• English
  • Login / Register

நெக்ஸான் EV மேக்ஸை அதன் "டார்க்" ரேஞ்ச் -சில்டாடா விரைவில் சேர்க்கவுள்ளது, முதல் டீசர் வெளியிடப்பட்டுள்ளது

published on ஏப்ரல் 14, 2023 05:55 pm by rohit for டாடா நிக்சன் ev max 2022-2023

  • 29 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நெக்ஸான் EV மேக்ஸ் டார்க்கின் முக்கிய சிறப்பம்சம், புதுப்பிக்கப்பட்ட ஹாரியர்-சஃபாரி டூயோ-விலிருந்து பெறப்பட்ட  புதிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் ஆகும்.

Tata Nexon EV Max

  • நெக்ஸான் EV மேக்ஸ் ஆனது மின்சார சப்-4m எஸ்யூவி க்கான டார்க் கார் ரேஞ்சை நிறைவு செய்யும்.

  • இதன் டீசர், டாஷ்போர்டில் இருக்கும் டீல் ப்ளூ ஆக்ஸன்டின் பார்வையை அளிக்கிறது.

  • நெக்ஸான் EV ப்ரைம் டார்க்கைப் போலவே பிளாக்டு-அவுட் மற்றும் EV க்கான குறிப்பிட்ட பாகங்களை உள்ளேயும் வெளியேயும் பெற முயற்சிக்கிறது.

  • வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் மற்றும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரை உள்ளடக்கிய நிலையான நெக்ஸான் EV மேக்ஸ் இன் அம்சங்களின் பட்டியலை  கொண்டு செல்ல வாய்ப்புள்ளது.

  • இது 40.5kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது, நெக்ஸான்  EV மேக்ஸ் 453km ரேஞ்சைக் கொண்டுள்ளது.

  • பிரீமியத்தைப் பொருத்தவரை ஹையர் டிரிம்களில் மட்டுமே வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸானின் டார்க் எடிஷனை நீங்கள் தேர்வு செய்ய விரும்பினால், ஸ்டான்டர்டு கம்பசஷன் என்ஜின் (ICE) வகைகள் அல்லது நெக்ஸான்  EV பிரைம் ஆகியவை மட்டுமே உங்களின் ஆப்ஷனாக இருக்கிறது. நெக்ஸான் EV மேக்ஸ், தனது முதன்மையான EV விரைவில் அதன் டார்க் ரேஞ்ச் -ல் சேர்க்கப்படும் என்று பரிந்துரைக்கும் புதிய டீசரை கார் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்

மிகப்பெரிய அறிமுகம்

          View this post on Instagram                      

A post shared by TataPassengerElectricMobility (@tatamotorsevolvetoelectric)


டீசர் வீடியோவில் உள்ள மிக முக்கியமான அறிமுகம் , புதுப்பிக்கப்பட்ட ஹாரியர் மற்றும் சஃபாரியில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 10.25-இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் ஆகும். இன்ஃபோடெயின்மென்ட், எஸ்யூவி டுயோவில் காணப்படுவது போல், மிகவும் ஸ்மூத்தான யூஸர் இடைமுகம் (UI) மற்றும் சிறந்த கிராபிக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. புதிய டிஸ்ப்ளே யூனிட்டிற்கான ஏற்பாடுகளை செய்ய டாடா, நெக்ஸானின் டாஷ்போர்டின் மேல் பகுதியை மாற்றியமைத்திருக்கலாம். ஏற்கனவே உள்ள மாடலைப் போல தற்போதுள்ள மாடலின் டேஷ்போர்டில் அதே டீல் ப்ளூ ஆக்ஸன்டை பார்க்கிறோம்.

மேலும் படிக்கஇந்தியாவைப் பொருத்தவரை லித்தியம் இருப்பு என்றால் என்ன?

நெக்ஸான் EVபிரைம் டார்க் உடன் பொதுவான அம்சங்கள்

Tata Nexon EV Prime Dark edition

நெக்ஸான்  EV பிரைம் போலவே, நெக்ஸான்  EV மேக்ஸ் இன் பிளாக்டு-அவுட் பதிப்பும் "மிட்நைட் பிளாக்" வெளிப்புற ஷேடில் வரும். இது அதே சார்கோல் பிளாக் அலாய் வீல்கள், பம்பரைச் சுற்றி அடர் கறுப்பு குரோம் பட்டைகள், முன்புற ஃபெண்டர்களில் "டார்க்" மோனிகர்கள் மற்றும் கறுப்பு நிறத்தில் ஜொலிக்கும் "நெக்ஸான்" பேட்ஜ் ஆகியவை கொண்டதாக இருக்கும். ஆம், நிச்சயமாக, இது மின்சாரத் கார் என்பதைக் குறிக்க நீல நிற ஆக்ஸன்டைக் கொண்டிருக்கும்.

