டாடா ஜிக்காவின் புகைப்படங்கள் – அறிமுகத்திற்கு முன்பே வெளியிடப்பட்டது

published on நவ 30, 2015 04:57 pm by arun

அனைவரின் மனதிலும் எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்துக் கொண்டிருக்கும் டாடா நிறுவனத்தின் புதிய ஹாட்ச் பேக் காரின், மனதைக் கொள்ளை கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. புதிய கார் எவ்வாறு தோற்றமளிக்கும் என்று வியந்து கொண்டிருந்த நமக்கு, இந்த புகைப்படங்கள் காரின் முழு வடிவை நம் கண்முன்னே நிறுத்துகின்றன. பத்து வருட பழமை வாய்ந்த இண்டிகா காரை ஒப்பிடும் போது, ஜிக்கா மாடலின் தோற்றம் மிகவும் நவீனமாகவும் ஸ்டைலாகவும் உள்ளது.

நீண்ட மூக்கைப் போல தோற்றமளிக்கும் இதன் முன்புறத்தில், மிகப் பெரிய கிரில் பொருத்தப்பட்டுள்ளது. கிரில்லின் இரண்டு ஓரங்களிலும் ஒயிலாக ஹெட் லாம்ப்கள் பொருத்தப்பட்டுள்ளன. டாடா ஜிக்காவின் முன்புறத்தில், க்ரோமிய வேலைப்பாடுகள் மிகுந்து காணப்படுவதால், இதன் கிரில் வெளிப்படையாகவும் பளீரென்றும் தெரிகிறது. அது மட்டுமல்ல, ஹெட் லாம்ப்கள் மற்றும் பனி லாம்ப்களின் ஓரத்திலும் க்ரோமியம் இடம்பெற்றிருப்பதால், இந்த கார் பொலிவுடன் தோற்றமளிக்கிறது. முன்புற பம்பர் மற்றும் பானெட் ஆகியவை சற்றே புடைப்புடன் காணப்படுவதால், ஜிக்காவின் தோற்றமும் நளினமாக இல்லாமல் சற்றே கம்பீரமாக இருக்கிறது.

ஜிக்கா மாடலின் பக்கவாட்டுத் தோற்றத்தைப் பார்க்கும் போது, இதன் B பில்லரில் ஆரம்பிக்கும் ஒரு ஷோல்டர் லைன் வெகுவாக நீண்டு, டெய்ல் லாம்ப் வரை சென்று முடிவது பளிச்சென்று தெரிகிறது. சட்டென்று பார்த்தால், இந்த அமைப்பு நமக்கு ப்ரியோ மாடலை நினைவு படுத்துகிறது. இது உண்மையா அல்லது மாயையா என்பதை உறுதிபடுத்த நாம் மீண்டும் அதன் தோற்றத்தை உற்று நோக்க வேண்டி இருக்கிறது. பக்கவாட்டுத் தோற்றத்தின் முக்கால்வாசி இடத்தை, இதன் கதவுகளும், பெரிய ஜன்னல்களும் பிடித்துக் கொள்கின்றன. இவை தவிர, நாம் குறித்துக் கொள்ள மேலும் சில அம்சங்கள் உள்ளன. அவை யாதெனில், இதன் C பில்லர் பகுதி மெலிதாக உள்ளது; B பில்லர் பகுதியோ முழுவதுமாக கதவுகளில் சூழப்பட்டுள்ளது. மற்றும் இதன் விங் மிர்ரர்களில் பொருத்தப்பட்டுள்ள இன்டிகேட்டர் லைட்கள் ஜெஸ்ட் மற்றும் போல்ட் மாடல்களில் உள்ளது போலவே இருக்கின்றன.

தற்போது, வெளியாகி உள்ள புகைப்படங்களில் உள்ள ஜிக்காவின் மாடல், உயர்தர வேரியண்ட்டாக இருக்கவேண்டும் என்று நாம் யூகிக்கிறோம். ஏனெனில், அலாய் சக்கரங்கள், பின்புறத்தில் டி-ஃபாகர் மற்றும் பார்க் செய்வதற்கு வசதியாக பார்க்கிங் சென்சார்கள் போன்ற சிறப்பம்ஸங்கள், உயர்தர மாடல்களிலேயே வருகின்றன. மேலும், பின்புறத்தில் உள்ள தட்டையான டெய்ல் லாம்ப்கள் ஃபோர்ட் பிகோவை ஞாபகப்படுத்தும் வகையில் உள்ளன. பின்புறத்தை சற்றே கவர்ச்சியூட்ட, இதன் பூட் நீளத்தில் இரண்டு கேரக்டர் லைன்கள் உள்ளன. பம்பரில் இடம் பெற்றுள்ள இதன் நம்பர் ப்ளேட் வெள்ளையாக இருப்பதால் கருப்பு வண்ணத்தில் எண்களை எழுத வேண்டும். ஜிக்காவின் பின்புறத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஸ்பாய்லரின் மேலே, சற்றே உயரத்தில் ஸ்டாப் லாம்ப் பொருத்தப்பட்டுள்ளது.

ஜிக்காவின் கேபின் முழுவதும் கருப்பு மற்றும் பீஜ் வண்ணத்தில் உள்ளது. எனினும், இதன் தோற்றத்தை மேலும் ஆடம்பரமாக்க ஆங்காங்கே க்ரோமிய வேலைப்பாடுகளையும் காண முடிகிறது, முக்கியமாக, கதவு கைப்பிடிகளில் இந்த வேலைப்பாடு பளிச்சென்று உள்ளது. ஜிக்காவின் உயர்தர வேரியண்ட்டில், நாம் 4 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹார்மேன் கார்டன் ஆடியோ சிஸ்டத்தை எதிர்பார்க்கலாம்.

ஜிக்காவில் பெட்ரோல் மற்றும் டீசல் இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டு, இரண்டு வகைகளில் வரும். இதன் பெட்ரோல் வகையில் புதிய 1.2 லிட்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டு, 84 bhp என்ற அளவில் சக்தி மற்றும் 110 Nm என்ற அளவில் டார்க்கையும் உற்பத்தி செய்யும். டீசல் வகையில் 1.0 லிட்டர் இஞ்ஜின் (தற்போது இண்டிகாவிற்கு சக்தியூட்டிக் கொண்டிருக்கும் பழைய 1.4 மோட்டாரில் இருந்து பெறப்பட்டது) பொருத்தப்பட்டு, 67 bhp என்ற அளவில் சக்தி மற்றும் 140 Nm என்ற அளவில் டார்க்கும் உற்பத்தி செய்யப்படுகிறது.

அறிமுகமான அடுத்த நொடியே, ஜிக்கா கடினமான போட்டியைச் சந்திக்கும் சூழ்நிலை உள்ளது. ஏனெனில், தற்போது சந்தையில் முதலிடத்தை ஸ்திரமாகப் பிடித்துள்ள மாருதியின் வகோன்R மற்றும் ஹுண்டாயின் கிராண்ட் i10 ஆகிய கார்களுடன் சரிக்கு சரியாக களத்தில் நின்று போட்டியிட வேண்டும். டாடாவின் ஹாட்ச் பேக் கார்களின் பிரிவிலேயே மிகச் சிறந்த தோற்றத்தைக் கொண்ட புதிய ஜிக்கா, நம்பிக்கை நட்சத்திரமாய் ஜொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். இதனை அறிய பல நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை, ஏனெனில், அடுத்த வாரத்திற்குள் இந்த கார் வெளியிடப்பட்டு விடும். அதன் பின், அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களின் வீடு தேடி வந்து விடும்.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingகார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience