டாடா நெக்ஸான்: ஒரு முழுமையான கண்ணோட்டம்

published on பிப்ரவரி 10, 2016 12:38 pm by raunak for டாடா நிக்சன் 2017-2020

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

நெக்ஸான், சப் – 4M SUV பிரிவில் மிகவும் கவர்ச்சிகரமான வாகனமாகத் திகழ்கிறது!

ஒரு சில வாகனங்கள் மட்டுமே கான்செப்ட் மாடலில் உள்ளது போலவே உற்பத்தி செய்யப்பட்டு வெளிவரும். அதற்கு உதாரணமாக, டாடா நெக்ஸான் காரைக் குறிப்பிடலாம்! 2014 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்த கான்செப்ட் காரின் கார்பன் காப்பி போல, அப்படியே உருவாக்கப்பட்டுள்ள நெக்ஸான் கார், தற்போது உற்பத்திக்குத் தயார் நிலையில் உள்ளது. நெக்ஸானின் தோற்றம் மட்டுமல்ல, இதன் கலர் ஆப்ஷன்களும் சிறிதும் மாற்றமில்லாமல் அப்படியே உள்ளது ஆச்சர்யத்தைத் தருகிறது. 2016 –ஆம் ஆண்டின் இறுதியில் நெக்ஸான் சந்தையில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. இந்த கார்  பற்றிய அனைத்து விவரங்களும் முழுமையாக வெளிவந்துவிட்டதை வைத்துப் பார்க்கும் போது, நெக்ஸான் அறிமுகமாகவுடன், இதன் பிரிவில் கடுமையான போட்டி ஆரம்பிக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம், 

வடிவமைப்பு

கான்செப்ட் மாடலில் எந்த வித மாற்றமும் இல்லாமல், டாடாவின் வடிவமைப்பு தத்துவத்தின் அடிப்படையிலேயே இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. நெக்ஸானின் வெளிப்புறம் பல்வேறு மேற்பரப்புகளினால் உருவாக்கப்பட்டுள்ளதால், இதன் தோற்றம்,  உண்மையான அளவை விட சற்றே பெரியதாகவும் புடைப்பானதாகவும் தெரிகிறது. செராமிக்கினால் ஆன வெள்ளை நிற பட்டை இதன் வெயிஸ்ட் லைன் முழுவதும் சுற்றி வருகிறது. இதன் கூபே போன்ற விதானம் மிதப்பது போல ஃபிலோடிங்க் அமைப்பில் இருப்பது, காரின் அழகிற்கு மேலும் மெருகூட்டுகிறது. நெக்ஸான் மாடல் உற்பத்தி செய்யப்படும் போதும், இதே போன்று மாறுபட்ட வண்ணத்திலேயே இதன் மேல் விதானம் அமைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 


டாடாவின் புதிய ஜிகா போலவே, நெக்ஸானின் புதிய கிரில், தேன்கூடு போன்ற வடிவத்துடன் பியானோ கருப்பு வண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புற ஹெட் லைட்கள், பகல் நேரத்திலும் மிளிரும் LED -யுடன் வருகின்றன. மேலும், இதன் அலாய் சக்கரங்கள் டைமண்ட் கட் வடிவம் பெற்று, 215/60 க்ராஸ் செக்சன் R16 டயர் பொருத்தப்பட்டு வருகின்றன. பின்புற தோற்றத்தைப் பற்றி பேசுகையில், வெள்ளை நிற செராமிக், ‘X’ வடிவத்தில் டெய்ல் லாம்ப்களைச் சுற்றி இரு புறமும் உள்ளதை நாம் கட்டாயம் குறிப்பிட வேண்டும். பின்புற பம்பர் இரண்டு வித வண்ணங்களிலும், அதன் மையப் பகுதி கடினமான பொருள் கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளது.  

உட்புறத் தோற்றம்


டாடா நிறுவனம், நெக்ஸானின் வெளிபுறத்திற்கு இணையாக உட்புறத்தையும் சிறப்பாக உருவாக்கியுள்ளது. பெரிய முயற்சி எடுத்து இதன் உட்புறத்தை அலங்கரிக்கவில்லை என்றாலும், அனைவரையும் கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜிகா மற்றும் கிட் 5 மாடல்களில் உள்ளது போலவே ஸ்டியரிங் வீலுடன் இணைந்து இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர்  வருகிறது. கருப்பு மற்றும் க்ரே நிறங்களில் வேலைப்பாடு செய்யப்பட்ட டேஷ்போர்டில், வித்தியாசம் தெரிவதற்காக, ஒளிரும் க்ரே நிறத்தில் ஒரு பட்டை இரண்டிற்கும் நடுவில் இணைக்கப்பட்டு அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிட்டி, ஸ்போர்ட், எக்கோ ஆகிய மாடல்களில் உள்ளதைப் போலவே, இதன் சென்ட்ரல் டனலில் இடம் பெற்றுள்ள ரவுண்ட் டயல், டிரைவிங் மோடுகளை மாற்றப் பயன்படுகிறது. உட்புற அமைப்பில், மிகவும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது என்னவென்றால், டேஷ்போர்டின் மேலே நேர்த்தியாகப் பொருத்தப்பட்டுள்ள டாடாவின் கனெக்ட்நெக்ஸ்ட் கருவிகளில் உள்ள 6 – அங்குலத்திற்கும் அதிகமான அளவில் உள்ள டச் ஸ்கிரீன் ஆகும். இது பார்ப்பதற்க்கு அழகாக கண்ணைக் கவரும் விதத்தில் உள்ளது. டேஷ்போர்டு சற்றே இறக்கமாக பொருத்தப்பட்டு இருப்பதால், முன்புறம் உள்ள சாலையை முழுமையாகப் பார்த்து ஓட்ட முடியும். 


இஞ்ஜின்கள்


டாடா இதுவரை, நெக்ஸானின் இஞ்ஜின் பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. எனினும், ரெவொடோர்க் வரிசையில் இரண்டாவதாக இணையவுள்ள புத்தம் புதிய 1.5 லிட்டர் டீசல் இஞ்ஜின் இந்தக் காரை இயக்கவுள்ளது என்னும் விவரம், சமீபத்திய வதந்திகள் மூலம் அறியப்படுகிறது. ஜிகாவில் முதல் முறையாக பொருத்தப்பட்ட 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் வகை இஞ்ஜின், நெக்ஸான் மாடலிலும் பொருத்தப்படும். இரண்டு வகை இஞ்ஜின்களுமே 100 bhp என்ற அளவு சக்திக்கும் அதிகமாக உற்பத்தி செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கண்காட்சியில் இடம்பெற்ற நெக்ஸான் காரில், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருந்தது. எனினும், இந்த இஞ்ஜின் வரிசையில் AMT ஆப்ஷன்களும் இணைந்து வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இதையும் படிக்கவும் டாடா ஹெக்ஸா கேலரி: இந்த சகலகலா வல்லவனை பாருங்கள்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது டாடா நிக்சன் 2017-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience