, நீங்கள் விரும்பும் இசையை/பாடலை இதன் ஸ்பீக்கர்கள் மற்றும் ட்வீட்டர்களுடன் இணைக்க முடியும். இது, நீங்கள் பயணக்களைப்பு தெரியாமல் பயணம் செய்ய உதவுகிறது. 

ஜிக்கா எப்படி போட்டியாளர்களுடன் மோதப் போகிறது?

கடந்த மாதம் கோவாவில், ஜிக்காவை ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு நமக்குக் கிடைத்தது. டாடா ஜிக்காவின் ஃபர்ஸ்ட் ட்ரைவ் பற்றிய நிபுணர்களின் விமர்சனத்தைப் பாருங்கள். 

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience