சோதனையின் போது படம் பிடிக்கப்பட்டுள்ள Tata Safari EV, 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
டாடா சஃபாரி EV சுமார் 500 கி.மீ தூரம் வரை ரேஞ்ச் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டாடா சஃபாரி EV புதிய Acti.EV கட்டமைப்பு தளத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். இது ஏற்கனெவே ஹாரியர் EV -யில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
-
EV காருக்கான குறிப்பிட்ட மாற்றங்களுடன் டீசல்-பவர்டு சஃபாரி போன்ற அதே வடிவமைப்பில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
12.3-இன்ச் டச் ஸ்கிரீன், 10.25-இன்ச் டிஜிட்டல் டிரைவரின் டிஸ்ப்ளே மற்றும் வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள் போன்ற அதே வசதிகளையும் பெற வாய்ப்புள்ளது.
-
பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
இந்த கார் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ரூ. 32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாடா எஸ்யூவி -யின் முழுமையான வரிசையும் எலக்ட்ரிக் கார்களாக மாற்றமடையும் என தெரிகின்றது. அந்த வரிசையில் சஃபாரி EV மற்றும் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட மூன்று வரிசை பதிப்பு ஹாரியர் இவி ஆகியவையும் இணையவுள்ளன. சமீபத்தில் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்த சஃபாரி EV -யின் சோதனைக் காரை சாலையில் பார்க்க முடிந்தது . சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பன்ச் EV போலவே டாடா சஃபாரியின் மின்சார பதிப்பும் டாடாவின் புதிய Acti.EV தளத்தை அடிப்படையாகக் கொண்டது. புதிய ஸ்பை ஷாட்களில் நாம் கவனித்த விஷயங்கள் இங்கே.
சோதனை காரின் உருவம் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்தாலும் சஃபாரி EV அதன் வடிவமைப்பை ICE (இன்டர்னல் கம்பஸ்டன் இன்ஜின் ) உடன் பகிர்ந்து கொள்ளும் என்பதை நாம் இன்னும் கண்டுபிடிக்க முடியும். முன்பக்க கிரில், கனெக்டட் LED DRL -கள் மற்றும் ஹெட்லைட் ஹவுசிங் போன்ற விவரங்கள் சஃபாரியின் வழக்கமான பதிப்பைப் போலவே இருக்கும். அலாய் வீல்கள் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டதை போல தோன்றினாலும் அவை சஃபாரியின் டீசலில் பவர்டு பதிப்பில் உள்ள அதே 19-இன்ச் அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்புறத்திலிருந்தும் சஃபாரி EV அதே கனெக்டட் LED டெயில்லைட்களை கொண்டுள்ளது.
மேலும் பார்க்க: இந்த விரிவான கேலரி மூலமாக ஹூண்டாய் கிரெட்டா N லைன் N8 வேரியன்ட்டின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்
இன்ட்டீரியரில் உள்ள அப்டேட்கள்
டாடா சஃபாரி EV -ன் உட்புறத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இது அதன் ICE பதிப்பைப் போலவே இருக்கும் என தெரிகிறது. அதே போன்ற டாஷ்போர்டு அமைப்பு மற்றும் 4-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இல்லுமினேட்டட் ‘டாடா' லோகோ ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கலாம்.. சஃபாரி EV -யில் 12.3-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவருக்கான 10.25-இன்ச் டிஜிட்டல் டிஸ்ப்ளே, டூயல்-ஜோன் ஏசி, வென்டிலேட்டட் முன் மற்றும் பின் இருக்கைகள் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆகியவற்றுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பாதுகாப்பு வசதிகளில் 7 ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர் கொண்ட 360 டிகிரி கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை கொடுக்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் காரின் ரேஞ்ச்
சஃபாரி EV -க்கான பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களை டாடா இன்னும் வெளியிடவில்லை. ஆனால் இது சுமார் 500 கி.மீ ரேஞ்சை வழங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். டாடா சஃபாரியின் எலக்ட்ரிக் எடிஷன் டாடாவின் புதிய Acti.EV தளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஹாரியர் EV ஆனது ஆல்-வீல்-டிரைவ் ஆப்ஷனை கொண்டிருப்பதால், சஃபாரி EV காரிலும் அந்த வசதி வழங்கப்படலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
டாடா சஃபாரி EV -யின் ஆரம்ப விலை ரூ.32 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக இருக்கலாம். இது 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம். சஃபாரி EV கார் ஆனது MG ZS EV, ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக், BYD அட்டோ 3, மற்றும் வரவிருக்கும் மாருதி eVX ஆகியவற்றுக்கு ஒரு பெரிய மாற்றாக இருக்கும்
மேலும் படிக்க: டாடா சஃபாரி டீசல்