ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் வெளியிடப்பட்டது Tata Sierra கார்
published on ஜனவரி 17, 2025 05:01 pm by shreyash for டாடா சீர்ரா
- 27 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா சியரா அதன் ICE வெர்ஷன் ஆனது அதன் EV காருக்கு மிக நெருக்கமாக உள்ளது. இருப்பினும் இது கிரில் மற்றும் பம்பர் வடிவமைப்பில் நுட்பமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
சியரா ICE -வின் வடிவமைப்பு முற்றிலும் புதிதாக உள்ளது. ஆனால் பழைய சியராவின் அசல் தோற்றத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளது.
-
முக்கிய வெளிப்புற சிறப்பம்சங்கள் கனெக்டட் LED DRL -கள், ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் மற்றும் கனெக்டட் LED டெயில் லைட்ஸ் ஆகியவை அடங்கும்.
-
டேஷ்போர்டில் 3 ஸ்கிரீன்களுடன் ஹாரியர் மற்றும் சஃபாரியை விட மேம்பட்ட உட்புறத்தை கொண்டுள்ளது.
-
மூன்று 12.3 இன்ச் ஸ்கிரீன்கள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் போன்ற வசதிகளுடன் இது வரலாம்.
-
பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாகயாக), 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2-லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பயன்படுத்தலாம்.
-
விலை ரூ.10.50 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரலாற்றில் மிகவும் பிரபலமான பெயர்களில் ஒன்றான டாடா சியரா இப்போது மீண்டும் வந்துள்ளது. பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் ICE வெர்ஷனில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய சியரா ICE ஆனது சியரா எஸ்யூவி -யில் இருந்து சில விஷயங்களையும் பெற்றுள்ளது. 1990 களில் டாடா அதன் புதிய வடிவமைப்பு தத்துவத்தை மற்ற எஸ்யூவி -களுக்கு இணையாகக் கொண்டு வந்தது. இந்த புதிய அவதாரத்தில் சியரா எப்படி இருக்கிறது மற்றும் அதிலுள்ள விஷயங்களை இங்கே பார்ப்போம்.
புதிய வடிவமைப்பு
டாடா சியாரா ICE காரில் புதிய டாடா கார்களான டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரி போன்றவற்றில் காணப்பட்ட அனைத்து புதிய வடிவமைப்பு தத்துவங்களையும் ஒருங்கிணைத்துள்ளது. இருப்பினும் பழைய சியராவுடன் வழங்கப்பட்ட அதே தோற்றமுடைய வெளிப்புற தோற்றத்துடன் அதன் பழைய அழகு இன்னும் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் ஹெட்லைட்கள் பம்பரில் கொடுக்கப்பட்டுள்ளன மேலும் கனெக்டட் LED DRL -களும் உள்ளன. பக்கவாட்டில் இருந்து பார்க்கையில் அசல் சியரா, ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்களில் காணப்படும் பெரிய ஆல்பைன் ஜன்னல்கள் தெரிகின்றன. பின்புறத்தில் கனெக்டட் எல்இடி டெயில் விளக்குகளுடன் சியரா இப்போதுள்ள டிரெண்டை பின்பற்றுகிறது.
கேபின்: வழக்கமான டாடா வடிவமைப்பு
இந்த கான்செப்ட் மாடல் டாஷ்போர்டில் டிரிபிள் ஸ்கிரீன் செட்டப் மற்றும் மையத்தில் ஒளிரும் ‘டாடா’ லோகோவுடன் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் வருகிறது. சியராவில் 4- மற்றும் 5-இருக்கை அமைப்புகளை வழங்குவதே முக்கிய வித்தியாசமாக இருக்கும்.
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
டாடா சியரா மூன்று 12.3-இன்ச் ஸ்கிரீன்கள், பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகளுடன் வழங்கப்படும் என்று கான்செப்ட் மூலம் தெரிய வருகிறது. இதன் பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் (ESC) மற்றும் மேஅட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்கள் (ADAS) ஆகியவை கொடுக்கப்படலாம்.
பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
சியரா அதன் ICE அவதாரத்தில் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் தேர்வுகள் இரண்டிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவரங்கள் பின்வருமாறு:
இன்ஜின் |
1.5-லிட்டர் 4-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் |
2 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் |
பவர் |
170 PS |
170 PS |
டார்க் |
280 Nm |
350 Nm |
டிரான்ஸ்மிஷன் |
6-ஸ்பீடு MT, 7-ஸ்பீடு DCT (எதிர்பார்க்கப்படுகிறது) |
6-ஸ்பீடு MT, 6-ஸ்பீடு AT |
DCT - டூயல் கிளட்ச் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
AT - டார்க் கன்வெர்டர் ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன்
மேலே குறிப்பிட்டுள்ள 1.5-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் டாடா ஹாரியர் மற்றும் டாடா சஃபாரிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கிடையில் டீசல் யூனிட் ஏற்கனவே இந்த எஸ்யூவிகளில் வழங்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா சியாரா ICE காரின் விலை ரூ.10.50 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.