• English
  • Login / Register

டாட்டா சபாரி ஸ்டோர்ம் மாடலின் சீரமைக்கப்பட்ட வேரிCOR 400 இஞ்ஜின் மற்றும் 6 – ஸ்பீட் MT விவரங்கள் வெளியாகி உள்ளன

published on நவ 24, 2015 11:55 am by manish for டாடா சாஃபாரி ஸ்டோர்ம்

  • 15 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மிகவும் சக்தி வாய்ந்த சபாரி ஸ்டோர்ம் என்ற SUV வகை காரை டாடா நிறுவனம் தயாரித்துக் கொண்டிருக்கிறது. 156 PS @4000rpm திறனை வழங்கும் வேரிCOR 400 என்ற சக்தி வாய்ந்த இஞ்ஜின் இந்த காரில் பொருத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்பே, இதன் தொழில்நுட்ப குறிப்புகள் பற்றிய விவரங்கள் ஆன்லைன் வழியாக நமக்கு வெளிவந்துள்ளன. இஞ்ஜின் மேம்பாடு தவிர, புதிதாக 6-ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனும் வரவிருக்கும் இந்த புதிய மாடலில் இணைக்கப்பட்டுள்ளது. இது மிக முக்கியமான மேம்பாடாகக் கருதப்படுகிறது. இத்தகைய மேம்பாடுகள் மூலம் அதிகரிக்கப்பட்டுள்ள இதன் அபரித சக்தியைக் கொண்டு, 400 Nm @ 1750 – 2500 rpm டார்க்கை உற்பத்தி செய்ய முடியும். அது மட்டுமல்லாமல், இத்தகைய கூடுதல் டார்க் சக்தியானது, இந்த SUV மாடலின் உறுமும் சத்தத்தையும் கம்பீரமாக மாற்றுகிறது என்பது கவனிக்கவேண்டிய விவரமாகும்.

புதிய சபாரி ஸ்டோர்ம் மாடலில் பொருத்தப்பட்டுள்ள வேரிCOR 400 இஞ்ஜின், 2.2 – லிட்டர் 4 சிலிண்டர் இஞ்ஜின் வகை ஆகும். இதே வகை இஞ்ஜினை, தற்போது சந்தையில் உள்ள சபாரி ஸ்டோர்ம் காரிலும்  இந்நிறுவனம் பொருத்தியுள்ளது. ஆனால், அடுத்து வெளிவரவுள்ள புதிய  மாடலின் செயல்திறன் உற்பத்தியை ஒப்பிடும் போது தற்போதுள்ள மாடலின்  சக்தி உற்பத்தி சற்று குறைவாகவே இருக்கிறது.

மறுசீரமைக்கப்பட்ட வேரிCOR 400 இஞ்ஜின், உயர்ரக ‘VX’ வேரியண்ட்டில் மட்டுமே பொருத்தப்படும் என்று தெரிகிறது. மிட் மற்றும் லோயர் ரக சபாரி ஸ்டோர்ம் மாடல்களில், தற்போது உள்ள அதே 150 PS இஞ்ஜின் மற்றும் அதே 5- ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு வரும். உயர்ரக ‘VX’ டாட்டா சபாரி ஸ்டோர்ம் மாடலில் பொருத்தப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட வேரிCOR 400 இஞ்ஜின், 0 முதல் 100 kmph என்ற அளவு வேகத்தை அடைய 12.8 வினாடிகளுக்கும் குறைவாகவே எடுத்துக்கொள்ளும். ஆனால் தற்போது உள்ள ஸ்டாண்டர்ட் வகைகளில் உள்ள வேரிCOR இஞ்ஜின், 100 kmph வேகத்தை அடைய 13.8 வினாடிகள் எடுத்துக்கொள்ளும். மேலும், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வெளிவந்த சபாரி ஸ்டோர்ம் ஃபேஸ்லிப்ட் மாடலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அதிக நாட்கள் நீடித்து உழைக்கும், இலகுவாக செல்ஃப்-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய கிளட்ச்சும், இந்த மேம்படுத்தப்பட்ட சபாரி ஸ்டோர்ம் மாடலில் பொருத்தப்பட்டு வரும் என்று தற்போது வந்துள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.  

புகைப்பட ஆதாரம்: Teamhbp

இதையும் படியுங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Tata Safar ஐ Storme

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ஹூண்டாய் கிரெட்டா ev
    ஹூண்டாய் கிரெட்டா ev
    Rs.20 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.25 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் டஸ்டர் 2025
    ரெனால்ட் டஸ்டர் 2025
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜூன, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience