கச்சிதமான SUV-யான டாடா நெக்ஸான், முதல் முறையாக வேவுப் பார்க்கப்பட்டது
published on டிசம்பர் 08, 2015 05:44 pm by raunak for டாடா நிக்சன் 2017-2020
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
நடக்கவிருக்கும் 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், இதை புதிய பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன், டாடா நிறுவனம் அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2014 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் ஒரு தொழில்நுட்ப பதிப்பாக வெளியிடப்பட்ட டாடா நெக்ஸான், முதல் முறையாக வேவுப் பார்க்கப்பட்டுள்ளது. முதன் முதலாக வெளியிடப்படும் தனது கச்சிதமான கிராஸ்ஓவர் / SUV–யை, டாடா நிறுவனம் சாலையில் சோதிக்க ஆரம்பித்துள்ளது. ஃபோர்டு ஈகோஸ்போர்ட், மஹிந்திரா TUV3OO மற்றும் அடுத்து வரவுள்ள மாருதி சுசுகியின் கச்சிதமான SUV ஆகியவை உடன், இந்த வாகனம் போட்டியிட உள்ளது. அடுத்து நடக்கவுள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனம் மூலம் இந்த வாகனம் காட்சிக்கு வைக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், இதன் அறிமுகம் வரும் 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடைபெறலாம். இதன் அதிகாரபூர்வமான பெயர் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியாததால், அதற்கான நேரம் வரும் வரை இதை நெக்ஸான் என்றே அழைப்போம்!
இந்த சோதனை வாகனம் முழுவதுமாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்டாலும், நெக்ஸானின் தொழில்நுட்பம் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸீகா ஆகியவற்றின் பெரும்பாலான வடிவமைப்பு சாயலை இதில் காண முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸீகா மற்றும் நெக்ஸான் ஆகியவற்றில், டாடாவின் டிசைன்நெக்ஸ்ட் வடிவமைப்பு தத்துவத்தை கணிசமான அளவில் காண முடிவதால், இது இனிவரும் தயாரிப்புகளிலும் தொடரலாம் என்று தெரிகிறது.
இந்த தயாரிப்பு மாதிரி பதிப்பு, தொழில்நுட்ப பதிப்பின் நிழலை கொண்டுள்ளதால், 4 மீட்டருக்கு உட்பட்ட (சப்-4m) SUV-களின் பிரிவில், இது ஒரு சிறப்பான தோற்றம் கொண்டதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் அந்நிறுவனத்தின் சமீபகால அறிமுகங்களான செஸ்ட் மற்றும் ஸீகாவில் உள்ள பன்முக செயல்பாட்டு (மல்டி-பங்ஷனல்) ஸ்டீயரிங் வீல், கனெக்ட்நெக்ஸ்ட் டச்ஸ்கீரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் ஆகியவற்றை நெக்ஸானின் கேபின் பகிர்ந்துள்ளது.
என்ஜின் தேர்வுகளை பொறுத்த வரை, ஸீகாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு டர்போசார்ஜ்டு பதிப்பான இயற்கையை சார்ந்த 1.2-லிட்டர் முழு அலுமினியம் பெட்ரோல் மோட்டார் மற்றும் ரிவோடார்க் டீசல் என்ஜின்களின் குடும்பத்தை சேர்ந்த ஒரு புதிய 1.5-லிட்டர் டீசல், அதாவது ஸீகாவில் அறிமுகம் செய்யப்பட்ட அதே 1.05-லிட்டர் டீசல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் செஸ்ட் மற்றும் போல்ட் ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள 1.2-லிட்டர் ரிவோட்ரான் மோட்டாரை விட, இந்த மோட்டார் அதிக ஆற்றல் கொண்டதாக உள்ளது. இந்த டீசல் என்ஜின் மூலம் ரெனால்ட் டஸ்டர் அளிக்கும் 110PS-யை போல, 100 bhp என்ற அதிக ஆற்றலையும், 200 Nm-க்கும் கூடுதலான முடுக்குவிசையையும் பெற முடிகிறது. டிரான்ஸ்மிஷன் தேர்வுகளை பொறுத்த வரை, டீசலுக்கு 6-ஸ்பீடு மேனுவல் அளிக்கப்பட, பெட்ரோலுக்கு ஒரு 5-ஸ்பீடு மேனுவல் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் டாடா நிறுவனம் இதற்கு AMT தேர்வையும் அளிக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த இணைதளத்தோடு இணைந்திருங்கள்.
இதையும் படியுங்கள்
0 out of 0 found this helpful