டீசர் மூலம் தெரியவரும் கேபினுக்குள் நீல நிற சிறப்பம்சங்கள் தவிர, மற்ற ஒற்றுமைகளில் டாஷ்போர்டுக்கான கறுப்பு பூச்சு, தோலினால் ஆன இருக்கைகள் மற்றும் தோல்-சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல்  ஆகியவை அடங்கும்.

Tata Nexon EV Prime Dark edition's cabin

நெக்ஸான் EV பிரைம் டார்க்-இன் கேபின் படம் குறிப்புக்காகப் பயன்படுத்தப்பட்டது

தற்போதைய நெக்ஸான் EV மேக்ஸ் போன்ற அம்சங்களின் பட்டியலை எதிர்பார்க்கலாம், இதில் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பின்புற வென்ட்கள் கொண்ட ஆட்டோ ஏசி, வயர்லெஸ் ஃபோன் சார்ஜிங் மற்றும் வென்டிலேட்டட் முன்புற இருக்கைகள் உள்ளன. அதன் பாதுகாப்பு  மாறாமல் உள்ளது மற்றும் அனைத்து டிஸ்க் பிரேக்குகள், இரட்டை முன்புற ஏர்பேக்குகள் மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை அதில் அடங்கும்.

பேட்டரி, ரேஞ்ச் மற்றும் சார்ஜிங்

Tata Nexon EV Max charging port

டாடா 143PS மற்றும் 250Nm உற்பத்தி செய்ய ஒரு மின்சார மோட்டாருடன் இணைக்கப்பட்ட 40.5kWh பேட்டரி பேக்குடன் நெக்ஸான் EV மேக்ஸ் ஐ பொருத்தியுள்ளது. அதன் ARAI ரேஞ்ச் 453 கிமீ ஆகும். மின்சார எஸ்யூவி இரண்டு சார்ஜிங் விருப்பங்களை ஆதரிக்கிறது: 3.3kW மற்றும் 7.2kW, முறையே 15 மணிநேரம் மற்றும் ஆறு மணிநேரம் சார்ஜிங் நேரங்கள். 50kW DC விரைவு சார்ஜரைப் பயன்படுத்தி, வெறும் 56 நிமிடங்களில் பேட்டரியை 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

தொடர்புடையவைமஹிந்திரா XUV400 vs  டாடா நெக்ஸான் EV மேக்ஸ்- அசல் உலகின் கூடுதல் பயண தூரத்தை எந்த எலக்ட்ரிக் எஸ்யூவி நமக்கு வழங்கும்?

கார்களின் வகைகள், விலை மற்றும் போட்டிக்கார்கள்

Tata Nexon EV Max rear

நெக்ஸான் EV பிரைம்- இன் டார்க் கார்களின்படி, நெக்ஸான் EV மேக்ஸ் இன் டார்க் பதிப்பு ஹையர்-ஸ்பெக் டிரிம்களில் மட்டுமே வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம், அதன் தற்போதைய விலையை விட பிரீமியம் கூடுதலாக இருக்கும் . டாடா, நெக்ஸான் EV மேக்ஸ் டார்க்கை வரும் நாட்களில் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது. மஹிந்திரா XUV400 EVக்கு போட்டியாக நெக்ஸான் EV மேக்ஸ் உள்ளதுமற்றும் MG ZS EVஆகியவற்றுக்கு மாற்றான குறைந்த விலைக் காராகவும் உள்ளது.

மேலும் படிக்கவும்:  டாடா நெக்சான் EV மேக்ஸ் ஆட்டோமெட்டிக்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Tata நிக்சன் ev max 2022-2023

Read Full News

explore similar கார்கள்

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
  • ஜீப் அவென்ஞ்ஜர்
    ஜீப் அவென்ஞ்ஜர்
    Rs.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா ev5
    க்யா ev5
    Rs.55 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • வோல்க்ஸ்வேகன் id.7
    வோல்க்ஸ்வேகன் id.7
    Rs.70 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • க்யா Seltos ev
    க்யா Seltos ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
×
We need your சிட்டி to customize your experience