• English
  • Login / Register

டாடா ஸீகா: பிரிவின் சிறந்த விற்பனை தயாரிப்பாக மாற வாய்ப்பு!

published on டிசம்பர் 07, 2015 01:55 pm by raunak

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஒரு ஏற்புடைய டிசைன் + விளிம்பு வரை நிரம்பிய அம்சங்கள் + ஒரு அலங்காரமான டிசைன் + அம்சங்களால் நிரப்பியது = ராக்கெட் துவக்கம்!

ஜெய்ப்பூர்: தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் விற்பனைக்கான நிலவரம் இது தான் என்று கூறுவதற்கு ஏற்ற எடுத்துக்காட்டுகள்: ஹூண்டாய் எலைட் i20, க்ரேடா, ஃபோர்டு ஃபிகோ / ஆஸ்பியர், மாருதி சுசுகி பெலினோ. மேலும் இதையெல்லாம் விட, டாடா ஸீகாவின் டிசைன் மற்றும் அம்சங்கள் குறித்து நாம் பார்க்கும் போது, டாடா நிறுவனத்தின் சிறப்பான உழைப்பை கண்டு நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். செவ்ரோலேட் பீட் மற்றும் ஹூண்டாய் i10 போன்ற மந்தமான விற்பனை தயாரிப்புகளுடன், டாடா ஸீகா போட்டியிட்டு வரும் நிலையில், இதனுடன் மாதந்தோறும் ஏறக்குறைய 6 முதல் 7 ஆயிரம் வரையிலான விற்பனையை கொண்ட மாருதி சுசுகி செலரியோ மட்டுமே போட்டியிட்டு வருகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த பேக்கேஜ்களை வைத்து பார்க்கும் போது, இப்பிரிவின் சிறந்த விற்பனை தயாரிப்பாக மாற ஸீகாவிற்கு ஒரு வாய்ப்புள்ளது.

டிசைனில் இருந்து துவங்குவோம். இப்பிரிவில் உள்ள கார்களில் பீட்டை தவிர, புதிய ஸீகாவை போன்ற அலங்காரமான தோற்றத்தை எதுவும் கொண்டிருக்கவில்லை. அதிலும் பீட், பயன்பாட்டில் பழைய வாகனமாக தெரிவதால், அதன் விற்பனை குறைந்து, மேம்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மற்றொருபுறம் இப்பிரிவிலேயே பழைய காராக ஹூண்டாய் i10 மாறியுள்ளதால், மாதந்தோறும் 2 ஆயிரம் கார்களுக்கும் குறைவான எண்ணிக்கையில் தான் ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட செலரியோ, இப்பிரிவில் AMT (ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன்) கொண்டிருந்தாலும், அது ஒரு சாதாரண தயாரிப்பின் டிசைனாக தோற்றமளிக்கிறது. மேலும் இந்த பிரிவின் சிறந்த கேபின்களை ஸீகா கொண்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மற்றொரு முக்கியமான காரியம் என்னவென்றால், இந்த காலத்தில் காரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து மக்களால் அதிகம் கவனிக்கப்படும் நிலையில், ஸீகாவை சிறப்பம்சங்களால் டாடா நிறுவனம் நிரப்பியுள்ளது. இப்பிரிவில் செலரியோவை தவிர, மற்ற எந்த வாகனத்திலும் ப்ளூடூத் இணைப்பு வசதி கிடையாது. ஸீகாவில் ஹார்மேன் மூலம் இயக்கப்படும் கனெக்ட்நெக்ஸ்ட் யூனிட், இப்பிரிவிலேயே முதல் முறையாக 8 ஸ்பீக்கர்களை கொண்ட அமைப்பு (4 ஸ்பீக்கர் + 4 டிவிட்டர்கள்) மற்றும் வாய்ஸ் கமெண்ட்களை எடுத்துக் கொள்கிறது. இணைப்பு வசதிகளை பொறுத்த வரை, ப்ளூடூத் போன் இன்டிக்ரேஷன், AUX-இன் மற்றும் USB ஆகியவை காணப்படுகிறது. மேலும் இந்த யூனிட் உடன் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை இணைக்க முடிவதோடு, டேன்-பை-டேன் நேவிகேஷனையும் காட்டுகிறது. இதோடு வசதிகள் முடியவில்லை, மொபைல் ஹாட்ஸ்பாட் / ஒரு மெய்நிகர் நெட்வேர்க் மூலம் காரில் உள்ள மற்ற பயணிகளின் மொபைல்போன்களை இணைத்து, ப்ளூடூத் ஆடியோ மூலம் பாடல்களை வரிசைப்படுத்தவும், மாற்றவும், டாடாவின் புதிய ஜூக் ஆப் பயன்படுகிறது.

பாதுகாப்பை பொறுத்த வரை, ஹூண்டாய் i10-யில் எந்த பாதுகாப்பு அம்சங்களையும் காண முடிவதில்லை. ஆனால் மற்ற இரு கார்களான பீட் மற்றும் செலரியோ ஆகியவற்றில், இரட்டை முன்பக்க ஏர்பேக்குகள் உடன் ABS+EBD போன்றவை காணப்படுகின்றன. இதை தவிர, ஸீகாவில் CSC – கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் வசதியை கொண்டுள்ளது.

மேலும் வாசிக்க

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your கருத்தை

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience